நெல் அறுவடை செய்த நிலத்தில் என்ன பயிரிடப்போகிறீர்கள்?


தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் பின் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள்  மற்றும் நெல்லை மாவட்டத்தில் பிசாணம், பின்பிசாணம் ஆகிய பருவங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணிகள் ஜனவரி கடைசிவாரம் முதல் நடைபெற்று வருகிறது. 

இன்னும் சில பகுதிகளில் அறுவடை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. நெற்பயிரிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நெல்தரிசில் பயறு வகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Must Read: மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?

இப்போது நாம் நெல் தரிசில் சாகுபடி செய்வதற்கு சில குறிப்பிட்ட ரகங்கள் குறித்த தகவலை குடிமியான்மலை வேளாண்விரிவாக்க மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ADT-3, ADT-6, 7 KKM-1, VBN-6  ஆகிய உளுந்து  ரகங்களில் ஏதேனும் ஒன்றை ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் விதைக்க வேண்டும். பச்சை பயறு சாகுபடி செய்ய வேண்டும் எனில் ADT-3,VBN-6  ஆகிய ரகங்களில் ஏதேனும் ஒன்றை பயிரிடலாம். ஹெக்டேருக்கு 30 கிலோ பச்சைப்பயறு விதைக்க வேண்டும்.

அதிக அளவு விதைகள் முளைக்க வேண்டும் எனில் நிலத்தில் சரியான ஈரப்பதம் இருக்க வேண்டும்.  எனவே, நெல் அறுவடை செய்வதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு நிலத்தில் உளுந்து அல்லது பச்சை பயறு விதைக்க வேண்டும்.

அறுவடைக்கு முன்னர் பயறு வகைகள் விதைக்கமுடியாமல் போனால் கவலை இல்லை. நெல் அறுவடை செய்த பிறகு நிலத்தில் நீர் பாய்ச்சி சரியான ஈரப்பதத்தில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு 10 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு கைவிதைப்பு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அல்லது அக்ரி கிளினிக் மையங்களை அணுகவும். 

-பசுமை சுந்தர் 

 #payarusagupadi  #ulundusagupadi  #afterpaddy

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments