2020 ஆம் ஆண்டு உணவு செயலிகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது 19 லட்சம் வெஜ் பிரியாணி


இனி இப்படி ஒரு ஆண்டு நமக்கு தேவையில்லை எனும் வகையில் கொரோனா ஆண்டாக இருந்தது கடந்த 2020 ஆம் ஆண்டு. வீட்டிலேயே முடங்கி இருந்த பெரும்பாலான மக்கள் உணவு செயலிகளின் வாயிலாக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் உணவு செயலிகளின் வழியே ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அதாவது கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை சொமோட்டோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46.3 சதவிகிதம் முதல் 41.7 சதவிகிதம் வரை குறைந்த தாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல ஸ்விக்கியிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 48.8 சதவிகிதம் முதல் 42.2 சதவிகிதம் வரை குறைந்ததுள்ளது.

சொமோட்டோ எடுத்த புதிய புள்ளிவிரத்தின் படி டெல்லி, பெங்களூரு, புனேவில் அதிக அளவு மொமோக்கள் எனப்படும் கொழுக்கட்டை போன்ற உணவு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டன. இந்த மூன்று நகரங்களிலும் மொத்தமாக 25 லட்சம் மோமோக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 19,88,094 பேர் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர் இதுவரை 1,380 ஆர்டர்கள் செய்திருக்கிறார். சராசரியாக ஒவ்வொரு நாளும் நான்கு ஆர்டர்கள் செய்து சாப்பிட்டிருக்கிறார்.

 

அதே போல ரூ.1,99,950 என அதிக தொகைக்கு சொமோட்டாவில் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. மிகச்சிறிய அளவாக 10 ரூபாய்க்கும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.


Comments


View More

Leave a Comments