மட்டன் சுக்கா எப்படி செய்வது?

ஆட்டிறைச்சியில் குழம்பு, பிரியாணி, கிரேவி, வறுவல் என்று வித்தியாசமான மெனுக்களை செய்து சாப்பிடலாம். ஆட்டிறைச்சி எலும்பில் கூட சூப் வைக்கலாம். எலும்பு குழம்பு வைத்து சாப்பிடலாம். ஆட்டு ரத்தத த்தை கொண்டு வறுவல் செய்து சாப்பிடலாம். ஆட்டிறைச்சியை சுக்காவாக செய்தும் சாப்பிடலாம். கைப்பக்குவத்தோடு சுக்கா செய்தால் சுவை நேர்த்தியாக இருக்கும். மட்டன் சுக்கா செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Relax Recipes

ராகி களி எப்படி செய்வது என்று தெரியுமா?

சிறுதானியங்களில் ராகிக்கு என்று சிறந்த இடம் உண்டு. ஆரோக்கியமான பல சத்துகள் கொண்டது ராகி. ராகியை மாவாக அரைத்து அதனை பல வகைகளில் உணவாகப் பயன்படுத்தலாம். ராகி தோசை, ராகி அடை என்று விதவிதமான ஆரோக்கியமான உணவு வகைகளை ராகியில் செய்யலாம். இன்னொரு ஆரோக்கியமான உணவு ராகி களி. ராகி களி செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்குகின்றனர். வீடியோ நன்றி; ungal thambi

கெளுத்தி மீனை உயிரோடு பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்டால்.... ஆஹா.. என்ன சுவை

மீன் உணவுகள் அதன் வாழ்விடத்துக்கு ஏற்ப சுவை மாறுபட்டவை. கடல் மீன், ஏரி மீன், குளத்து மீன், ஆற்று மீன், கிணற்று மீன், அணை மீன் என்று நீர்நிலைகளின் வகைகளுக்கு ஏற்ப அவற்றில் வளர்க்கப்படும் மீனின் சுவையும் மாறுபடும். ஒவ்வொன்றும் தனித்தனி சுவைகளில் இருக்கும். குறிப்பாக கெளுத்தி மீனை உயிரோடு குளத்தில் இருந்து பிடித்து வந்து குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். அதை சாப்பிட்டவர்களுக்கு ஐஸ்பெட்டியில் வைத்து சில நாட்கள் கழித்து விற்பனைக்கு வரும் கடல் மீன்கள் சுத்தமாக பிடிக்காது. இங்கே கெளுத்தி மீன் சமைக்கும் விதம் குறித்து வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; My Country Foods

திருவாதிரை களி எப்படி செய்வது என்று தெரியுமா?

எந்த மதமாக இருந்தபோதிலும், மத த்தின் வழிபாடுகளுடன் உணவும் இணைந்தே இருக்கின்றது. ஆருத்ரா தரிசனம் எனப்படும் சிவன் கோவில்களில் நடைபெறும் வைபவம் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களி செய்து அதனை சுவாமிக்குப் படைத்து உண்பர். இந்த களியை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ நன்றி; Selak's Yummy Recipes

வெஜ் புலவ் எப்படி செய்வது என்றுதெரியுமா?

வீட்டில் தினமும் அரிசி சாதம், இட்லி, தோசை என்று ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு பழகியவர்களுக்கு திடீரென ஏதேனும் வித்தியாசமாக சாப்பிடத்தோணும் அப்போது ஹோட்டலுக்குப் போகலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். ஹோட்டல் மெனுவில் வீட்டில் சாப்பிடாத ஐட்டங்களைத் தேடுவார்கள். புலவ் உள்ளிட்ட ஹோட்டல் உணவுகளை சாப்பிடவும் விரும்புவார்கள். சுவையான வெஜிடபிள் புலவ் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ நன்றி; Erode Ammachi Samayal

புரோட்டா வீட்டிலேயே மிருதுவா செய்யலாம்...

