கொரோனா பக்கவிளைவால் வயிற்றுக் கோளாறில் அவதிப்படுவர்கள் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளலாம்


 

கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 2

 

கொரோனா தொற்று காரணமாக நம்மில் பலருக்கு ஜீரண சக்தி கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, அதன் பக்கவிளைவுகளில் இருந்து நாம் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து இயற்கை மருத்துவர் டாக்டர் தீபா சரவணன் சில உணவுக்குறிப்புகளை நமக்கு வழங்குகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் கொரோனா பக்கவிளைவுகளில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை சாறு எடுத்துக் குடிப்பதால் கொரோனா பக்கவிளைவுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது பற்றி விளக்குகிறார்.

இஞ்சியின் மகத்துவம்

இஞ்சி ஜீரணத்துக்கு உதவக் கூடியது. அதனால்தான் நாம் உணவில் சிறு துண்டு இஞ்சியையாவது சேர்த்துக் கொள்கின்றோம். இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் என்ற பொருளானது நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் இருக்கும்போது அது ஜீரணம் ஆவதற்கு மிகப்பெரிய துணை புரிகிறது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இஞ்சியை சாறு எடுத்து குடிக்கலாம். இஞ்சி சாறில் தேன்கலந்து  குடிப்பதால்  நமக்கு உமட்டல் இல்லாமல், வாந்தி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.. வயிற்றுப் பிரச்னையையும் இஞ்சி சாறு  வாயிலாக சரி செய்யலாம்.

அதே நேரத்தில் அசிடிட்டி எனும் அலர்ஜி இருப்பவர்கள் இஞ்சி சாறு குடிப்பதற்கு பயப்படுவார்கள்.  காரம் சாப்பிடக்கூடாது என்பது நல்லதுதான் ஆனால், இஞ்சியில் இருந்து வரும் காரத்தை சாப்பிடலாம். இஞ்சி சாறு, தேன் ம ட்டுமின்றி வேறு ஒருவகையிலும் இஞ்சி சாறு தயாரிக்கலாம்.

 

புதினா கலந்த சாறு

ஒரு கைபிடி அளவு புதினா எடுத்துக் கொள்ளுங்கள், பத்து கொத்தமல்லி தழையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி புதினா, கொத்தமல்லி தழைகளை ஊறவைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் போது, அதில் இஞ்சி துண்டு சேர்க்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் இருந்து எடுத்து விட்டு, அந்த கரைசலில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம். 

புதினாவில் மெந்தால் இருக்கிறது. எனவே இதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படாது. நமது வயிற்றின் குடல் தசைகள்  இறுக்கம் இல்லாமல் சீராக இயங்குவதற்கு இது உதவும். வயிற்று உபாதைகள், வயிறு வலி ஏற்படாமல் புதினா-இஞ்சி சாறு உதவும்.

இஞ்சி, புதினா எடுத்துக் கொள்ளுவதால், எந்தவித வயிற்று பிரச்னையும், வாயு கோளாறும் ஏற்படாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தவிர நாம் குடிக்கின்ற காய்கறி ஜூஸ் அல்லது பழரசங்கள் ஆகியவற்றில் புதினா சேர்த்து குடித்தால் இன்னும் நன்மை பயப்பதாக இருக்கும்.  குடிக்கிற பழரசங்கள், காய்கறி, பழ ஜூஸிலும் புதினா எடுத்துக் கொள்ளலாம்.

தண்ணீரில் நனைத்த டவல்

வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து அடிவயிற்றில் வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வயிற்று வலி இருப்பவர்கள் ஒரு துண்டை பச்சைத்தண்ணீரில் நனைத்து அதனை நான்காக மடித்து அடிவயிற்றில் வைத்துக் கொள்ளுங்கள். டவலில் ஈரம் சொட்டக் கூடாது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத் தன்மை குறையும். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள்  சில மாதங்களுக்காகவது, ஜீரண கோளாறு ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். எண்ணைய் உணவுகள், வறுத்த உணவுகள்,  அதிக அளவு அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வது,  உப்பு கலந்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கில் ஒரு பகுதி எலுமிச்சை சாறு கலந்து அதில் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும். நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினந்தோறும் புத்துணர்வோடு இருக்கலாம்...

அடுத்தாக  பட்டை, லவங்கம் சேர்த்து சாறு எடுத்து பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

(தொடரும்...)

இயற்கை மருத்துவர்;தீபா சரவணன்

இந்த தொடரின் முதல் பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

#DietsForcoronaSideeffects  #HeathyFoodForCovid  #StomachUpset  #CoronaSideEffects #GingerJuice


Comments


View More

Leave a Comments