ஆரோக்கிய சுவை அக்டோபர் 24 தலைப்பு செய்திகள்


வேளாண்மை, உணவு,வாழ்வியல் முறை குறித்து அன்றாடம் நிகழும் செய்திகளின் தொகுப்பை வீடியோ வடிவில் ஆரோக்கிய சுவை இணையதளம் வழங்குகிறது. இன்றைய ஆரோக்கிய சுவை தலைப்பு செய்திகள்

ஒரு மாத இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள  நம் 'வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையில் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ஒரு மாதம் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாமை நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு விரிவான செய்தியைப் பார்க்கவும். . 

உறைய வைத்த தேனை சாப்பிடுவது நல்லதா?

தேனை அதன் இயற்கையான தன்மையில் திரவமாக உண்பது நல்லது என்பது பொதுவான கருத்து. ஆனால், இப்போதைய நவீன உலகில் சிலர் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் தேனை வைத்து உறைந்த பின்னர் அதனை மிட்டாய் போல சாப்பிடுகின்றனர். இப்படி ஃப்ரீசரில் வைத்து உறைய வைக்கப்பட்ட தேன் நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விவரங்களுக்கு விரிவான செய்தியைப் பார்க்கவும்

குழந்தை உணவுகளில் உலோகங்கள்?

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையின்படி, ‘குழந்தை உணவுகளில் காணப்படும்  உலோகங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது குழந்தைகளின் வளரும் மூளைக்கு பாதிப்புகளை விளைவிக்கின்றன. ஆர்சனிக், ஈயம், காட்மியம் மற்றும் பாதரசம் போன்ற கன உலோகங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 168 குழந்தை உணவுகளை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, அதில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நச்சு உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தீங்கான இந்த உணவு வகைகளை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால் 15 சதவீதம் உடல் நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்த உலோகங்களை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்குகிறது. இது குழந்தைகளின் வளரும் மூளையை சேதப்படுத்துகிறது.

ஹோட்டல் உரிமையாளர் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்தார் 

வேலூர் அருகே ஆரணியில் தனியார் அசைவ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி ,பரோட்டா சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது.இதையடுத்து  ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த  7ஸ்டார் ஓட்டல் உரிமையாளர் .அம்ஜத் பாட்ஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய உணவகத்தின் உரிமையாளர், உயிரிழந்த சிறுமியின் குழந்தைக்கு  ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

உணவு பற்றாக்குறையால் வாழ்வாதாரம் சீர்குலைவு 

வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன,.  அந்நாட்டின் ஊடகங்கள், ஒரு கிலோ வாழைப் பழம் 45அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம்) விற்பதாக தெரிவித்திருக்கின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை மூடியது. இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது. வட கொரியா தனது உணவு, எரிபொருள் மற்றும் உரத்திற்கு சீனாவை சார்ந்துள்ளது. மேலும் வட கொரியாவின் அணு திட்டங்களால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளாலும் அந்நாடு தடுமாறி வருகிறது.சீனாவில் உணவு பஞ்சமானது அந்நாட்டின் மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக ஐநாவின் புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஐநா நடத்திய ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

-பா.கனீஸ்வரி 

#Arokyasuvai  #ArokyasuvaiFoodNews   #ArokyasuvaiNews


Comments


View More

Leave a Comments