முட்டையை வேகவைத்துக் கொடுத்தால் பல குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். ஆனால், அதையே மசாலா கலந்து கொடுத்தீர்கள் என்றால் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்பார்கள். மணக்கும், ருசிக்கும் மசாலா சேர்க்கப்பட்ட இந்த செட்டிநாடு ஸ்டைல் முட்டை மசாலாவை செய்து நீங்களும் அசத்துங்கள். வீடியோ நன்றி; South indian web channel
குழந்தைகளுக்கு அசைவ உணவுகளில் மிகவும் பிடித்தது சிக்கன் என்று சொல்லாம். சிக்கனை விதம், விதமாக சமைத்துக் கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள். குறிப்பாக மாலை நேரத்தில் சிக்கன் கோலா உருண்டை செய்து கொடுத்தால், அவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சிக்கன் கோலா உருண்டை செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி;Gulf Tamil Life
மீன் சமையலில் பல விதங்கள் இருக்கின்றன. மீன் குழம்பு, மீன் குழம்பு கிரேவி என பலவித சமையல் முறைகள். மீன் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு எச்சில் ஊறும். மீன் என்பது ஆரோக்கியமான கடல் உணவில் முதன்மையானதாகும். சிலருக்கு குழம்பில் வெந்த மீனை விட வறுவல் மீன்தான் மிகவும் பிடிக்கும். இந்த வீடியோவில் மீன் வறுவல் செய்து குறித்து விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; kurinji. com
வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். வெறும் வெந்தையத்தை மட்டும் கொண்டு, கொஞ்சம் வெங்காயம் இதெல்லாம் சேர்த்து அருமையாக சத்துள்ள ஒரு குழம்பு வைத்து அசத்தலாம். ஆம், வெந்தைய குழம்பு வைப்பது பற்றி இந்த வீடியோவில் சமையல் கலைஞர் தீனா அசத்துகிறார். வீடியோ நன்றி; Chef Deena’s Kitchen
மீன்கள் பல வகை இருப்பது போல மீன் குழம்பிலும் பல வகைகள் உள்ளன. ஏரியாவுக்குத் தகுந்தாற்போல, மாநிலத்துக்கு ஏற்றது போல மீன் குழம்பிலும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஒரே மாதிரியான மீன் குழம்பு வைத்து உண்பதைவிட இப்படி வெரைட்டியாக ஏதேனும் சோதனை செய்து பார்க்கலாம். வீடியோ நன்றி; My First View
புளியோதரை என்பது பயணம் செல்பவர்களின் சொர்க்கமான உணவு. ஆம். புளியோதரையின் நீண்ட நேரம் கழித்து உண்ணக்கூடிய அதன் தன்மையால் அது பெரிதும் பலரால் விரும்பப்படுகிறது. புளியோதரை செய்வதிலும் பல குறிப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கோவில்களில் வழங்கப்படும் புளியோதரை போல செய்தால் இன்னும் அதீத சுவையுடன் புளியோதரை இருக்கும். இங்கே சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் புளியோதரை செய்வது குறித்து வீடியோவில் சொல்கிறார்.
வெண்பொங்கல் செய்வதிலும் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகை அன்று வைக்கப்படும் வெண்பொங்கல் என்பது புதிய பச்சரிசியைப் போட்டு பொங்கல் வைப்பார்கள். கோவில்களில் வழங்கப்படும் வெண்பொங்கலில் ஒரு தனி சுவை உண்டு. அதே போல ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிடும் வெண்பொங்கலும் ரெஸ்டாரெண்ட் சமையல் கலை வல்லுநர்களுக்கு ஏற்றார் போல மாறுபடும். இங்கே வீடியோவில் சுவையான வெண்பொங்கல் செய்வது குறித்து விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; En Samayal En Suvai - PRIYA
சிலர் அறுசுவை உணவுகளை தயாரிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு வடை சுடுவது மட்டும் தெரியாமல் இருக்கும். வடை என்ற பெயரில் சுட்டால் வேறு வடிவத்தில் வருகிறதே என்று கவலைப்படுவார்கள். உண்மையிலேயே வடை அதற்கு உரிய வடிவத்தில் எப்படி சுடுவது என்பதை நமது சமையல் கலை வல்லுநர் தாமு அவர்கள் செய்து காட்டுகிறார். வீடியோ நன்றி; Chef Damu
