தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்


நம்மில் பலருக்கு, சூடான தேநீர் கோப்பையின்றி ஒரு நல்ல நாள் ஆரம்பம் முழுமையடையாது. இது நாடுகள், மொழிகள் ஆகிய எல்லையைத் தாண்டி விரும்பப்படும் சர்வதேச பானமாக இருக்கிறது. மக்களை அடிக்கடி ஒருங்கிணைக்கும் பானமாகவும் திகழ்கிறது.  தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகளை சொல்லப் போகிறோம், இது நிச்சயமாக சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் தேநீருடனான பிணைப்பை வலுப்படுத்தும்.

பரவலாக உட்கொள்ளும் பானம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தேயிலை சங்கத்தின் கூற்றுப்படி, தண்ணீருக்கு அடுத்ததாக, தேயிலை அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானமாக இருக்கிறது என தெரியவந்துள்ளது.. ஆய்வுகளின் படி, தேநீர் ஒரு ஆரோக்கியமான பானம், ஏனெனில் இது இருதய நோய்கள் (சிவிடி), சில வகையான புற்றுநோய், 2ஆம் வகை நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. 

 

உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளும் பானம்

 

எத்தனை கப் தேநீர் உட்கொள்ள வேண்டும்

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 2-3 கப் தேநீர் குடிக்கலாம்.  அது நல்ல ஆரோக்கியத்திற்கும் வயதான செயல்முறைக்கும் ஏற்றது. மேலும், ஒருவர் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

இதயத்திற்கு ஆரோக்கியமான பானம்

FDA படி, பிளாக் டீ மற்றும் கிரீன் டீ இதயத்திற்கு ஆரோக்கியமானது. அவை இயற்கையான தாவர கலவைகள் நிறைந்தவை, அவை இதயத்திற்கு ஆரோக்கியமானவை என்று அறியப்படுகின்றன, மேலும் வழக்கமான தேநீர் குடிப்பவர்களுக்கு இதய நோய்களின் விகிதம் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த கலோரி பானம்

தேநீரின் காஃபின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது அதில் மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் சர்க்கரை சுத்தமாக இல்லை என்பதுதெரியவருகிறது.    பாலுடன் 1 கப் பிளாக் டீயில்  3 கலோரிகள் மட்டுமே உள்ளன, அதே நேரத்தில் பால் மற்றும் சர்க்கரையுடன் வழக்கமான கப் தேநீரில் 37 கலோரிகள்  உள்ளன. 

தேநீர் குடிக்க சரியான நேரம் எது?

பலர் படுக்கையில் இருந்து எழுந்ததும் தேநீர் குடிக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கின்றனர்.  வல்லுநர்களோ  காலை உணவுக்கு பின்பே தேநீர் குடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஏனெனில் இது உங்களுக்கு அடுத்த நாளுக்கும் சேர்த்து உற்சாகத்தை அளிக்கிறது. 

தேநீர் குடிக்க சரியான நேரம் எது?

 

காலை வேளையிலும், உணவுக்குப் பிறகும் ஆற்றல் குறைவாக இருக்கும். எனவே காலை உணவுக்குப் பிறகு 20 நிமிடங்களுக்குப் பிறகு தேநீர் குடிக்க சிறந்த நேரம் என்று கருதப்படுகிறது. 

தண்ணீரைப் போல நீர் சத்து கொண்டது

தண்ணீரைப் போல தேநீரில் அதிக நீர் சத்து உள்ளது

தேயிலை பற்றிய மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், இது 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக தண்ணீரைக் கொண்டுள்ளது. தேநீர் குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும் என்பது உண்மையல்ல, 

திராட்சை போல ஆரோக்கியமானது

பலருக்கு வினோதமாகத் தோன்றலாம், ஆனால் தேநீரில் ப்ரோக்கோலி போன்ற ஆரோக்கியமான கலவைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்டிஏ நடத்திய ஒப்பீட்டு ஆய்வில்  1 கப் பிளாக் டீயில்  170 மில்லிகிராம் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அதே நேரத்தில் 1 கப் ப்ரோக்கோலியில் 3 மில்லிகிராம் உள்ளது. 

-ஆகேறன்

#GreenTea  #BlockTea #HealthyTea  #TeaForHealthy  #DrinkTea 


Comments


View More

Leave a Comments