விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்யும் விதம்...

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யானை முகனான விநாயகருப்பிடித்தமான உணவுகளில் முதன்மையானது கொழுக்கட்டை. அரிசிமாவு, பாசிபருப்பு, வெல்லம் ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படும் கொழுக்கட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளிலும் ஒன்றாகும்.சரி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். வீடியோ நன்றி; Healthy Food Kitchen

காரியாபட்டி பத்து ரூபாய் உணவகம்

வாழ்வாதரத்தின் அனைத்து அடிப்படைகளுக்கும் ஆதாரம் உணவுக்கானதேடல்தான். தினசரி மூன்று வேளையும் சாப்பிடுபவர்கள் என்பது நமது நாட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர் மட்டும்தான். நாட்டில் நிறையப்பேர் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிடுகின்றனர். பெரும்பாலானோர் அந்த ஒரு வேளை உணவு கூட இல்லாமல் நாள்தோறும் பசியும், பட்டினியோடும் பரிதவித்து வருகின்றனர். பசித்தவர்கள், கொஞ்சம் பணம் இருப்பவர்களுக்காக விருதுநகர் மாவட்டம் காரியபட்டியில் உள்ள இன்பம் பவுண்டேஷன் என்ற இந்த உணவகத்தில் பத்து ரூபாய்க்கு உணவு தருகின்றனர். இன்பம் பவுண்டேஷன் சார்பில் கிராமங்களை த த்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு இலவசமாகவும் உணவு வழங்குகின்றனர். வீடியோ நன்றி; madras street food

சேமியா பன்னீர் பிரியாணி

சமையல் கலைஞர் செஃப் தாமு எப்போதுமே வித்தியாசமாக ஏதேனும் செய்து அசத்துவார். அந்த வகையில் அவர் சைவப் பிரியர்களுக்காக கண்டுபிடித்த மெனு சேமியா பன்னீர் பிரியாணி. செஃப் தாமு இந்த வீடியோவில் சேமியா பன்னீர் பிரியாணி எப்படி செய்வது என்று விளக்குகிறார். நீங்களும் சேமியா பன்னீர் பிரியாணி செய்து சாப்பிட்டு அசத்துங்கள். வீடியோ நன்றி; Chef Damu

நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

சந்தையில் நண்டு வாங்கி வந்து அதை சுத்தம் செய்வதே பெரிய கலை. அதன்பின்னர் அதனை சமைப்பதற்கும் தனித்திறமை தேவை. ஆனால், எப்படி சமைப்பது என்று ஒருமுறை தெரிந்து கொண்டால், நீங்கள் தினமும் நண்டு குழம்பு வைத்து அசத்துவீர்கள். இந்த வீடியோவில் சுவையான நண்டுகுழம்பு செய்வது குறித்து விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Kavitha Samayalarai கவிதா சமையலறை

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி?

மழைகாலம், குளிர்காலத்தில் சுடசுட சூப் குடிப்பது உடல்நலத்துக்கு நல்லது. பருவநிலைக்கும் ஏற்றதாக இருக்கும். அதிலும் ஆட்டுக்கால் சூப் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. எலும்பு வளர்ச்சி, சளித்தொந்தரவுகளுக்கு ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது. இந்த வீடியோவில் ஆட்டுக்கால் சூப் செய்வது பற்றி விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Kovai Food Square

வீட்டில் குக்கரில் மட்டன் குழம்பு வைக்கத் தெரியுமா?

வீட்டில் குக்கரில் மட்டும் குழம்பு வைப்பதும் ஒரு தனிக்கலை. எப்படிவைத்தாலும் நன்றாக இல்லை என்று நினைப்பவர்கள் இனி இந்த வீடியோவை பார்த்து மட்டன் குழம்பு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். மட்டன் குழம்பு வீடியோ நன்றி; Sugan's Cookery

கிராமத்து மட்டன் குழம்பு வைக்கும் விதம்

மட்டன் குழம்பு என்றாலே நமது வாயில் நீர் ஊறும் அளவுக்கு அது ருசியான குழம்பு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை வைக்கும் வித த்தில் வெவ்வேறு சுவைகளைக் கொண்டு மட்டன் குழம்பு சுவையில் ஆளை மயக்குகிறது. இந்த வீடியோவில் கிராமத்து பாணியில் மட்டன் குழம்பு வைக்கும் விதம் விளக்கப்பட்டுள்ளது. வீடியோ நன்றி Royal Dhakshin

மேலூர் சிக்கன் செய்து அசத்தும் தாமு

கோழிக்கறி அல்லது பிராய்லர் கோழிக்கறி எதுவாக இருந்தாலும் அதை சமைக்கும் முறையில் வேறுபாடுகள் தெரியும். பள்ளிப்பாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன் என்று விதம்விதமான சமையல் முறைகள் உள்ளன. மேலூர் சிக்கன் சமைப்பதிலும் ஒரு முறை உள்ளது. இது குறித்து சமையல் மாஸ்டர் தாமு இந்த வீடியோவில் விளக்குகிறார். வீடியோ நன்றி; Chef Damu