புரோட்டோ நமது பாரம்பர்ய தமிழ் உணவு இல்லை. எனினும், இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் விதம்விதமானபுரோட்டாக்கள் விற்பனை ஆகின்றன. அவற்றில் நல்லவை வயிற்றை நிரப்புகின்றன. புரோட்டாவை வீட்டிலேயே கோதுமை மாவில் மிருதுவாக செய்யலாம். எப்படி செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Ragas kitchen

நீங்க சாப்பிடும் சப்பாத்தி மிருதுவா இருக்கா?

சப்பாத்தி என்றாலே மிருதுவாக, எளிமையாக கடித்து உண்ணும் வகையில் இருக்க வேண்டும். கடினத்தன்மையோடு இருக்க க்கூடாது என்று நாம் நினைப்போம். உண்மைதான். அப்போதுதான் சுவையாகவும் இன்னும் சில சப்பாத்திகளை சாப்பிடலாம் என்றும் நம் மனதும் நாக்கும் வயிறும் நம்மிடம் சொல்லும். மிருதுவான சப்பாத்தி செய்வது எல்லோருக்கும் கைவருவதில்லை. அதனால் கவலைப்பட வேண்டியதில்லை. இங்கே வீடியோவில் மிருதுவாக சப்பாத்தி செய்யும் கலையை வீடியோவில் விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Jenny Cooks

வெரைட்டியான இரவு உணவு சமைக்க…

எப்போது பார்த்தாலும் இட்லி, தோசைதானா இரவு உணவுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே என்று நினைப்பவர்களுக்கு இந்த வழிகாட்டுதல். இரவு உணவு வழக்கமானதைப் போல இருந்தால் பலருக்கு சலிப்பாக இருக்கும். வழக்கமான மெனுவில் இருந்து விலகி மசாலா சப்பாத்தி, மசாலா பணியாரம் என்று வித்தியாசமான இரவு உணவுகளை சமைக்கலாம். இந்த வீடியோவில் வித்தியாசமான இரவு உணவுகளை அறிமுகம் செய்கின்றனர். வீடியோ நன்றி; Sherin's Kitchen

கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஆங்கிலோ இந்திய உணவு சமைக்கலாமே?

உலகின் பல்வேறு இனக்குழுக்களாக வாழும் சமுதாயத்தில் ஒவ்வொரு இனத்துக்கும் இடையே உணவு, மொழி, உடை, கலாசாரம் அனைத்துமே வேறுபடுகின்றன. அந்த வகையில் ஆங்கிலோ-இந்தியர்கள் என்ற இனத்தவர்களின் உணவுப்பழக்கமும் வித்தியாசமானவைதான். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது இந்தியாவில் வசித்தவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது மேற்கத்திய கலாசாரத்துடன் கூடிய இந்திய பாரம்பர்யத்தையும் நிலைநாட்டும் உணவுகளை அவர்கள் சமைத்து உண்பது உண்டு. அவைதான் ஆங்கிலோ இந்திய உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கே வீடியோவில் ஆங்கிலோ இந்திய உணவுகள் தயாரித்து காட்டப்படுகின்றன. வீடியோ நன்றி; Namma MKG

கிறிஸ்துமஸ் கேக் எப்படி செய்வது என்று தெரியுமா?

உணவு வகைகளைப் போலவே இப்போது பேக்கரி உணவுகளையும் வீட்டிலேயே தயாரிப்பது ஃபேஷன் ஆகி வருகிறது. வீட்டிலேயே கேக் தயாரித்து ஆன்லைனில் விற்பவர்கள் இப்போது அதிக அளவில் இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் வந்து விட்டது. கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடுவது. நிச்சயமாக முடியாதுதானே! ஆம் இங்கே கிறிஸ்துமஸ் கேக் பஞ்சு போல மிகவும் மிருதுவான கேக் செய்வது குறித்து வீடியோவில் விளக்குகின்றனர். பார்த்து நீங்களும் கேக் செய்து சாப்பிடுங்கள். வீடியோ நன்றி; Indian Recipes Tamil

வேர்கடலை சட்னி தெரியும். வேர்கடலை கிரேவி தெரியுமா?

