கருப்பை நீர்க்கட்டிகளை அகற்ற எடையை குறைப்பது முக்கியம்...


பெண்களை பாதிக்கும் சிண்ட்ரோம் 

கருப்பை நீர்கட்டிகளை கரைப்பது எப்படி 

உரிய உடற்பயிற்சி முக்கியம்

ஆரோக்கியமான உணவு முறையும் அவசியம்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது மிகவும் பொதுவான இனப்பெருக்கக் கோளாறு ஆகும். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் 70% பேருக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மோசமடைவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருக்கும் பெண்கள்,  உடல் எடையை குறைக்க வேண்டும். இதன் மூலம் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிகரிப்பதை  குறைத்து மூலம் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தலாம்.  இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

கருப்பை நீர் கட்டிகளை குறைக்க முறையான உடற்பயிற்சி அவசியம்

 

மேலும் இந்த பாதிப்புக்கு உள்ள பெண்கள் தங்களின் வளர்சிதை மாற்ற, இருதய மற்றும் உளவியல் அம்சங்களை கணக்கில் கொண்டு தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது முக்கியம்   

.பிசிஓஎஸ் கண்டறிவது எப்படி?

ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாதது, அதிகப்படியான ஆண்ட்ரோஜன்கள் குறிப்பாக ஹைப்பர் முடி வளர்ச்சி,  முடி உதிர்தல் ஆகியவற்றால் வெளிப்படுகிறது. கருப்பையை ஸ்கேன் எடுத்து பார்ப்பது அவசியம். 

Also Read: பூண்டு தேநீர் எனும் ஆரோக்கிய பானம்

இயற்கை மருத்துவமுறைகள்

இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் தூவி  கொள்ளலாம். இதனால் இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீர்க்ட்டியினால் உண்டாகும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  

ஆளி விதைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆளி விதையில் உள்ள ஒமேகா மற்றும் புரத சத்துகள் நீர்கட்டிகள் உருவாவதைத் தடுகின்றன. . ஆளி விதிகளை பொடி செய்து தண்ணீரிலோ அல்லது பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.

கருப்பை நீர் கட்டிகளை குறைக்க ஆரோக்கிய உணவு முறைகள் முக்கியம்

இது தவிர வாழைப்பூ, முடக்கத்தான் கீரை, முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பாகற்காய், ஸ்ட்ராபெரி, சோயாபீன்ஸ், பூசணி விதை, வெள்ளரி விதை ஆகிய காய்கறிகளை உணவில் சேர்துதக் கொள்ள வேண்டும்.  செம்பருத்திப் பூவைக் கொண்டு தேநீர் தயாரித்து குடிப்பதும் நன்மை பயக்கும். 

Also Read: சன்ஸ்கிரீனில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு நச்சாக மாறும் ஆபத்து...

எச்சரிக்கை; பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்த புரிதலுக்கான தகவல்கள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. உரிய மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை வழிமுறைகள், உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். 

-ஆகேறன்

#PolycysticOvarySyndrome #PCOS  #HowToAvoidPCOS  


Comments


View More

Leave a Comments