கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 1
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூட நம்மில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கேள்விப்பட்டிராத பெயர் கொரோனா. அதுவரை கேள்வியே பட்டிராத இந்தப் பெயரை நாம் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் எத்தனை ஆயிரம் தடவை உச்சரித்தோம் என்பதற்கு நம்மிடம் கணக்கு இல்லை. கணக்கு வைத்துக்கொள்ளாத அளவுக்கு அந்தப் பெயரை உச்சரித்திருக்கின்றோம். அது நம்மில் பலரில் ஏற்படுத்திய நோய் பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தபோதிலும், அதன் தாக்கம் பலரிடம் இன்னும் இருக்கிறது. அதாவது நோய் குணமானபின்னர் ஏற்படும் பக்கவிளைவுகள் என்று இதனைச் சொல்லலாம். கொரோனா நோய் தொற்றின் போது கொடுக்கப்பட்ட உணவுகள், மருந்துகளால் நாம் குணம் அடைந்திருப்போம். குணம் அடைந்தபின்னர் சில மாதங்கள் கழித்தும் பலருக்கு ஜீரண கோளாறு இருந்து வருகிறது. கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உடல் நலக்கோளாறுகளும் அதிகரித்திருக்கின்றன.
கொரோனா தொற்று நம் உடலில் இருந்து விடை பெற்று சென்று சில மாதங்கள் கழிந்தும் கூட அதன் பக்கவிளைவுகள் தொடர்கின்றன. இதற்கு என்ன காரணம், உணவு முறையில் என்ன மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பது குறித்து இயற்கை மருத்துவர் தீபா சரவணன் இந்தப் பகுதியில் தொடர்ந்து சில நாட்களுகுக நமக்காக கட்டுரை எழுதுகின்றார். இந்த கட்டுரைத்தொடரின் முதல்பாகம் இது.
கொரோனா நோயாளிகள் எடுத்துக் கொண்ட மருந்துகள், கொரோனா வைரஸ் ஆனது நம் உடலின் ஜீரண மண்டலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் ஆகியவற்றால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் பெரும்பாலானவர்கள் அஜீரண பிரச்னைகளை சந்தித்துள்ளனர். நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், வாயு கோளாறு ஆகிய பிரச்னைகள் இவர்களுக்கு உள்ளன என்பதை அறிய முடிகிறது.
கொரோனா வைரஸ் ஆனது ஜீரண மண்டலத்தில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்துவிடுவதால், அதன் பாதிப்பு நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே நாம் முடங்கி இருந்ததால், நமக்கு ஏற்பட்ட மன அழுத்தம், தூக்கம் இன்மை ஆகியவற்றால் நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெளியே செல்லாததால் சூரிய ஒளி நம் உடலில் படாததன் காரணமாக செரோடோனின் (serotonin) ஹார்மோன் சுரக்கவில்லை. இது மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோன் . இது சுரக்காத பட்சத்தில் மூளையின் செயல்பாடுகளில் குறைவு ஏற்படும். நமக்கு தேவையில்லாத பயம் ஏற்படுவது இயல்பு.
இதையும் படியுங்கள்; குழந்தைகளின் பசியை போக்கும் ஆசிரியை ஜெயமேரி
எனவே இதனை தடுக்க நம் நெஞ்சு பகுதிக்கு கீழே இரண்டு தலையணைகள் வைத்து 30 டிகிரி கோணத்தில் படுக்கலாம். உணவு குழாய் வழியே அமிலம் தொண்டைக்குப் போகாமல் தடுக்க முடியும். அமிலத்தால் ஏற்படும் தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்படாது. அடுத்ததாக இஞ்சியை சாறு எடுத்துக் குடிப்பது பற்றிப் பார்க்கலாம்.
(தொடரும்..)
இயற்கை மருத்துவர்; தீபா சரவணன்
#DietsForcoronaSideeffects #FoodsForCoronaSideeffects #AfterCoronaFoods #HeathyFoodForCovid
Comments