ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் நெறிமுறைகள் வெளியீடு


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் 

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 

வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.அதன்படி இந்த திட்டத்துக்கு 65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

அனைத்து வருவாய் கிராமங்களிலும் தலா ஒரு செயல்விளக்கத் திடலை அமைக்க உதவி வேளாண்மை அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை செயல்விளக்க திடல் அமைக்க வேண்டும் நெல் உள்ளிட்ட தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணைய் வித்துகள், பருத்தி போன்ற பணப்பயிர்கள் என்று ஏதேனும் ஒரே ஒரு பயிரை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Must Read: நாளிதழ்களில் வெளியான வேளாண் செய்திகள்

செயல்விளக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிர் அக்கிராமத்தில் அதிகபட்ச பரப்பில் சாகுபடி செய்யப்படும் முதன்மை பயிராக இருக்க வேண்டும், விதைமுதல் அறுவடை வரை வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில்நுட்பங்களையும் மேற்கொள்ள வேண்டும். 

ஒரு கிராமம் ஒரு சாகுபடி திட்டம்

செயல் விளக்கத் திடலில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்களை அந்த கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

செயல்விளக்கத் திடலில் சாகுபடி விவரங்களை விளம்பரபலகையில் எழுதி வைக்க வேண்டும். செயல்விளக்கத் திடலில் மேற்கொள்ளப்பட்ட பயிரில் இருந்து குறைந்த பட்சம் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். செயல்விளக்கத் திடல் குறித்த விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர் உரிய முறையில் சேகரிக்க வேண்டும். செயல்விளக்க திடலின் புகைப்படங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்றும் வேளாண்மை துறை குறிப்பிட்டுள்ளது. 

செயல்விளக்கத்  திடலுக்குத் தேவைப்படும் இடுபொருட்கள், கடனுதவி, பயிர்காப்பீடு உள்ளிட்டவற்றை விவசாயிகள் பெறுவதற்கு உதவி வேளாண் அலுவலர் உதவி செய்ய வேண்டும். செயல்விளக்கத் திடலின் வெற்றி குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேளாண்மை துறை நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-பசுமை சுந்தர் 

#onevillageonecultivation #tnagri #tngovernmentscheme 

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

 


Comments


View More

Leave a Comments