தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

இயற்கைவழி வேளாண்மை பயிற்சி முகாம்

கோவை மாவட்டம் சூலூர்.செஞ்சோலையில்  அக்டோபர் 21 - 31ம் தேதிகளில் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இயற்கைவழி வேளாண்மை, சிலம்ப பயிற்சி ஆகியவை குறித்து பண்ணையில் வாழ்ந்து கற்றுக்கொள்ளலாம்...

இயற்கைவழிவேளாண்மைநேரடிக்_களப்பயிற்சியில் நிரந்தரவேளாண்மை (மேட்டுப்பாத்தி , இருமடிப்பாத்தி , வட்டப்பாத்தி அமைத்தல்), காய்கறி & கீரை சாகுபடி, கால்நடை பராமரிப்பு,இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு ஒருங்கிணைந்த பண்ணையம் சந்தைப்படுத்துதல் என வேளாண் வாழ்வியலின் கூறுகளை அனுபவப்பூர்வமாக வாழ்ந்து கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

Also Read: இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...

நிகழ்ச்சி நிரல்:

காலை: 06.00-06.30 சிலம்ப பயிற்சி

06.30 - 07.30

கால்நடை பராமரிப்பு  07.30 - 09.00

களப்பயிற்சி 09.00 - 10.00

காலை உணவு & ஓய்வு 10.00 - 12.30

சமையல் & பண்ணை பராமரிப்பு பணிகள் 12.30 - 01.30

வகுப்பு & கலந்துரையாடல் 01.30 - 03.30

மதிய உணவு & ஓய்வு 03.30 - 04.30

இயற்கைவழி வேளாண்மை பயிற்சி முகாம்

 

களப்பயிற்சி 04.30 - 06.00

ஆடு , மாடு மேய்ச்சல் 06.00 - 06.30

சிலம்ப பயிற்சி 07.00 

அன்றைய நாள் அனுபவப் பகிர்வு,  இரவு உணவு & ஓய்வு...

பயிற்சிக் கட்டணமாக பயிற்சி பெறுவோரிடம் இருந்து விருப்பக் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்ள பதிவுக்கட்டணம் உண்டு.10 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. முன்பதிவு_அவசியம்:

Also Read: கொரோனா பக்கவிளைவுக்கு தீர்வு தரும் பூனை மீசை மூலிகை

இயற்கை விவசாய உற்பத்திகள் பரிமாற்ற விழா

இயற்கை விவசாயிகளே, ஆர்வலர்களுக்கு வணக்கம். அறிவுத்தோட்டத்தில் விவசாயிகள் சந்திப்பு எனும் 18வது நிகழ்வு அறிவுத்தோட்டம் ,காளாம்பட்டுகிராமம் இலத்தேரி அருகில் , வேலூர்மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இயற்கைவேளாண்மை  - கருத்துக் களஞ்சியம் இயற்கை விவசாய உற்பத்திகள் பரிமாற்ற விழா என்ற தலைப்பிலான இந்த நிகழ்வு வரும் 16ம் தேதி  சனிக்கிழமை  காலை 9.00 மணி முதல் மதியம்1.00 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பு  இந்த மாதம் “இயற்கை விவசாய உற்பத்திகள் பரிமாற்ற விழா”  சிறப்பு நிகழ்வுடன் நடைபெறும். 

திரு பிரதீப் குமார், அணைக்கட்டு அவர்கள் மேட்டுப் பாத்தி அமைக்க களப்பயிற்சி அளிக்கிறார், திரு அ. சீனிவாசன், அசோக்  செடிகள் பண்ணை, அவர்கள் விவசாயிகள் சுமைகளைக் குறைக்கும் சாதனங்கள் மற்றும் தொழில் நுட்ப யுக்திகள் குறித்து உரையாடுகிறார்.  

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

தாங்கள் கொண்டு வருபவைகளை முதலிலேயே தெரிவித்தால் தொகுத்து அறிவிக்க உதவியாக இருக்கும். தேவைப்படுபவர்களும் தங்களுக்கு தேவையானவற்றைத் தெரிவித்தால் உற்பத்திசெய்யும் விவசாயிகளுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.தங்களது பொருட்களின் சிறப்புத்தன்மைகளை கூட்டத்தில் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.   

புதியவர்களுக்கு இயற்கை விவசாயம் அறிமுகம், இயற்கை விவசாயிகள் அனுபவப் பகிர்வும் நடைபெறும். இயற்கை விவசாய ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனை யுக்திகளும் விவாதிக்கப்படும்.

கூட்டம் குறித்த நேரத்தில் துவங்கப்படும். எனவே, சரியாக  காலை   9.00 மணி நேரத்திற்கு அறிவுத்தோட்டம் வந்து விட வேண்டுகிறோம்.மதிய உணவு தோட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று முன்னெச்சரிகையாக முகக்கவசம் அணிந்து வாருங்கள். கூட்டத்தில் கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி, கடைபிடிப்போம். அன்புடன்,கு.செந்தமிழ் செல்வன், (9443032436)  அறிவுத்தோட்டம்,  காளாம்பட்டு

தற்சார்பு வீட்டு தோட்ட பயிற்சி

புதுச்சேரியில் வானகம் மற்றும் உழுது உண் மரபு விதைகள் சேகரிப்புக் குழு இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு தோட்ட பயிற்சி 17.10.2021ம் தேதியன்று நேரம் காலை 8.30  - 4 மணி வரை நடைபெறுகிறது. 

தற்சார்பு வீட்டுத்தோட்டப் பயிற்சி

5 சென்ட் இடத்தில் 100 கும் மேற்பட்ட காய்கறிகள் , கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள்,பழ மரங்கள் போன்றவற்றை எளிமையாக இயற்கை முறையில் வளர்க்கும் நுட்பங்கள்

Also Read: இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)

மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி (15.10.2021 - 17.10.2021) 

வானகத்தில் இயற்கை வழி வேளாண்மை, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பூச்சிக்கட்டுப்பாடு, பண்ணை வலம், உயிர்வேலி, மழைநீர் அறுவடை, நிரந்தர வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம்,  இடுபொருள் செய்முறை பயிற்சி, களப்பயிற்சி, பண்ணை வடிவமைப்பு, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், மரபு விளையாட்டுகள் ஆகியவை இடம்பெறும். 

Also Read: தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்

பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable) தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் முன்பதிவுக்கு: +91 94458 79292

மூன்று நாட்கள் இயற்கை வேளாண் பயிற்சி

குறிப்பு : அரசு அறிவுறுத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது 

பாலித்தின் பைகள், சோப்பு, ஷாம்பு, பேஸ்ட்,,கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

https://vanagam.org

https://vanagam.page.link/app

#AgriEvents #OrganicTraining #NaturalLife 


Comments


View More

Leave a Comments