புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….


ஆற்றல் அளிக்கும் உணவுகள் 

உடனடி ஆற்றல் தரும் உணவுகள் 

ஆற்றல் தரும் உணவுகள் 

சக்தி அளிக்கும் உணவுகள்

மிகவும் பரபரப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எந்த வயதினராக இருந்தாலும், நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட நமக்கு வேலைகள் நம் மீது  திணிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் உள்ளது, பதின்ம வயதினருக்கு மதிப்பெண்கள் குறித்த  கவலைகள் உள்ளன. இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் தேவையிருக்கிறது. 

Also Read: கொரோனா பக்களைவுக்கு தீர்வு தரும் பூனை மீசை மூலிகை

பெரியவர்கள் வேலை அழுத்தத்துடன் போராடுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், இரண்டு விஷயங்கள் மட்டுமே நமக்குத் தேவை.  உந்துதல் மற்றும் ஆற்றல்தான் நமக்குத் தேவை.  அன்றாட வாழ்க்கையில் உந்துதலைக் கண்டறிவது அவ்வளவு எளிதானது அல்ல . எனினும்,  உடலானது மனதின் தேக்கங்களில் இருந்து விடுபட ஆற்றலைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். அதற்கு நாம் உட்கொள்ளும் உணவு மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. 

வாழைப்பழம்

உடற்கட்டமைப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஏன் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள் என்பதற்கு சரியான காரணங்கள் உள்ளன. இது வெறுமனே ஒரு சிறந்த ஆற்றல் அளிக்கும் உணவு மட்டுமல்ல,. வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார் சத்து மற்றும் வைட்டமின் பி -6 ஆகியவை நிறைய இருக்கின்றன. 

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார் சத்து உள்ளது

இவை அனைத்தும் நமது உடலின்  நிலையான ஆற்றல் மற்றும் தசை செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையின் செரிமானத்தை குறைத்து, உங்கள் உடலானது சர்க்கரையிலிருந்து ஆற்றலை அதிக நேரம் பயன்படுத்துகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது,. வைட்டமின் பி, மாங்கனீசு மற்றும் இரும்புடன் அதிக நார்ச்சத்து கொண்டதாக அதிக ஆற்றல் கொண்டதாக ஓட்ஸ் உள்ளது. 

Also Read: எளியவரின் பசியை போக்கிய எளியவர்

ஓட்ஸ் காலையில் சாப்பிட ஏற்ற உணவாகும். இதை ஓட்ஸை பச்சையாக சாப்பிடலாம் அல்லது கஞ்சியாக தயாரித்தும் சாப்பிடலாம்.  ஓட்ஸில் அதிக புரதமும் உள்ளது, அதனால்தான் ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது உடலுக்கு நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது.  இதில் மாங்கனீசு அதிகம் உள்ளது, ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாக இருப்பதைத் தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. 

ஆப்பிள்

ஆப்பிள் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதிக ஆற்றல் கொண்ட ஆப்பிளை சாப்பிடமுடியும். ஆப்பிள்களில் அதிக நார்ச்சத்து மற்றும் சர்க்கரை உள்ளது, இது உங்கள் உடலுக்கு  நிலையான ஆற்றலைக் கொடுக்கும்.  ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, 

ஆப்பிள் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும்

கருப்பு  சாக்லேட்

நாம் கூறியுள்ள மற்ற உணவுகளைப் போல கருப்பு சாக்லேட் ஆரோக்கியமாக இருக்காது. எனினும் நமது உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது. இது பால் பொருட்களால் செய்யப்படும்  சாக்லேட்டை விட ஆரோக்கியமானது. கருப்பு சாக்லேட்டில் குறைவான சர்க்கரை உள்ளது, குறைவான உடனடி ஆற்றல். இருப்பினும், கோகோவின் அதிக செறிவை கொண்டிருப்பதால், அதன் நன்மைகள் நமது உடலுக்குக் கிடைக்கின்றன. 

Also Read:இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...

கொக்கோவில் ஃபிளாவனாய்டுகள் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஆற்றலின் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது மூளை மற்றும் தசைகள் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் அவற்றின் செயல்பாடு மேம்படுகிறது.

கீரை

கீரையில் ஊட்டச்சத்து அடர்த்தியாக இருக்கிறது. இது தவிர, கீரையில் அதிக இரும்புச் சத்தும் உள்ளது. எனவே இது சிறந்த ஆற்றல் ஆதாரமானது என்பதில் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இரும்பு குறைபாடு காரணமாக சோர்வு இருப்பவர்கள் கீரையை உண்ணும்போது அதில் இருக்கும் இரும்பு சத்து நமது உடலின் சிவப்பு  ரத்த அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை திறம்பட விநியோகிக்க வழிவகுக்கிறது, 

பாதாம்

கொட்டைகள் எப்போதுமே ஊட்டச்சத்து நிறைந்த மையமாக இருக்கின்றன.  பாதாம் பருப்பில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு ஆற்றலை அளிக்க உதவுகின்றன. 

பாதாம் பருப்பில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளன, இதில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள், மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆற்றல் அளவை அதிகரிக்கின்றன. பாதாமில் உள்ள மாங்கனீசு மற்றும் வைட்டமின் பி-யானது நமது உடல் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தயிர்

தயிர் லாக்டோஸ்,  கேலக்டோஸ் போன்றவை சர்க்கரைகளால்  ஆனதாகும். , தயிரில் உள்ள புரதம் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது நம் உடலில்  ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்கிறது. தயிரில் வைட்டமின்கள் பி 2 மற்றும் பி 12  ஆகியவை அதிகம் உள்ளன. 

முட்டை

முட்டை ஒரு மிக சிறந்த உணவாகும். முட்டையில் ஏராளமான  நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் உணாகும். முட்டையில் உள்ள  புரதம் நமக்கு நிலையான ஆற்றல் சக்தியை அளிக்கிறது. முட்டையில் இருக்கும் லூசின் என்ற அமினோ அமிலம் கொழுப்பை உடைத்து ஆற்றலை அதிகரிக்கிறது. இது தவிர, முட்டைகளில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, 

காபி

மனிதனுக்குப் பிடித்த பானங்களில் முதன்மையானதாக காஃபி உள்ளது. இது இல்லாமல் ஆற்றல் அளிக்கும் உணவுகள் பட்டியல் நிறைவு பெறாது. காபி அதன் சுவைக்காக மட்டுமல்ல, ஆற்றலை அதிகரிக்கும் காரணதுக்காகவும் விரும்பப்படுகிறது. நமது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் காஃபின் உள்ளது.  இது உடலை அதிக விழிப்புடன் வைத்திருப்பதுடன்,  செயல்திறனுக்கு உதவுகிறது.

-ஆகேறன் 

#HighEnergyFood  #EnergyFoods #HealthyEnergyFoods  #FoodForEnergy #BestFoodsForEnergy

ADVT

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments