தமிழ்நாடு முழுவதும் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி.. அன்னாபிஷேகம்
கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது
ஐப்பசி பெளணர்மியில் நடந்த அன்னாபிஷேகம்
உணவின் பெருமையை வலியுறுத்தும் நிகழ்வு
உணவின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வு
உணவை வீணாக்காதீர்
உணவை வீணாக்கக் கூடாது என்பதைத்தான், அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் எடுத்துச் சொல்கிறது. “ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன்,” என்கிறது அந்த மந்திரம்.
Also Read:உணவு, உடை இருப்பிடம் மட்டுமல்ல அவரவரது தாய் மொழியும் அவரவருக்கு அடிப்படை உரிமையே...
கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உணவு ஐம்பூதங்களினால் உருவாகிறது
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகை காத்தருளும் சிவபெருமானை ஐப்பசி பெளணர்மி அன்று அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
அன்னத்தை சமைப்பதிலேயே ஐம்பூதங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது.
அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேகம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் நேற்றைய தினம் சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு செய்யப்பட்டது. சிவனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. . கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
Also Read: கருப்பை நீர்க்கட்டிகளை அகற்ற எடையை குறைப்பது முக்கியம்...
சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல திராளன பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அன்னாபிஷேகத்தை கண்டு களித்து பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில்
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 20/10/2021 புதன்கிழமையன்று திருவண்ணாமலை ஸ்ரீரமணாச்ரமத்தில்.அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ரமணாஸ்ரமத்தில் உள்ள பகவான் சந்நிதி, தாயார் சந்நிதி மற்றும் சின்ன சுவாமிகள் சந்நிதிகளில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல், தூத்துக்குடியில்
திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சிந்தை மகிழும் சிவபுரத்தில் ஐப்பசி பௌர்ணமி வைபவம் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ வெற்றி வாராஹி முத்தங்கி சேவை, அருள்மிகு ஸ்ரீ ரிணவிமோசகர் அன்னாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இதே போல தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தின் சிறப்பு என்ன?
ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.
Also Read: சிறுதானியங்களை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு மேம்படுகிறது
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி பௌர்ணமியில் விரதமிருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும்.
-இறையருள் "God's pet Child" ரமண பாரதி
#Annabishekam #AnnabishekamshivaTemples #AnnabishekamAtPragadeeswarTemple
Comments