சன்ஸ்கிரீனில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு நச்சாக மாறும் ஆபத்து...
சன்ஸ்கிரீனில் என்னென்ன உள்ளன
சன்ஸ்கிரீனில் உள்ள துத்தகநாக ஆக்ஸைடு
நச்சாக மாறுமா துத்தநாக ஆக்ஸைடு
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
அதீத சூரிய ஒளியில் இருந்து உங்கள் தோலை பராமரிக்க சன்ஸ்கிரீன் களிம்புகள் மிக முக்கியமான தோல் பராமரிப்பு பொருளாக இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, தோல் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றும் தோல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் சன்ஸ்கிரீன் உதவுவதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நச்சாக மாறும் மூலப்பொருள்
அனைத்து சன்ஸ்கிரீன்களும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சன்ஸ்கிரீனை முகத்தில் அல்லது தோலில் பூசிய இரண்டு மணி நேரத்துக்குள் அந்த களிம்பில் உள்ள ஒரு மூலப்பொருளானது நச்சுத்தன்மையாக மாறும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் புதிய ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் நாம் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுகிறது. உடல் பராமரிப்பு பொருட்கள் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து தெளிவுபடுத்தும் ஃபோட்டோ கெமிக்கல் மற்றும் ஃபோட்டோபயாலஜிகல் சயின்சஸ் (Photochemical and Photobiological Sciences )இதழில் இது குறித்து அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது
அந்த பொருட்களுடன் வணிக ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக கலவைகளையும் குறைந்த அளவு துத்தநாக ஆக்ஸைடையும் சேர்த்தனர். அவர்கள் உருவாக்கிய சேர்மானத்தை இரண்டு மணிநேரங்களுக்குள் புற ஊதா கதிர்வீச்சுக்கு உட்படுத்தினர்.
அதே நேரத்தில் துத்தநாக ஆக்சைடு சேர்க்கப்பட்ட சேர்மானமானம் கொண்ட சன்ஸ்கிரீன் நச்சுத்தன்மையாக மாறும் என்பது தெரியவந்துள்ளது. துத்தநாக ஆக்ஸைடு கொண்ட சன்ஸ்கிரீன் அதன் செயல்திறனை இழந்து தீங்கு விளைவிக்கும் என்று ஓரிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கூறுகிறது.
நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய ஜீப்ராஃபிஷ் என்ற மாதிரி மீன் பயன்படுத்தப்பட்டது. இது மனிதர்களைப் போன்ற மூலக்கூறு, மரபணு மற்றும் செல்லுலார் ஒற்றுமையைக் கொண்ட மீன் வகையாகும். இதற்கு முன்பு ஜீப்ராஃபிஷ் மீன் வாயிலாக மேற்கொண்ட பல ஆராய்ச்சிகள் மனிதர்கள் உபயோகப்படுத்தும்பொருட்களுடன் ஒத்துப்போயிருக்கின்றன.
Also Read: பூண்டு தேநீர் எனும் ஆரோக்கிய பானம்
ஆராய்ச்சி குறித்து பேசிய புகழ்பெற்ற பேராசிரியரும் நச்சுயியலில் சர்வதேச நிபுணருமான டாங்குவே, வணிக ரீதியாக கிடைக்கும் சிறிய மூலக்கூறு அடிப்படையிலான ஃபார்முலாக்கள் நாங்கள் ஆய்வு செய்த ஃபார்முலாக்களுக்கு அடிப்படையானவை. ஒளியின் செயலால் சிதைவடைவதை குறைக்க,வெவ்வேறு மூலப்பொருள் விகிதங்களை இணைக்கமுடியும். துத்தநாக ஆக்சைடு துகள்களை நானோ துகள்களாகவோஅல்லது பெரிய நுண் துகள்களாகவோ அறிமுகப்படுத்தியபோது சூரிய ஒளி மற்றும் பிற ஒளிகளால் தோல் மற்றும் கண்களின் மென்தன்மை பாதிக்கப்படலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
#DangersOfSunscreens #Sunscreens #HealthySunscreens #SunscreenMayTurnToxic #ToxicSunscreens
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments