கடல் உணவில் மிகவும் ஆரோக்கியமானதும், முதன்மையானதும் மீன்தான். மீன் உணவில் இருக்கும் ஏராளமான சத்துகள் நமது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மீன் குழம்பு, மீன் வறுவல் என்று விதம் விதமாக சமையல் செய்யலாம். மிளகு உணவில் சேர்ப்பதால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மீனுடன் மிளகும் சேரும் போது கூடுதல் ஆரோக்கியம்தான். மீன் மிளகு வறுவல் எப்படி செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவது போல இல்லை என்று சொல்பவர்கள். இந்த வீடியோவில் கூறியது போல செய்தால் ருசியில் அள்ளலாம். வீடியோ நன்றி; Healthy Food Kitchen
வீடுகளில் எப்படித்தான் அளவோடு உணவு சமைத்தாலும் மீந்து போவது குடும்பத்தலைவிகளை கவலைக்கு உள்ளாக்கும் விஷயமாக இருக்கிறது. இனி மதியம் சாதம் மீந்து போனால் கவலைப்பட வேண்டும். மீந்து போகும் உணவைக் கொண்டு அருமையான இரவு உணவை தயாரிக்கலாம். இது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. வீடியோ நன்றி; SMART KITCHEN
நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிட்டு விட்டீர்களா? அடுத்த தாக நாட்டுக்கோழி குழம்பு எப்படி வைப்பது என்று பார்க்கலாம். நாட்டுக்கோழி குழம்பும் அற்புதமான சுவை கொண்டது. நாட்டுக்கோழியில் உள்ள சத்துகள் எல்லாம் சாரமாக குழம்பில் இறங்கி மசாலாவுடன் அந்த குழம்பை சாப்பிட்டால் அதை விட வேறு சுவை ஏதும் ஈடில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். வீடியோ நன்றி; Dindigul Food Court
பிராய்லர் கோழிகளை விடவும், நாட்டுக்கோழியில் அதிக சத்துகள் உள்ளன. நாட்டுக்கோழியில் என்ன வைத்து சாப்பிட்டாலும் அது சுவைதான்.நாட்டுக்கோழி பிரியாணி என்றால் அது இன்னும் கூடுதல் சுவைதான். நாக்கும் மனதும் நாட்டுக்கோழி பிரியாணியை நீண்டநாட்கள் நினைத்தபடியே இருக்கும்.இந்த வீடியோவில் நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; jamuna Cooking Recipes
பிரியாணியின் சுவை என்பது அதில் சேர்க்கப்படும் அரிசி, இறைச்சி வகைகள், காய்கறி வகைகளைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் எண்ணற்ற பிரியாணி வகைகள் செய்யும் முறைகளும் வித்தியாசப்படுகின்றன. திண்டுக்கல் தலப்பா கட்டி உள்ளிட்ட சில பிரபலமான பிரியாணி பிராண்ட்கள் சீரக சம்பா அரிசியில்தான் தயாரிக்கப்படுகின்றன. இங்கே வீடியோவில் சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்யும் விதம் குறித்து விவரிக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Chef Deena’s Kitchen
இட்லி போன்ற ஆரோக்கியமான அற்புதமான உணவு வேறு ஏதும் இல்லை. இட்லிக்கு தொட்டுக்கொள்வதற்கு சுவையான சட்னியும் இருந்து விட்டால், அதை விட வேறு ஏதும் சாப்பிடத்தோணாது. பத்து வகை சட்னி இருந்தால் எப்படி இருக்கும். அரை இட்லிக்கு ஒரு சட்னி வீதம் ஐந்து இட்லிகளை நிமிடநேரத்தில் சாப்பிட்டு விட முடியும். ஒரு சிலர் ஒரு இட்லிக்கு ஒரு சட்னி என்ற விகித த்தில் பத்து இட்லி கூட சாப்பிட்டு விடுவார்கள். இந்த வீடியோவில் இட்லிக்கு சட்னி வகைகள் செய்வது பற்றி விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Rama's Yummy Kitchen
பிரியாணியில் இன்னும் எத்தனை, எத்தனை வித்தியாசமான சமையல் வகைகள் வரப்போகின்றன என்று தெரியவில்லை. இதுவரையும் ஊருக்கு ஏற்றபடி, பிரியாணியில் சேர்க்கும் பொருளுக்கு ஏற்ப விதவிதமான பெயர்களில் பிரியாணி பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. சமைக்கும் வித த்திலும் பிரியாணியின் பெயர் மாறுபடுகிறது. தம் பிரியாணி செய்வதும் ஒரு பெரிய கலைதான். அதிலும் சிக்கன் தம்பிரியாணி செய்வது பற்றி இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது.