மதுரை ஸ்ரீராம் மெஸ் நாற்பது வருடங்களாக தொடரும் சுவை

மதுரையில் உணவுக்கு என்று தனி ருசியும், சுவையும் உள்ளது. குறிப்பாக இட்லி, அதற்கு தொட்டுக்கொள்ள விதம்விதமான சட்னி என்று மதுரை இன்றளவும் ஃபேமஸாக இருக்கிறது. அதே மட்டன் குழம்பு, குடல்கறி வைப்பதிலும் மதுரைகார ர்களை அடித்துக்கொள்ள முடியாது. மதுரையில் உள்ள உணவங்கள் அனைத்துமே சிறந்தவைதான். அதிலும் நாற்பது வருடங்களாக இயங்கி வரும் மதுரை ஸ்ரீராம் மெஸ் சைவ உணவகங்களுக்கு சிறப்புப் பெற்றது. அதன் தனித்தன்மைதான் அந்த மெஸை இன்றளவும் வழிநடத்தி செல்கிறது. வீடியோ நன்றி; madras street food

செட்டிநாடு கோழிகுருமா செய்வது எப்படி?

தமிழகத்தில் செட்டிநாடு உணவுகளுக்கு என்று பாரம்பர்யம் உள்ளது. செட்டிநாடு உணவு வகைகள் ருசி மிக்கவை. செட்டிநாட்டில் அசைவ உணவுகளும் தனிச்சிறப்பு வாய்ந்த ருசியுடன் சமைக்கப்படும். இந்த வீடியோவில் செட்டிநாடு கோழிக்குருமா எப்படி செய்வது என்று விவரிக்கப்படுகிறது. பார்த்து மகிழுங்கள். வீடியோ நன்றி; SMART KITCHEN

காஞ்சிபுரம் கோவில் இட்லி

இட்லி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு. காலை நேரத்தில் இட்லி சாப்பிடுவது அந்த நாளின் எனர்ஜியை நமக்கு கொடுக்கின்றது. இட்லிகளிலும் விதவிதமான இட்லி வகைகள் உள்ளன. செட்டிநாடு இட்லி, குஷ்பு இட்லி, கோழி குழம்பு இட்லி என்று வித்தியாசமான இட்லி வகைகள் உள்ளன. அதே போல காஞ்சிபுரம் இட்லி என்பதும் மிகவும் பிரபலமான உணவாகும். காஞ்சிபுரம் இட்லி என்பது கோவில் பிரசாதமாகத்தான் வழங்கப்பட்டது. பின்னர் இதன் ருசியை அறிந்து ஹோட்டல்களிலும் இப்போது காஞ்சிபுரம் இட்லி என்ற பெயரில் இட்லிகள் விற்கப்படுகின்றன. காஞ்சிபுரம் இட்லி செய்வது என்பது பிற இட்லிகள் போல அரிசி, உளுந்தில் செய்வதுதான் என்றாலும், அதன் செய்முறைகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வீடியோவில் காஞ்சிபுரம் இட்லிக்கு மாவு அரைப்பது முதல் இட்லி செய்வது வரை விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; STREET FOOD

சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி?

இந்திய உணவு வகைகளில் இப்போது பிரியாணிதான் அமோகமாக விற்பனை ஆகிறது. மாநில சுவை கடந்து அனைவராலும் விரும்ப ப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. சிக்கன் பிரியாணி செய்யும் முறைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வீடியோவில் சிக்கன் தம்பிரியாணி செய்யும் முறைபற்றி விளக்குகின்றனர். நீங்களும் சிக்கன் தம்பிரியாணி செய்து சுவைத்துப் பாருங்கள். வீடியோ நன்றி; Rama's Yummy Kitchen யூடியூப் சேனல்

வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படின்னு பாருங்க...

பிரியாணி என்ற உடன் பலருக்கு மட்டன், சிக்கன் பிரியாணிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், காய்கறிகள் போட்டு கலக்கலாக செய்யும் வெஜ்பிரியாணியும் சூப்பராக இருக்கும். வெஜ் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த வீடியோ உங்களுக்கு கற்றுத்தருகிறது. வீடியோ நன்றி; Food Area Tamil

சீரகசம்பாவில் மட்டன் பிரியாணி செய்யுங்கள்...

பிரியாணியில் பலவகை என்றால், பிரியாணி செய்யும் அரிசியிலும் பலவகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்தோம் என்றால், அசத்தலாக, அருமையான சுவையுடன் இருக்கும். இந்த வீடியோவில் சீரகசம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்கின்றனர். வீடியோ நன்றி; Food Area Tamil

கூழ் செய்முறை வீடியோ

அம்மனுக்கு கூழ்வார்த்தல் என்பது பக்தியுடன் உணவு படைப்பதான ஒரு வைபவமாக கருதப்படுகிறது. குறிப்பாக சென்னையில் ஆடிமாதங்களில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழாக்கள் நடைபெறுகின்றன. கூழ் ஆரோக்கியமான உணவில் ஒன்று. கூழ் செய்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ. வீடியோ நன்றி; Savithri Samayal