இயற்கை தந்த அருமருந்தான தேனில் கலப்படத்தை கண்டறிவது எப்படி


கட்டுரையின் சிறப்பம்சங்கள் 

பழங்குடியினர் உணவில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது 

இஞ்சி சாறில் தேன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்

எலுமிச்சை சாறு, தேன், நீர் கலந்து குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்

 

 

தேன் ஒரு அற்புதமான இயற்கையின் கொடை. பண்டைய காலத்தில் வனத்தில் வாழ்ந்த மக்கள் அல்லது இப்போதும் கூட பழங்குடியினர் உணவில் ஏதோ ஒரு வகையில் தேனை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவில் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது. இயற்கையான இனிப்பான தேனை வேறு பல இயற்கை பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் கூடுதலாகபலன் கிடைக்கும். 

இப்படி தேனை எப்படியெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு உகந்ததாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்த குறிப்புகளை இங்கே பார்க்கலாம். நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.

ஒரு சிறு கரண்டியில் சிறிது தேனை எடுத்துக்கொள்ளவும். தேனின் அளவைவிட இரண்டு மடங்கு மிதமான சூடுநீரில் சிறிது கிராம்புத்தூளையும் கலந்து கால் முட்டியில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களில் வலி நின்றுவிடும். அதோடு நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

நல்ல தேனை அடையாளம் காண்பது எப்படி

 சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.

கேரட்டை மிக்ஸியில் சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும். இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால், பித்தம் குறையும்.

மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும். 1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்தால் பசி எடுக்கும்.

இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும். நீண்ட நாள் கொலெஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் மூன்று முறை இதேபோல் குடித்தால் குணம் கிடைக்கும்.

இரவில் சிறு நீர் போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு ஸூபூன் தேன் கொடுத்தால் சில நாட்களில் சரியாகும். தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும். ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

நல்ல தேன் எது?

இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டுமெனில் கலப்படம் இல்லாத தேனை பயன்படுத்த வேண்டும். தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளலாம். 

ஒரு கிளாசில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு தேன் விடுங்கள். நல்ல தேனாக இருந்தால், தண்ணீரில் கரையாது. தண்ணீரின் அடியில் போய் தேன் தங்கி விடும். 

தேனை பருத்தி துணியில் நனைத்து(காட்டன்) அதனை தீக்குச்சியால் பற்ற வைக்கும்போது அது எரிந்தால், சுத்தமான தேன். அந்த துணி எரியாவிட்டால் கலப்படத் தேன் என அர்த்தம். 

தேனை ஒரு டீஸ்பூனில் எடுத்து இன்னொரு கிண்ணத்தில் விடும்போது ஒரு நூல் போல இறங்கும். கலப்படமான தேனாக இருந்தால் சொட்டுசொட்டாக வடியும். 

-பா.கனீஸ்வரி

#Honey  #HealthyHoney  #HoneyBenefits #PureHoney

கூகுள் செய்தியில் ஆரோக்கிய சுவை உணவு இணையதளத்தை பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments