
இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...
இயற்கை வேளாண் அனுபவம்
இயற்கை முறையில் உளுந்து பயிரிடல் அனுபவம்
உளுந்து வரவும், செலவும் எவ்ளவு?
விவசாயியின் அனுபவ கட்டுரை
ஆரம்ப பணியாக நிலம் சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் சேமிப்பிற்காக வரப்பு கட்டப்பட்டது.. அதன் பின்னர் வயல் முழுவதும் பசுந்தாள் உரப்பயிரான சணப்பு விதைப்பு செய்யப்பட்டு மடக்கி உழவு செய்யப்பட்டது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாய முறையில் உளுந்து பயிரிடப்பட்டது.
Also Read: பச்சை மிளகாய் உண்பதால் இவ்வளவு நன்மைகளா?
இரண்டு ஏக்கர் உளுந்து வம்பன் 8 இரகம் வேளாண்மை துறையிலிருந்து ஆதார விதை (பவுண்டேசன் சீட்) பெற்று பிப்ரவரி 8 ம் தேதி விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்வதற்கு முன்பு ஊட்டமேற்றிய ஆட்டுச்சாணம் தூவி விடப்பட்டது. அதே போல் விதைப்பு செய்த வயலின் நாற்புறமும் பூச்சிகள் தாக்குதல் லிருந்து பாதுகாக்க இயற்கை அரணாக சோளம் விதைப்பு செய்யப்பட்டது.
பயிர் வளர்ச்சி காலங்களில் அசோஸ்பயிரில்லம், பாக்ஸோபாக்டீரியா, ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்கள் ஆட்டுச்சாணத்துடன் கலந்து பயன்படுத்தப்பட்டது. வாரம் ஒருமுறை மீன் அமிலம், இஎம்ஐ கரைசல், வேஸ்டீகம்போசர், கடலை பிண்ணாக்கு ஆகிய பயிர் வளர்ச்சி ஊக்கிகளும்,வேப்பெண்ணெய், அக்னி அஸ்திரம், தேமோர் கரைசல், தயிர் கரைசல் ஆகிய பூச்சி விரட்டிகள் தெளிப்பு மற்றும் பாசனத்தின் மூலம் வழங்கப்பட்டது.
விதைத்த பின்னர் சரியாக 65 நாள் 14.4.21 ல் அறுவடை துவங்கியது..
உற்பத்தி மற்றும் உற்பத்தி செலவு விவரம்..
உழவு (2 முறை) 5410
விதை மற்றும் உயிர் உரம் 2340
ஊட்டமேற்றிய தொழு உரம் மொத்த செலவு(11702÷4=2925) நான்கு போகம் என்ற அடிப்படையில் ஒரு போகம் 2925
மீன் அமிலம் தயாரிப்பு 410
இஎம்ஐ கரைசல் 450
உயிர் உரங்கள் 860
பூச்சி விரட்டிகள் வேப்பெண்ணெய், அக்னி அஸ்திரம்,பவேரியா, தேமோர் கரைசல், தயிர் கரைசல் 870
வரப்பு கட்டியது 2500
களையெடுப்பு இரண்டு முறை 9800
அறுவடை , அடிப்பு மற்றும் சுத்தப்படுத்தும் கூலி 21030
14 முறை மருந்து உயிர் உரம் மற்றும் பூச்சி விரட்டி தெளித்தல் 2100
ஒன்பது முறை தண்ணீர் பாய்ச்சல் 1350
ஆக மொத்தம் செலவு 50045
வரவு 440 கிலோ உளுந்து..
விற்பனை விவரம்
விற்பனை செய்வதற்கு மூன்று கடைகளில் விசாரணை செய்தபோது
கிலோ 80 ரூபாய்க்கு மேல் யாரும் வாங்க தயாரில்லை.. இந்த நிலையில் 50 கிலோ அரைத்து 35 கிலோ பருப்பு விற்பனை செய்யப்பட்டது.. கொரானா காரணமாக அதை தொடர முடியாத நிலையில் பயறு உபயோகம் மற்றும் விதைப்பு செய்வதற்கு விற்பனை செய்யப்பட்டது.
விதை விற்பனை மொத்தமாக கொடுத்தது மூலம் வரவு 20250
விதை சொந்த விற்பனை மூலம் வரவு 18900
நுகர்வோர்க்கு நேரடி விற்பனை மூலம் 13500
29கிலோ சொந்த உபயோகம் ரூபாய் மதிப்பு 2320
440கிலோ மொத்த வரவு 55000
உளுந்து சக்கை விற்பனை வரவு1650
ஆக மொத்தம் இரண்டு ஏக்கரில் வருமானம் 56650
ஆக மொத்தம் செலவு( இரண்டு ஏக்கருக்கு) 50045.
அறுபத்தைந்து நாளில்
நிகர வருமானம் இரண்டு ஏக்கருக்கு 6605
ஒரு ஏக்கருக்கு 3303.
Also Read: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்
கற்றுக் கொண்ட பாடங்கள்
இயற்கை விவசாயத்தை விரும்பிச் செய்யும் போது அதற்கான ஆர்வலர்களை கண்டறிந்து நேரடி விற்பனை செய்ய வேண்டும்... விதைகளை நன்கு சுத்தப்படுத்தி வசம்பு வேப்பிலை புங்கன் இலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும்.. அறுவடை செய்த தானியங்களை கோணிச்சாக்கில் பத்திரப்படுத்தி வைத்தல் வேண்டும்.. தற்போது இரண்டு ஏக்கரில் அறுவடை முடிந்து 300 கிலோ திண்டிவனம் 7 இரகம் எள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தற்சமயம் ஆடிப் பட்டத்தில் ஒரு ஏக்கர் தினை அரை ஏக்கர் வரகு அந்தியேந்தல் 1 இரகம் மற்றும் துவரை விதைப்பு செய்யப்பட்டு உள்ளது. மூன்று ஏக்கரில் பலதான்யம் விதைப்பு செய்யப்பட்டு உள்ளது...
உளுந்து விதைப்பில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்
ஆண்கள் --24
பெண்கள்--186
ஆக மொத்தம் 210..
இறுதியாக தொடர்ந்து இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பது நமது நோக்கம்.. இப்போது தான் மண் புழுக்கள் தோன்ற ஆரம்பித்தது உள்ளது.. இனி தான் நாம் எதிர்பார்த்த மகசூல் வரும் நிச்சயமாக நிகர லாபம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது..
-இயற்கை விவசாயி,முனைவர் மதுரை சுகிருஷ்ணன்.9042090063
#OrganicFarming #OrganicProducts #OrganicAgri
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai
Comments