கொரோனா பக்களைவுக்கு தீர்வு தரும் பூனை மீசை மூலிகை


பூனை மீசை போன்ற மூலிகை 

பூனை மீசை மூலிகை டீ குடியுங்கள் 

சிறுநீரக கோளாறுகளுக்கு பூனை மீசை மூலிகை 

மூச்சுத் திணறலுக்கு முருங்கை விதை 

கொரோனா பக்கவிளைவுகளுக்கு தீர்வு 

கி.மு, கி.பி போல கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டம் மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறது. உடல் அசதி, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு, சர்க்கரை நோய் பாதிப்பு, இதயக்கோளாறு என பிரச்சினை அணிவகுக்கிறது.

தடுப்பூசி போட்டாலும் காய்ச்சல், உடல்வலி, சளித்தொல்லை என சிலரை பாடாய்ப்படுத்துகிறது.  இரண்டு தடுப்பூசி போட்ட பிறகும் சளித்தொல்லை, நாக்கில் சுவையின்மை, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. என்னிடம் மருத்துவ உதவி கேட்டவருக்கு  எளிய சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்பட்டது. 

கொரோனா மருந்துகளால் பக்கவிளைவுகள் 

கொரோனாவுக்கான சிகிச்சையின்போது எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகளால் சர்க்கரை நோய் பாதிப்பு மட்டுமன்றி கிரியாட்டின் அளவு அதிகரித்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்றிருக்கும் ஒருவருக்கு  எளிய மருத்துவம் பரிந்துரைக்கப்பட்டது. 

Also See: ஆரோக்கிய சுவை இன்றைய தலைப்பு செய்திகள்

மூக்கிரட்டை கசாயம், இஞ்சி ஒத்தடம், நெருஞ்சி கஞ்சி மற்றும் சித்த மருத்துவர் விக்ரம்குமார் ஆலோசனையின்படி பூனைமீசை டீ மற்றும் உணவுமுறைகளை சொல்லியிருக்கிறேன். 

பூனைமீசை டீ மற்றும் உணவுமுறை

பூனை மீசை மூலிகை தேநீர் 

பூனைமீசை மூலிகை அல்லது சீரக துளசி. Orthosiphon Aristatus என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்த மூலிகையை உலர வைத்து தேநீர் தயாரிக்கலாம். ஐரோப்பாவில் இதை கிட்னி டீ அல்லது ஜாவா டீ என்ற பெயரில் விற்கிறார்கள். 

பூனைமீசை மூலிகையை தினமும் காபி, டீ தயாரித்து அருந்துவதுபோலவும் அருந்தலாம் அல்லது நீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கியதும் இரண்டு டீஸ்பூன் பூனைமீசை மூலிகைப்பொடியைப்போட்டு 20 நிமிடம் கழித்து வடிகட்டி அருந்தலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து தாராளமாக அருந்தலாம். நோய் பாதிப்பு இல்லாதவர்களும் இந்த பூனைமீசை மூலிகை தேநீரை அருந்தி பலன்பெற‌லாம். 

Also Read: எளியவரின் பசியை போக்கிய எளியவர்

இதை எடுத்துக் கொண்டபின்னர் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இடையே சிலவற்றை சரியாகப் பின்பற்றாததால் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது. என்னுடைய ஆலோசனயின் பேரில் சிகிச்சை பெற்ற திண்டுக்கல்லைச்சேர்ந்த அந்த தம்பிக்கு 17 ஆக அதிகரித்திருந்த கிரியாட்டின் அளவு இப்போது 9 ஆகக் குறைந்திருக்கிறது. 

அவருக்கு கூடுதலாக பூனைமீசை மூலிகை அனுப்பி வைத்திருக்கிறேன். திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் விக்ரம்குமார் அவர்களும், வேலூர் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களும் சொன்னபடி பூனைமீசை மூலிகையையும் சேர்த்து சாப்பிடச் சொல்லியிருக்கிறேன்.

நச்சுகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும் 

பூனைமீசையில் சிறப்பு என்னவென்றால், சிறுநீர் கழிக்குமிடத்தில் லேசாக சிவந்து புண் மாதிரி இருந்த ஒருவருக்கு ஒரேநாளில் நல்ல மாற்றத்தை கொடுத்தது. எனக்கும்கூட சிறுநீர் கழிக்கும்போது ஏற்பட்ட எரிச்சலுக்கு ஒருதடவை பூனைமீசை சாப்பிட்டதில் பலன் தந்தது.

