30 நாட்கள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாம் நவம்பர் 7ம் தேதி தொடங்குகிறது


நம் 'வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையில் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ஒரு மாதம் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாமை நடத்துகிறது. . 

அளிக்கப்படும் பயிற்சிகள் 

இந்த பயிற்சியில், 150 விதமான மரபு காய்கறிகள், கீரைகள், சீர்தானியங்கள் விளைச்சலின் நேரடி களப் பயிற்சி வழங்கப்படுகிறது. விதைப்பிலிருந்து  விதை சேகரிப்பு நுட்பங்கள் வரையிலான இயற்கை வேளாண் நுட்பங்கள் கற்றுத்தரப்படும்

Also Read: நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாத 5 கடல் உணவுகள்!

மண்வள மேம்பாடு , பாத்தி அமைத்தல் , காய்கறி நடவு , பழ மர நடவு வன மர நடவு நுட்பங்கள்.கால்நடை பராமரிப்பு நுட்பங்கள், விதை நேர்த்தி செய்தல் நாற்றுப் படுக்கை அமைத்தல் மற்றும் விதைப்பு முறைகள், மரபு விதை சேகரிப்பு மற்றும் பரவலாக்க வழிமுறைகள் ஆகியவையும் கற்றுத்தரப்படும்.  . 

இடுபொருட்கள் குறித்தும் பயிற்சி 

இயற்கை இடுபொருட்களான அமிர்த கரைசல் , பஞ்சகவியா , EM பழக் கரைசல் , மூலிகை பூச்சி விரட்டி,  தேமோர்‌ அரப்புமோர்‌கரைல் , மீன் அமிலம் , ஊட்டமேற்றப்பட்ட தொழு உரம் ஆகியவை நேரடி தயாரிப்பு மற்றும் தெளிப்பு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். .

வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வேளாண்மை பயிற்சி

பூச்சி கட்டுப்பாட்டு  முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு வழிமுறைகள், பண்ணைப் பொருளாதாரம் திட்டமிடுதல் .மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தை படுத்தும் வழிமுறைகள்.நிரந்தர வேளாண்மைக்கான நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு முறைகள், முன்னோடி இயற்கை வேளாண் பண்ணைகள் பார்வையிடல் ஆகியவையும்  இடம்பெறும் .

முன்பதிவு அவசியம் 

வானகம் வெற்றிமாறன்.இரா மற்றும் குழுவினர் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய விரும்புவோர் 8610457700 / 9566667708 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.   .

Also Read: பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் இணைந்த ஃப்லேக்கிஸ்

வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம், நம்மாழ்வார்புரம் , குளத்துப்பட்டி , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம்  - 624208 என்ற முகவரியில் பயிற்சி நடைபெறுகிறது. .பயிற்சி பங்களிப்பு நபருக்கு ₹6000 (உணவு தங்குமிடம் பயிற்சி உட்பட) மட்டும்.

#AgriEvents #OrganicTraining #NaturalLife #Vanagam


Comments


View More

Leave a Comments