உணவு, உடை இருப்பிடம் மட்டுமல்ல அவரவரது தாய் மொழியும் அவரவருக்கு அடிப்படை உரிமையே...


உணவு செயலி ஊழியரின் மொழி வெறி 

இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் 

ஜொமோட்டோ அதிகாரியின் விளக்கம் 

இந்தி வெறியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் 

உணவு போல மொழியும் அடிப்படை உரிமையே 

விகாஸ் என்பவர், தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவ தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்து ஜொமோட்டோ ஊழியரை பணிநீக்கம் செய்வது வரை இட்டுச் சென்று மீண்டும் ஒரு மொழி விவகார சர்ச்சைக்கும் வித்திட்டிருக்கின்றது. 
 

வாடிக்கையாளரிடம் மொழி வெறியை காட்டிய ஊழியர் 

 

விகாஸ் தமது டிவிட்டர் பதிவில், தாம் ஜொமேட்டோ செயலி மூலமாக வாங்கிய உணவில், குறிப்பிட்ட உணவு வராதது குறித்து, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார். வாடிக்கையாளர் சேவை  மையத்தில் இருந்த பெண் அலுவலர்  "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும் தெரிவித்திருந்தார். 

Also Read: கருப்பை நீர்க்கட்டிகளை அகற்ற எடையை குறைப்பது முக்கியம்...

தமக்கும் அந்த வாடிக்கையாளர் சேவை அலுவலருக்கும் நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டையும் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலளிக்கும்படி ஜொமேட்டோவை டேக் செய்து விளக்கம் கோரியிருந்தார்.

ஜொமோட்டோவுக்கு வலுத்த எதிர்ப்பு

 

அதிகரித்த ஆதரவு 

விகாஸின் பதிவு வைரலானதையடுத்து, அவருக்கு ஆதரவாக  திமுக மக்களவை எம்பி கனிமொழி, இன்னொரு திமுக எம்.பி.,, செந்தில்குமார், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆகியோர் கருத்திட்டனர். இதனால் இந்த விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது. 

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்தோரும், உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களும் ஜொமேட்டோ நிறுவனத்திற்குக் கண்டனம் தெரிவித்து பதிவுகளை போட ஆரம்பித்தனர். #RejectZomato, #stopHindiImposition  போன்ற மொழி எதிர்ப்பு டேக்குகள் வைரல் ஆகின. 

 இதனால் அதிர்ச்சியடைந்த ஜொமேட்டோ நிர்வாகம், "இது ஏற்க முடியாதது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதனைத் தீர்க்கப் பார்க்கிறோம் என்று அதிரடியாக் கூறியிருந்தது. அதன்பின்னர், சம்பந்தபட்ட ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் விகாஸ் பதிவு செய்த இன்னொரு டிவிட்டரில், "இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்ததுபோக, மீண்டும் அந்த ஊழியரை பணியில் சேர்க்க வேண்டுமெனக் கோருகிறேன். தமிழர்களின் மரபு சுயமரியாதை யே தவிர பழி வாங்குதல் அல்ல" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: சன்ஸ்கிரீனில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு நச்சாக மாறும் ஆபத்து...

இதன் தொடர்ச்சியாக  ஜொமோட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவாகத் தெரிவித்துள்ளார்.

அறியாமல் செய்த தவறா?

"ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தில் ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசியப் பிரச்னையாகியிருக்கிறது. நமது நாட்டில் சகிப்புத்தன்மையின் அளவு இப்போதிருப்பதைவிட இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். இதில் யார் மீது குற்றம் சொல்வது?

அந்த வகையில், அந்தப்மீண்டும் பணிக்குச் சேர்த்துக்கொள்கிறோம். இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் அந்தப் பெண்ணை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவர் இதனை எளிதில் கற்றுக்கொண்டு முனஅனோக்கிச் செல்ல முடியும் என்று உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டிருக்கிறார். 

 தொழிலில் அல்லது வணிகத்தில் நாம் யாரை சார்ந்து சேவை அளிக்கின்றோமோ அல்லது யாருக்கு நமது தயாரிப்பு பொருட்கள் பலன் அளிக்குமோ அவர்கள் நலனில் முழு அக்கறையோடு தொழில் நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே தொழிலில் வெற்றி என்பது வாய்க்கப்பெறும். 

ஜொமோட்டோ நிறுவனத்துடனான இந்த மொழி சர்ச்சையும் இத்தகையதுதான். ஜொமோட்டோ சர்வதேச அளவில் வணிகம் செய்யும் நிறுவனமாக இருக்கலாம். அதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நகரில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருக்கும் ஒரு தமிழ் தெரிந்த நபர், தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என்று வாடிக்கையாளர்களிடம் சொல்வதை அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது. 

ஜொமோட்டோ ஊழியரால் நிறுவனந்துக்கு தலை குனிவு

 

அதே நிலைதான் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டில் சேவைப்பிரிவில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணிக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி பணிக்கு வைத்திருந்தால் இந்த பிரச்னையை தவிர்த்திருக்க முடியும். 

மொழி புரியாத நிலையில் அந்த வாடிக்கையாளர் சேவை பெண் அலுவலர், வாடிக்கையாளரிடம் தனக்கு தமிழ் தெரியாது, தமிழ் அறிந்த சேவை அலுவலருக்கு மாற்றுகின்றேன். இப்போது தமிழ் அறிந்தவர்கள் இல்லை. நாளை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். 

தேவையற்ற மொழி வெறி 

ஆனால், இந்தி மொழி தேசிய மொழி என, தாம் பார்க்கும் வேலைக்கும், கொடுக்கும் சேவைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத மொழி பிரச்னையை உள்ளுக்குள் கொண்டு வந்தது ஜொமோட்டோ ஊழியர்தான். ஜொமோட்டோ ஊழியர் ஒரு மொழி வெறியராகத்தான் இருந்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது. 

Also Read: பூண்டு தேநீர் எனும் ஆரோக்கிய பானம்

சகிப்புத்தன்மை கொண்ட நபராக இருந்திருந்தால், தமக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டு, வாடிக்கையாளர்களுக்கு தமிழ் தெரிந்த அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பார். அவரின் தவறான செயலால் இப்போது ஒரு நிறுவனமே தலைகுனிந்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. 

ஒரு பெருநிறுவனத்தில் பணியாற்றும்போது தமது மொழிக்கொள்கையை திணிப்பது, தமது மொழி வெறியை வெளிப்படுத்துவது என்பது தேவையற்றது. இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். தமக்கு ஒரு மொழி தெரியவில்லை என்பதற்காக தாம் கற்ற மொழிதான் சிறந்தது என்ற மனப்பான்மையும் நல்லதல்ல. உணவு, உடை, இருப்பிடம் மட்டுமல்ல ஒருவரின் மொழியும் அவரது அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான். அதில் தேவையின்றி இன்னொருவர் தலையிடுவது, இன்னொரு மொழியை திணிக்க முயல்வது ஆபத்தாக முடியும். இந்த சம்பவம் அதைத்தான் காட்டுகிறது. 

-ஆகேறன்

  #FoodDelivery   #FoodDeliveryApp  #Swiggy #Zomato    #RejectZomato, #stopHindiImposition #Tamil  #ZomatoLanguageIssue #Vikas


Comments


View More

Leave a Comments