வயிற்று பாதிப்புகளுக்கு வரபிரசாதம் பட்டை , கிராம்பு, தேன்


 

கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 3

 

கொரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுவது, கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் வைரஸை கட்டுப்படுத்த நாம் எடுத்துக் கொண்ட மருந்துகள் ஆகியவைதான்.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் நம் உடலில் இ ருந்து அகன்றதும்,  நாம் வழக்கம்போல்  காரமான உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது எப்போதும் இல்லாதவகையில் சிலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இது குறித்து இயற்கை மருத்துவர் டாக்டர் தீபா சரவணன் இந்தப் பகுதியில் உடல் நல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த ஆலோசனையின் மூன்றாவது பகுதியில் அவர் சில குறிப்புகளை வழங்குகிறார்.

பட்டை, கிராம்பு கரைசல்

தினமும் காலை 11.30 மணியைப் போல இப்போது நான் சொல்லும் முறையில் கரைசலை தயார் செய்து குடிக்க வேண்டும். கால் டீ ஸ்பூன் பட்டை பொடி, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த கரைசலில் அதிகமான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை நம் உடலில் உள்ள ஜீரண கோளாறுகளை சரி செய்யும். ஜீரணத்தை எளிதாக்கும். குடல் பாதிப்புகள் ஏற்படாமல், வயிற்று எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த கரைசலில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என்று பார்க்கலாம். லவங்கத்தில் யூஜினால் இருக்கிறது. கிருமி நாசினியாக, நோய் தொற்று எதிர்ப்புக்காக இதைப் பயன்படுத்துகின்றோம். இது தவிர பட்டையில் Cinnamaldehyde போன்ற பல ஆன்டிஆக்சிடன்ட்கள்இருக்கின்றன. இதன் காரணமாக வாயு கோளாறு, ஏப்பம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் குடலில் அமிலத்தன்மை சீராக சுரக்கவும், வயிற்றின் ஜீரண செயல்பாடு  நன்றாக நிர்வகிக்கப்படவும் இது உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் இல்லாமல் இருக்கும்.

மிதமான சூட்டில் குடிக்கவும்

இவ்வளவு சிறப்புகள் மிக்க கரைசலை தயாரிப்பதற்கு ஏற்கனவே சொன்னபடி பட்டை பவுடர் கால் டீஸ்பூன் அல்லது  சிறிய பட்டையும், சிறிய கிராம்பும் சேர்ந்து  கொதிக்க வைத்து மிதமான சூட்டில் எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். ஜீரண சக்தி மேம்படுவதுடன், ஜீரண சக்தியினால் ஏற்படும் பெரிய பக்க விளைவுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அடுத்த தாக சீரக தண்ணீர் வைத்து குடிப்பது குறித்து பார்க்கலாம்.

டாக்டர் தீபா சரவணன்

(தொடரும்...)

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் கண்ட இணைப்புகளில் கிளிக் செய்யவும்.

கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 1

கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 2

 

#DietsForcoronaSideeffects  #FoodsForCoronaSideeffects  #AfterCoronaFoods  #HeathyFoodForCovid 

 

 

 


Comments


View More

Leave a Comments