வேர்கடலை சத்து மிகுந்த ஒரு உணவு. பச்சையாக தின்றாலும் சத்து, வேக வைத்துத் தின்றாலும் சத்து, வறுத்து தின்றாலும் சத்து என வேர்கடலை ஒரு சத்துமிக்க உணவு. வேர்கடலை பர்பிக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. வேர்கடலையில் சட்னி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், வேர்கடலை கிரேவி எப்படி செய்வது என்று தெரியுமா? இந்த வீடியோவில் அதனை செய்து காட்டுகின்றனர். வீடியோ நன்றி; Ennudaiya Samayal

செட்டிநாடு இறால் கிரேவி செய்யறது எப்படின்னு தெரியுமா?

இறால் குழம்பு, இறால் தொக்கு என்று பல ரெசிபிகளை இறாலில் செய்யலாம். தமிழகத்திலேயே சமையலுக்கு புகழ்பெற்ற செட்டிநாடு ஸ்டைலில் இறால் கிரேவி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் இனிமே அதனை மிஸ் செய்து விடாதீர்கள். செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. நீங்களும் இறால் கிரேவி செய்து அசத்துங்கள். வீடியோ நன்றி; Tamil Samayal

நாட்டுக்கோழி சேவல் குழம்பு

நாட்டுக்கோழியிலும் சேவல் குழம்பு வித்தியாசமான டேஸ்ட் கொண்டது. நாட்டுக்கோழியில் எப்போதுமே அதிக சத்துகள் உள்ளன. இயற்கையாக கிராமங்களில் கிடைக்கும் உணவுகளை தின்று வளரும் நாட்டுக்கோழிகள் பல சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளன. நாட்டுக்கோழி சேவல் இறைச்சியும் பல நல்ல சத்துகளை க் கொண்டிருக்கிறது. இங்கே உங்கள் கண்முன்பு நாட்டுக்கோழி சேவலை அறுத்து, இறைச்சியாக்கி, அதனை சமைப்பது வரை அத்தனையும் உங்களுக்கு விளக்குகின்றனர். நாட்டுக்கோழி சேவல் குழம்பு எப்படி வைப்பது என்று இந்த வீடியோவில் விவரிக்கப்படுகிறது. வீடியோ நன்றி; My Country Foods

முட்டைக்குழம்பு இப்படி செய்து பாருங்கள்...

முட்டையை வெறுமனே உடைத்து அப்படியே சாப்பிட்டாலும் நல்லதுதான். ஆனால், பச்சை முட்டை வாசனையை முகர்ந்தாலே சிலருக்கு வாந்தி வந்து விடும். முட்டையை ஆஃப் ஆயில், ஆம்ப்லேட் , பொடி மாஸ் என்று விதம்விதமாக சமைத்து சாப்பிடலாம். முட்டை குழம்பும் வைத்து சாப்பிடலாம். அதன் ருசியே தனியாக இருக்கும். இந்த வீடியோவில் முட்டைக்குழம்பு வைப்பது பற்றி சொல்கின்றனர். வீடியோ நன்றி; SIMPLY SAMAYAL

எளிமையாக வத்தக்குழம்பு வைப்பது எப்படின்னு தெரியுமா?

இந்த குளிர்காலம் மற்றும் மழைகாலத்துகுக சூடான, சுவையான உணவை நாக்கும் மனமும் விரும்பும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சூடான வத்தக்குழம்பின் சுவையும், ருசியும் தெரிந்த ஒன்று. வத்தக்குழம்பை எளிமையாக அதே நேரத்தில்சுவையாக வைப்பதும் ஒரு கலைதான். இந்த வீடியோவில் அதனை விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Food Area Tamil