பிரியாணியில் வகை, வகையான, விதம் விதமான ருசிகள் உள்ளன. பிரியாணியில் சேர்க்கப்படும் காய்கறிகள், இறைச்சி வகைகளைப் பொறுத்து அதன் சுவையும், மனமும், ருசியும் ஆளைத் தூக்கும் வகையில் இருக்கிறது. பிரியாணியை சமைப்பதில் கைதேர்ந்தால் மட்டுமே விதவிதமான பிரியாணிகளை செய்வதில் தேர்ச்சி பெற முடியும். இன்றைக்கு இறால் பிரியாணி செய்வது குறித்த வீடியோவைப் பார்க்கலாம். வீடியோ நன்றி; Food Area Tamil
ரசம் என்பது பார்ப்பதற்கு, கேட்பதற்கு ஒரு எளிமையான உணவு போல தோன்றும். ஆனால், ரசம் வைத்திருக்கும் சூத்திரங்களை அல்லது பக்குவங்களைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அதனை சுவையாக வைக்கமுடியும். நாம் உண்ணும் உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு கொஞ்சம்போல் ரசத்தை குடிக்கவோ அல்லது ரசம் சாதமோ சாப்பிட வேண்டியது அவசியம். சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த ரசம் வைப்பது என்பது குறித்து இந்த வீடியோவில் கூறப்படுவதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ நன்றி; Papa's Kitchen
சிக்கன் அதாவது கோழிக்கறி சமைப்பதில் பல வகைகள் உண்டு. கோழி கறி குழம்பு, கோழி சுக்கா வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பெயருக்கு ஏற்றபடி சிக்கன் உணவுகள் எப்போதுமே ருசியில் அசத்தக் கூடியவைதான். இங்கே இணைக்கப்பட்ட காணொளியில் சிக்கன் ஃபிரையை மசாலா தூள்களுடன் சேர்த்து சும்மா அருமையான டேஸ்டில் சமைக்கின்றனர். நீங்களும் செய்து பாருங்கள். வீடியோ நன்றி; Apoorvaas Nalabagam
திண்டுக்கல் நகரில் பாரம்பர்யமான ரெஸ்டாரெண்ட் தலப்பாகட்டு பிரியாணி கடை. இந்த கடையில் தயாரித்து விற்கப்படும் பிரியாணி இப்போது உலக அளவில் பிரியாணி பிரியர்களின் பிரியமான உணவாக ஆகிவிட்டது. சம்பா அரிசி, கன்னி வாடி சந்தையில் வாங்கப்படும் இறைச்சிகள், தனித்தன்மையான மசாலாக்கள் என்று திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணியின் சுவைக்குப் பல தனித்தன்மையான காரணங்கள் உள்ளன. இங்கே காணொளியில் ஈரோடு அம்மாச்சி சமையல் சேனலில் இருந்து திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி செய்து காட்டுகிறார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். வீடியோ நன்றி; Erode Ammachi Samayal
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பரோட்டா உணவு மிகவும் பிரபலம் ஆகிவருகிறது. பரோட்டாவுக்கு ஊற்றப்படும் சால்னாவால் பரோட்டாவின் சுவையை தூக்கிக் கொடுக்கிறது. பரோட்டா,சால்னா இரண்டும் கச்சிதமாக அமைந்துவிட்டால் ருசி அலாதியாக இருக்கும். இந்த வீடியோவில் பரோட்டோ சால்னா செய்வது பற்றி விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Food Area Tamil
மீன்களில் பல வகை இருக்கிறது. கிராமங்களில் ஏரிகள், கிணறுகளில் ஊளி மீன் கிடைக்கும். அந்த மீன் குழம்பு செய்வது அதிலும் கிராமத்துப் பாணியில் மண்சட்டியில் சமைப்பது என்பது, மீனின் ருசியைக் கூட்டும். எப்படி செய்வது ஊளி மீன்குழம்பு இந்த வீடியோவில் பார்க்கலாம். வீடியோ நன்றி; Periya Amma Samayal
விநாயகரை பிள்ளையார், யானைமுகன் என்று வெவ்வேறு பெயர்களில் பக்தர்கள் அழைக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வீட்டில் எல்லோரும் கொண்டாடும் அதே வேளையில் தெருவுக்கு தெரு இருக்கும் விநாயகர் கோவில்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும். அந்த வகையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயர் சதுர்த்தி விழாவின் போது மோதகம் படைத்து வழிபாடு செய்யப்படும். மோதகம் தயாரிப்பது குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது. உங்கள் வீட்டிலும் விநாயகர் சதுர்த்திக்கு மோதகம் செய்து ருசியில் அனைவரையும் அசத்துங்கள். வீடியோ நன்றி; Chettinad Samayal
