நாளிதழ்களில் வெளியான வேளாண் செய்திகள்
நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளின் இணையதளத்தில் வெளியான வேளாண்மை குறித்த செய்திகளின் தொகுப்பு இந்த பகுதியில் தொடர்ந்து இடம் பெறும்.
பெண் விவசாயியிடம் மாணவியர் பயிற்சி பெற்றனர்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அதிக நிலக்கடலை உற்பத்தி செய்த பெண் விவசாயிடம், வேளாண் கல்லுாரி மாணவியர் அனுபவ பயிற்சி பெற்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயற்கை வேளாண் கண்காட்சி நடந்தது.
இதில், நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண் விவசாயி பழனியம்மாள், அதிக நிலக்கடலை உற்பத்தி செய்த பண்ணை என்ற முறையில் ரொக்க பரிசு, 10,000 ரூபாய் பெற்றார். சாதனை படைத்த பெண் விவசாயி... குறித்து தகவலறிந்த, தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர் நேரடியாக... பழனியம்மாள் வயலுக்கு சென்று அனுபவ பயிற்சி பெற்றனர். அங்கு மாணவியருக்கு பழனியம்மாள் விளக்கமளித்தார்.
Must Read: தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்; ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு
கடலை பயிரிடுவதற்கு முன், இயற்கையாக நிலத்தை தயார் செய்வது, நிலக்கடலை பயிரிடுவது, களை எடுப்பது, மண் அணைப்பது, தண்ணீர் கட்டுவது உள்ளிட்ட விபரங்களை, பெண் விவசாயி.. விளக்கமளித்தார். மேலும், அவரது வயலில் உள்ள விபரங்களை நேரடியாக மாணவியர் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டனர்.
நன்றி; தினமலர் நாளிதழ்
வேளாண்உணவுத் தொழில்நுட்பமன்றம்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்உணவுத் தொழில்நுட்பமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையின்கீழ் செயல்படும் ஸ்டாா் ட்அப் டி.என். நிறுவனம், புத்தொழில்கள், புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல், உயிரித் தொழில்நுட்பட் மையத்தின் இயக்குநா் என்.செந்தில் இந்த மன்றத்தைத் தொடங்கிவைத்தாா்.
புத்தொழில், புத்தாக்க நிறுவனத்தின் திட்டட் இயக்குநா் சிவராஜா ராமநாதன், அரசு அதிகாரிகள், தொழில்முனைவோா் வேளாண்துறையினா் தொடக்க விழாவில் பங்கேற்றனா். வேளாண், உணவுத் தொழிலில் ஈடுபடும் புத்தொழில்முனைவோருக்கு இந்த மன்றத்தில் இருக்கும் வழிகாட்டிகள், ஆய்வாளா்களள், தொழில் துறை வல்லுநா்கள், தொழில் வளா் காப்பகங்களைச் சோ்ந்தவர்கள் தேவையான உதவிகளை வழங்குவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்டாட்அப்களுக்கு தொழில் வளா் காப்பக வசதி அளிப்பது தொடர்பாக பெரியகுளம் ஹாா்டிஹாா் பிசினஸ் இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாயா கிரீன்ரீ ன்ஸ் சா்வீசஸ் நிறுவனம் வடிவமைத்த, வேளாண்மையில் பன்முகப் பணிகளை நிறைவேற்றும் ‘மயாபோட்ஸ் ’ என்ற ரோபோ
அறிமுகம் செய்யப்பட்ட து. ஸ்டாா்ட்அப் டி.என். இணைதுணைத் தலைவா் எஸ்.தினேஷ், தொழில்நுட்பட் வணிகக் காப்பக தலைமைச் செயல் அதிகாரி ஞானசம்பந்தம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நன்றி; தினமணி நாளிதழ்
பழப்பயிர் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டது.
Must Read: இனி நானும் ஒரு விவசாயி…. சித்த மருத்துவர் சிவராமனின் அனுபவ பதிவு!
இக்கருத்தரங்கில் தோட்டக்கலை பழப்பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் சாகுபடியில் உயர் தொழிநுட்பமான அடர்நடவு முறை, மகசூல் அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்நுட்ப கருத்துக்கள் விவசாயிகளுக்கு காட்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இக்கருத்தரங்கில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் போன்ற துறைகளின் விவசாய விளைப்பொருட்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தது.
நன்றி; நியூஸ் 18 தமிழ்நாடு
தொகுப்பு; பசுமை சுந்தர்
Comments