செயற்கை ரசாயனங்கள் கொண்ட உணவுகளை நாம் உண்பதால்  நச்சுப்பொருள்களின் தேக்கத்தால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு இந்த பூனைமீசை மூலிகை நல்ல தீர்வாக இருக்கிறது. நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை மிகச்சிறப்பாக செய்கிறது என்பதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்போருக்கு இது நல்ல வரப்பிரசாதமாகும். 

Also Read: இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...

தினமும் காலை, மாலை பூனைமீசை மூலிகையை பயன்படுத்தி வந்தால் யூரியா மற்றும் கிரியாட்டின் அளவு இயல்பான நிலைக்கு வர உதவும்.அடிப்படையில் சிறுநீரைப் பெருக்கி தேவையில்லாத உடலில் உள்ள கெட்ட நீர் மற்றும் தேவையற்ற உப்புகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. 

கல்லீரல் கொழுப்பைக் கரைத்து அதன் திறனை அதிகப்படுத்தும். கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு பூனைமீசை மூலிகை நல்ல தீர்வு தரும். மேலும் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், கல்லீரல் அழற்சி மற்றும் வீக்கம், வாத நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, மாதவிடாய்க்கோளாறுகள், காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்வதில் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பூனை மீசை மூலிகை எங்கு கிடைக்கும்?

என்னுடைய 95514 86617 மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். சில இணையதளங்களிலும் விற்பனையாகின்றன. பூனை மீசை மூலிகை என்ற முகநூல் பக்கத்திலும் பூனை மீசை மூலிகை விற்பனை தகவல்கள் கிடைக்கின்றன. 

மூச்சு திணறலுக்கு முருங்கை விதை நல்லது 

மூச்சு திணறலுக்கு முருங்கை விதை நல்லது

கொரோனாவின் தாக்கத்தால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் என்னிடம் ஆலோசனை கேட்டார். அவருக்கு முருங்கை விதை சாப்பிடும்படி பரிந்துரை செய்தேன். அதன்படி அவர் முருங்கை விதை சாப்பிட்டதால் இப்போது சிரமமின்றி இருக்கிறார். 

ஆஸ்துமா மட்டுமல்ல கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைந்த பலரும் இந்த முருங்கை விதையைச் சாப்பிட்டு பாதிப்பிலிருந்து மீண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்ல கொரோனாவையே வெல்லும் பேராயுதம் நமது இயற்கை, பாரம்பரிய, சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கிறது என்கிற பேருண்மை ஆளுமைகளுக்கு புரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய மொபைலுக்கு அமெரிக்காவுல இருந்து ஒரு  அன்பர் பேசினார்.  தன்னோட 8 வயசு பையனுக்கு கொரோனா வந்திருக்கிறதா சொன்னார். கைவசம் சீந்தில் கொடி பொடி, அமுக்கரா சூரணம், நிலவேம்பு பொடி இருக்கிறதா சொன்னவர், வேற என்ன செய்யணும்? கொரோனா வந்த மத்தவங்க என்ன செய்யணும்னு கேட்டார். அவர்கிட்ட இருக்கிறதை சாப்பிடச் சொன்னதோட வேற சில வழிமுறைகளையும் சொன்னேன்.

அமெரிக்காவுல இருந்து நம்ம வைத்தியத்தை கேக்குறாங்கன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. கேட்டவர் நம்மூர்க்காரர்தான்னாலும் அங்க உள்ள மருத்துவத்தை பின்பற்றாம நம்ம பாரம்பரிய மருத்துவத்தை பின்பற்றுறதை நினைக்கும்போது உள்ளபடியே மகிழ்ச்சியா இருக்கு.இனிமேலாவது நம்ம பாரம்பரிய மருத்துவத்தை எல்லாரும் நம்பணும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுறதுல மகிழ்ச்சி. 

(பூனைமீசை மூலிகையின் பலன் பற்றி தகவல் சொன்ன சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன் ஆகியோருக்கு நன்றி)

எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின்  அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )

#PoonaiMeesaiMoligai  #MoligaiCure #CureForCoronaSideEffects  #OrthosiphonAristatus #SeragaTulasi #PoonaiMeesaiTea

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments