பூண்டு தேநீர் எனும் ஆரோக்கிய பானம்


பூண்டு தேநீர் தயாரிப்பது எப்படி?

எளியமுறையில் பூண்டு தேநீர் தயாரிக்கலாம் 

பூண்டு தேநீர் குடிப்பதால் நன்மைகள் 

இதயபாதுகாப்புக்கு பூண்டு தேநீர் 

பூண்டு உங்கள் உடல் முழுவதும் அற்புதங்களைச் செய்யக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகும்.  கொழுப்பைக் குறைப்பதில் இருந்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது வரை பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. பூண்டு, நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பல நோய்களில் இருந்து குணம் பெற நமது உணவில் பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த கலோரி என்று அறியப்படும், பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமை அடைவதில் இ ருந்து நம்மை பாதுகாப்பதுடன், நம் உடலின் செல் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கும். 

பூண்டு தேநீர் 

வேறு எந்த இயற்கை பொருட்கள சேர்க்க கொண்ட தேநீர் போலவே பூண்டு தேநீரும் உங்கள் உடலுக்கு சக்திவாய்ந்த பானம் ஆகும். இது பருவகால சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவும். 

Also Read: கரும்பு வெல்லம்… நன்னாரி வேர்… ஏலக்காய்… கலவையில் ஜாங்கிரி டீ

வீட்டிலேயே இதை நீங்கள் எளிதாக தயார் செய்யலாம். பூண்டு தேநீர் அல்லது சூடான கஷாயம் மிகவும் இனிப்பு சுவையுடன் கூடிய பானமாக இருக்காது, ஆனால் தொற்றுநோயிலிருந்து உங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

தயாரிப்பது எப்படி?

இந்த சூடான பூண்டு தேநீர் தயாரிப்பது கடினமான வேலை அல்ல, வெறும் 10 நிமிடங்களில் தயார் செய்யலாம். முதலில் உங்களுக்குத் தேவையானது, தண்ணீர். இத்துடன் 3-4 பூண்டு, கிராம்பு, எலுமிச்சை மற்றும் தேன்.ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.  

பூண்டு தேநீர் தயாரிப்பது எப்படி

அரைக்கப்பட்ட பூண்டு கிராம்பு கலவையுடன் 2-3 கப் தண்ணீர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மட்டும் கொதிக்க விட்டால் போதுமானது. பிறகு, ஒரு கோப்பையில் வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலக்கவும். தேநீர் தயாராகி விட்டது.அதிக உடல் எடையை குறைக்க விரும்புவோர், பருவகால நோய்த்தொற்றுகளுக்கு இந்த காஃபின் இல்லாத தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டு தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் 

பூண்டு தேநீர் கிட்டத்தட்ட அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும். இதய ஆரோக்கியத்தையும் இரத்த அழுத்தத்தையும் மேம்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

Also Read:டெங்கு காய்சலுக்கு தீர்வு தரும் கிவி பழம்...

இது எடை இழப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பசியை கட்டுப்படுத்துகிறது.  வெளிப்படையாக, பூண்டு தேநீர் வயிற்று புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்கிறது, அதே நேரத்தில் வாய் புண்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

-ஆகேறன் 

#GarlicTea     #Garlic    #BenefitsOfGarlicTea   #DrinkHealthyTea  #HowToPrepareGarlicTea


Comments


View More

Leave a Comments