குழம்பும் இல்லாமல், வறுவலும் இல்லாமல் இரண்டும் சேர்ந்த கலவைதான் கிரேவி. கிரேவியில் சிக்கன் கிரேவி என்றால் இன்னும் விஷேஷமாக சுவையாக இருக்கும். சிக்கன் கிரேவி செய்வதில் பக்குவத்தை கடைபிடித்தால் சிக்கனுடன் சேர்த்து கிரேவியும் கேரண்டியுடன் ருசியாக இருக்கும். இங்கே சுவையான சிக்கன் கிரேவி வைப்பது குறித்து வீடியோவில் விளக்குகின்றனர். பார்த்து, வைத்து பயன்பெறுங்கள். வீடியோ நன்றி; Suvaithiru
மீன் என்றாலே ருசிதான். சிலருக்கு குழம்பில் போட்ட மீன் சாப்பிடப்பிடிக்கும். மசாலா சேர்ந்த பூ போல வெந்த மீனை சாப்பிடுவது அருமையான அனுபவத்தைத் தரும். சிலருக்கு வறுத்த மீன்தான் பிடிக்கும். அந்த வகையில் சுவையான மீன் குழம்பு வைப்பது எப்படி என்று இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Gomathi's Kitchen
முட்டைக்குழம்புலயும் விதவிதமான செய்முறைகள் இருக்கு. இதற்கு முந்தைய வீடியோவுல ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் முட்டைக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு பார்த்தோம். இப்போ செட்டிநாடு ஸ்டைல்ல எப்படி முட்டைக்குழம்பு வைக்கிறதுன்னு பார்க்கலாம். செட்டிநாடு உணவுகள் எல்லாமே ருசியானவ. அந்த வகையில் முட்டைக்குழம்பும் செட்டிநாடு ஸ்டைலில் ருசியில் அசத்தும். வீடியோ நன்றி; Annams Recipes
முட்டையை பச்சையாக குடிக்கலாம், வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் முட்டையில் இருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும். முட்டையை குழம்பு வைத்து சாப்பிடுவது இன்னும் ருசியாகவும், உடல் நலத்துக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டைக்குழம்பை ரெஸ்டாரெண்ட்களில் வைப்பது போல சுவையாக வைக்கும் முறைபற்றி இந்த வீடியோவில் விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Vidya's Paradise
ஆட்டு இறைச்சியில் ஈரல் என்பது மிகவும் சத்து நிறைந்த ஒன்று. வளரும் குழந்தைகளுக்கு ஈரல் கொடுத்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். நிறைய சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும். சளி போன்ற தொந்தரவுகள் உள்ளவர்களுக்கு உடலை பலப்படுத்துவதற்காக ஈரல் சாப்பிடும்படி மருத்துவர்களும் பரிந்துரைப்பது வழக்கம். ஈரலை வறுவல் செய்து எப்படி சாப்பிடுவது என்று இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Agmal Food
பிரியாணி என்பது ஒரே ஒரு உணவு வகை. அதில் சேர்க்கப்படும் இறைச்சி அல்லது காய்கறி வகை மற்றும் அரிசி வகை ஆகியவற்றைப் பொறுத்து அதன் சுவையும், பெயரும் மாறுபடுகின்றன. காடை இறைச்சி பிரியாணியும் வித்தியாசமான நமது ருசியை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இங்கே வீடியோவில் வீட்டில் குக்கரில் காடை பிரியாணி செய்வது குறித்து விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; The Chennai கூட்டாஞ்சோறு
உப்புமா என்பது எளிய உணவு. மிகவும் விரைவாக செய்து,சுடசுட சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான். விழுப்புரம் ரயில் நிலையத்தில் தினமும் மாலை நான்கு மணிக்கு மேல் சுடசுட உப்புமா விற்பார்கள். அதன் சுவை வித்தியாசமானதாக இருக்கும். அந்த உப்புமாவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வீடியோவில் வித்தியாசமான முறையில் உப்புமாவை ருசியாக சமைப்பது பற்றி விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Tamil Food Corner
கொரோனா தொற்று பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்பது சவாலான பணி. அதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். கீரை போண்டாவை நாம் கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால், வீட்டிலேயே அதை தயாரிப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ. இதை பார்த்து வீட்டில் கீரை போண்டா செய்து அசத்துங்கள். வீடியோ நன்றி; Gowri Samayalarai
