டெங்கு காய்சலுக்கு தீர்வு தரும் கிவி பழம்...


கிவி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் 

எண்ணற்ற சத்துகள் கொண்ட கிவி 

டெங்கு காய்ச்சலை குணப்படுதும் கிவி 

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையின் கொடையான காய்கறிகள், பழங்களில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. நாம் இப்போது தினந்தோறும் உண்ணப்பழகி விட்ட துரித உணவுகள், பர்க்கர், பீட்சா போன்ற நொற்றுக்கு தீனிகள் போன்றவற்றின் விலையை விட மிகவும் மலிவாக உள்ள காய்கறிகள் பழங்களை வாங்கி உண்ணும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். 

குறிப்பாக இப்போது எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பலருக்கு வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக நம் உடலில் ரத்த த்தில் உள்ள தட்டணுக்கள் எண்ணிக்கை மளமளவென குறைந்து நம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கின்றன

அதிக சத்துகள் கொண்ட கிவி 

நம் உடலில் ரத்தத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கிவி பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். கிவி பழம் நமது நாட்டில் விளையவில்லை என்றாலும், ஏராளமான பழங்கங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. முதலில் கிவி பழத்தில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள், 

அதிக சத்துகள் கொண்ட கிவி

கிவி பழத்தில் போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்ற எண்ணற்ற சத்துகள் உள்ளன., 

ஒமேகா கொழுப்பு அமிலம் 

இந்த சத்துக்கள் அனைத்துமே நம் உடலின் இயக்கத்துக்கு முக்கியமானவைதான்.  கிவி பழத்தில் நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை உள்ளன. மீன் போன்ற கடல் உணவுகளில் மட்டுமே அதிகமாக காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள்  கிவி பழத்தில் ஏராளமாக உள்ளன. 

Also Read: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

காரம் அதிகம் வேண்டாம்

ரத்த தட்டணுக்கள் குறைஞ்சி போனதா சொல்லிட்டு ரெண்டு, மூணு பேர் போன் பண்ணுனாங்க. அதுவும் அவங்க எல்லோரும் சின்னப் பிள்ளைங்க.  ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்ன நண்பர் அவரோட பெண் குழந்தைக்கு பப்பாளி இலைச்சாறையும், தேனையும் கலந்து கொடுத்திருக்கார். அதோட மாதுளம்பழச்சாறும் கொடுத்திருக்கார். 

காய்ச்சல் குறைஞ்சிருக்கிறதா சொன்னவர், பாப்பா வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்குறா... என்ன தரலாம்னு கேட்டார். கொஞ்சம் கட்டுப்படுத்திக்கச் சொல்லுங்க. புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அரைச்ச துவையல் வேணுன்னா அரைச்சி கொடுங்க. காரம் அதிகம் சேர்க்க வேண்டாம்னு சொன்னேன்.

டெங்குவை தடுக்கும் கிவி பழம் 

டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிட்டு வர்றதால இந்த நிலைமை. அதனால கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். ஏற்கெனவே இயற்கை விரும்பியான நண்பர் வானவனோட பொண்ணுக்கு டெங்கு வந்து ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் கொடுக்கும்போது பப்பாளி இலைச்சாறு கொடுத்தும் ரத்த அணுக்கள் கூடாததால தெரிஞ்சவங்க ஒருத்தர் சொன்னமாதிரி கிவி பழம் கொடுத்ததுல நல்ல முன்னேற்றம்னு சொன்னார்.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் டெங்கு

எங்க ஏரியாவுல உள்ள ஒரு தள்ளுவண்டி டிபன் கடைக்கார அம்மா, டெங்கு காய்ச்சலுக்கு கிவி பழத்தோட பேர் தெரியாதாதால, `அண்ணன் எதோ ஒரு பழம் கொடுத்தா டெங்கு காய்ச்சல் சரியாகும்ன்னு சொன்னாங்க. அது என்ன பழம்னு கேட்டாங்க. அந்த அளவுக்கு கிவி பழம் சாதாரண மக்கள் மத்தியிலயும் பேர் வாங்கி இருக்கு. இது வெளிநாட்டு பழமா இருந்தாலும் இந்தப் பழமும் ரத்த தட்டணுக்கள் உற்பத்தியாக உதவும்கிறது உறுதியாயிருக்கு. உடல்நிலைக்கு நல்லது செஞ்சா எந்த ஊர் பழமா இருந்தாலும் அதை சாப்பிடுறதுல தப்பில்லை.

புதினா ஜூஸ்

இந்த மாதிரி நேரங்கள்ல சிலபேருக்கு வாந்தி வர்றதா சொன்னாங்க. அப்பிடி வந்தா புதினா ஜூஸ் குடிக்கலாம். ராத்திரி நேரமா இருந்தா கைப்பிடி புதினா இலையை எண்ணெய் விடாம வதக்கி தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிக்கலாம். பகல்வேளையா இருந்தா புதினா ஜூஸ் குடிக்கலாம். அதாவது கைப்பிடி புதினா இலையோட சின்ன துண்டு இஞ்சி சேர்த்து அரைச்சி தண்ணிவிட்டு வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து குடிக்கலாம். இனிப்புக்கு தேன் இல்லன்ன சர்க்கரை சேர்த்துக்கிடலாம்.

மிளகு கசாயம் நல்லது 

பொதுவா எந்த மாதிரி காய்ச்சலா இருந்தாலும் நான் சொல்றது மிளகு கசாயம். அதாவது 10 மிளகை எண்ணெய் விடாம வறுத்து தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி குடிக்கலாம். மேல ஒரு நண்பர் தன்னோட பொண்ணுக்கு வந்த காய்ச்சலுக்கு மிளகு கசாயம்தான் கொடுக்கச்சொன்னேன்.

Also Read: தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்

கிவி பழம் எங்கு கிடைக்கும்?

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள  பழ வணிகர்களிடமும் கிவி பழம் கிடைக்கிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழமுதிர்சோலை என்ற காய்கறி, பழங்கள் விற்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இணையதளத்தில் பிக்பாஸ்கெட் போன்ற இ-வணிக தளங்களிலும் கிடைக்கிறது. 

-எம்.மரியபெல்சின், 

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#Dengue Fever  #CureForDengue   #KiwiFruitForDengue  #KiwiFruitBenefits 


Comments


View More

Leave a Comments