ஜொமோட்டோ ஊழியருக்கு பைக் வாங்க பணம் திரட்டிய நெட்டிசன்கள்


கொரோனா தொற்று பரவலின் அச்சத்துக்கு இடையே, மழையிலும், வெயிலிலும் உணவை வாடிக்கையாளர்களுக்கு சென்று சேரும் பணிகளில் உணவு விநியோக செயலிகளின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு மழை இரவில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஒரு வாடிக்கையாளருக்கு தேநீர் விநியோகிக்க ஜொமோட்டோ நிறுவனத்தின் ஊழியர் முகமது அகீல் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

ராபின் முகேஷ் என்ற வாடிக்கையாளர் இரவு 10 மணிக்கு லக்கி கா புலில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து தேநீருக்கு ஆர்டர் செய்தார். 15 நிமிடங்களுக்குள், கிங் கோட்டி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகேஷுக்குத்தான் அந்த இரவில் சைக்கிளில் அகீல் சூடான தேநீரை கொண்டு சென்று கொடுத்தார். . 

ஜொமோட்டோ ஊழியருக்கு பைக் வாங்கிக்கொடுத்த வாடிக்கையாளர்

கொரோனா தொற்று பொது ஊரடங்கு காரணமாக ராபின் முகேஷ் வீட்டில் இருந்தே ஆன்லைனில் அலுவலக வேலை செய்து வருகிறார்.  எனவே தலைவலியை போக்கிக் கொள்ள தேநீருக்கு ஆர்டர் செய்தார். 

தேநீர் விநியோகித்த பின்னர் கீழே சென்ற ​​அகீல் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார். இதைப் பார்த்த முகேஷ் அதை தன் செல்போனில் படம் எடுத்துக் கொண்டார். தன் முகநூல் தளத்தில் பதிவிட்டார். காலையில் அந்த பதிவு வைரலாகி விட்டது. அகிலுக்கு உதவ வேண்டும் என்று ஒருவர் பதிவிட அவரது கருத்துக்கு ஆதரவு பெருகிறது. 

இதையும் படியுங்கள்; நோய் தொற்றே பரவாயில்லை… கொரோனா காலத்து ஃபுட் டெலிவரி அனுபவங்கள்

இந்த நிதியைக் கொண்டு அகீலுக்கு இருசக்கர வாகனம் வாங்கப்பட்டது. அகீலிடம் புதிய மோட்டார் சைக்கிளின் சாவி மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டது. இரு சக்கர வாகனம் கிடைத்ததையடுத்து அவரது உணவு விநியோகம் இன்னும் விரைவடையும். அவரது ஊக்கத்தொகை உயரும். அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவும். 

உணவு செயலியில் வாடிக்கையாளரின் தேவையை சரியான நேரத்துக்குப் பூர்த்தி செய்து, அதன் வாயிலாக பாராட்டாக ஒரு இரு சக்கர வாகனத்தை அகீல் பெற்றிருக்கிறார். அகில் போல இந்தியா முழுவதும் பல அகில்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுபோல் உதவா விட்டாலும். அவர்களிடம் கடுமை காட்டாமல் இருக்கலாம். 

-பா.கனீஸ்வரி 

#MohdAqeelAhmed #Zomato #FoodDeliveryApp

 

Comments


View More

Leave a Comments