பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் கிரேவி செய்யும் முறை

பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் தொக்கு அல்லது கத்தரிக்காய் கிரேவி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். பிரியாணியில் உள்ள மசாலாப் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க கத்தரிக்காயில் உள்ள வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் நலன்கள் உங்களுக்கு உதவும். நம் முன்னோர்களின் சமையல் பாரம்பரியத்தில் இது போன்ற ஆரோக்கியமான உணவு வகைகள் நம்மை ஆச்சர்பயப்பட வைக்கின்றன. வீடியோ நன்றி; Taste Of Chennai

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

விருந்தோம்பல்களில் ஒவ்வொரு மத த்துக்கும் தனிதனி பாணிகள் இருக்கின்றன. இஸ்லாமியர்களின் விருந்தோம்பலில் பிரியாணிக்கு என முக்கிய இடம் வகிக்கிறது. அவர்கள் வசிக்கும் இடம் சார்ந்தும் பிரியாணியின் புகழ் பரவுகிறது. குறிப்பாக ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என்று பிரியாணி வகைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த வீடியோவில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பது பற்றி தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வீடியோ நன்றி; Bismi Samayal

சிக்கன் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கங்க!

சிக்கன் குழம்பு வைக்கிறதுல எக்ஸ்பர்ட் ஆகுறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, முறையாக பெரியவங்க கிட்ட கத்துக்கிட்டா ஈஸியா சிக்கன் குழம்புவச்சு அசத்தலாம். இந்த வீடியோவுல சிக்கன் குழம்பு வைக்கிறது பத்தி ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லித் தர்றாங்க. தெரிஞ்சுக்கங்க.வீடியோ நன்றி; Amma Samayal Videos

சிக்கன் கிரேவி இதே மாதிரி செஞ்சு பாருங்க

சிக்கன் கிரேவி செய்வது பக்குவமாக இருந்தால், அதன் சுவையும் ஆளைத் தூக்கும். இந்த வீடியோவில் கிரேவி செய்யும் பாணியே தனியாக இருக்கிறது. இந்த முறையில் சிக்கன் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள் அப்புறம் இதே போல திரும்ப, திரும்ப செய்வீர்கள். வீடியோ நன்றி; Rockfort samayal

தலைச்சேரி ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படின்னு தெரியுமா?

ஆட்டுக்கறி குழம்புலயும் விதம் விதமான வகை இருக்கு. மதுரையில ஒரு மாதிர ஆட்டுக்கறி குழம்பு செய்வாங்க. சென்னையில ஒரு மாதிரி செய்வாங்க. இந்த வீடியோவுல தலைச்சேரி ஆட்டுக்கறி குழம்பு எப்படி செய்றதுன்னு சொல்றாங்க பாருங்க. வீடியோ நன்றி; Balaji's kitchen

மோர்குழம்பு வைக்கத்தெரியுமா?

மோரில் குழம்பு செய்யலாம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை எப்படி செய்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான கைவந்தகலை. சுவையாகவும், அருமையாகவும் மோர்குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த வீடியோ விவரிக்கிறது. வீடியோ நன்றி; Pebbles Tamil

சுவையான மிளகு ரசம் செய்வது எப்படி?

தமிழர்களின் உணவில் ரசம் இன்றி மதிய உணவு என்பது நிறைவு பெறாது. ஆம்! ரசத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் ரசத்தை மிஸ் செய்ய மாட்டார்கள். சாம்பர் அல்லது குழம்பு சாதத்துக்குப் பின்னர் அதனை செரிக்க செய்யும் மருத்துவ குணங்கள் ரசத்தில் இருக்கின்றன. மிளகு, சீரகம், தக்காளி என எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களைப் போட்டு ரசம் தயாரிக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Praveena's home kitchen

கிராமத்து காடைவறுவல்

கிராமத்து பெரியம்மாவின் காடை கறி வறுவல் எப்படி என்று விளக்குகிறது இந்த வீடியோ. கிராமிய மணம் மிக்க இந்த காடைகறி விருந்தை பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஒரு நாள் காடை கறி விருந்து வைத்து சுவைத்து மகிழுங்கள். வீடியோ நன்றி; Periya Amma Samayal

சுவையான வெண்டைக்காய் வறுவல்

Village Cooking Channel யூடியூப் சேனலில் அண்மையில் வெளியாகி உள்ள வெண்டைக்காய் வறுவல் வீடியோ. முட்டையுடன் சேர்த்து வெண்டைக்காய் வறுவல் செய்வது எப்படி என்ற வீடியோ கலக்கல் அம்சம். வீடியோ நன்றி Village Cooking Channel

மீன் வறுவல் செய்வது எப்படி?

Healthy Food Kitchen என்ற யூடியூப் சேனலில் விதம் விதமான சமையல் வீடியோக்கள் அப்லோட் செய்திருக்கின்றனர். இன்றைக்கு மீன் வறுவல் செய்வது எப்படி என்ற வீடியோவை உங்களுக்கு விருந்தாக்குகின்றோம். வீடியோ நன்றி! Healthy Food Kitchen யூடியூப் வீடியோ

இஸ்ரவேலும் இளநீர் சர்பத்தும்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக இளநீர் வியாபாரத்தில் உள்ள இஸ்ரவேல், இளநீர் வியாபாரம் மட்டும் செய்யாமல் சற்றே மாற்றி யோசித்து இளநீர் சர்பத், இளநீர் ஜெல்லி என அசத்துகிறார். மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் கடை வைத்துள்ள இவரது இளநீர் வெட்டும் ஸ்டைலுக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். வீடியோ நன்றி; Madras Street Food முகநூல் பக்கம்

சமையல் கலைஞர் தாமுவின் அதிரடி அப்பளம் கூட்டு

சமையல் கலைஞர் தாமுவின் கைவண்ணத்தில் அதிரடி அப்பளம் கூட்டு எப்படி செய்வது எனும் வீடியோ. பார்த்து மகிழுங்கள். கருத்துகளை பதிவு செய்யுங்கள். வீடியோ நன்றி; செப் தாமு அவர்களின் யூடியூப் சேனல்

காசிவிநாயகம் மெஸ்

சென்னை திருவல்லிக்கேணியில் 40 ஆண்டுகளாக பேச்சிலர்களின் உணவு சொர்க்கம்