தினை அரிசியில் லட்டு செய்வது எப்படி #CookingTipsTamil


லட்டு என்றால் பிடிக்காதவர் யாரும் இல்லை. சிறுதானியங்களில் இருந்தும் இப்போது விதம் விதமான ருசிகளில் லட்டு செய்யலாம். குறிப்பாக தினை அரிசியில் லட்டு செய்வது எளிதானது. அதற்கு முன்பு தினை அரிசியில் உள்ள சத்துகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டால் நிச்சயம் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.

தினை அரிசியில் உள்ள சத்துகள்

தினை அரிசியில் புரதம், நார்சத்துகள், இரும்பு சத்துகள், மெக்கனீசியம் ஆகியவை அதிகம் உள்ளன. நார் சத்து அதிகம் இருப்பதால் தினமும் ஒரு வேளை தினை அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் வயிறு பிரச்னைகள் தீரும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும். அரிசி உணவை தவிர்ப்பவர்கள், தினை உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் உடல் தசைகளின் வலுவுக்கு உதவும்.

தினை அரிசி லட்டு

இந்த லட்டு சுவை மிக்கது மட்டுமின்றி சத்து மிக்கது. தினை லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம். தினை அரிசி தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே ரவை தேவையான‍ அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

தினை அரிசியையும், ரவையையும் முதலில் தனித்தனியே வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தினை அரிசியை சூடு போக ஆறவைக்கவும். பின்னர் நெய்யில் முந்திரிபருப்பு, பாதம் பருப்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஆறவைத்த தினை அரிசியுடன் ரவை, ஏலக்காய் தூள், நாட்டுசர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் ஏற்கனவே நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி,பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் இந்த மாவில் சூடு செய்யப்பட்ட நெய்யை கலக்கவும். இதில் இன்னும் சுவை கூட்ட வேண்டும் எனில் தேன் கலந்து லட்டாக பிடித்து வைக்கவும். குழதைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் இதனை சாப்பிடலாம். தினை அரிசியில் உள்ள சத்துகள் பெரியவர்களுக்கு உகந்தது.

-பா.கனீஸ்வரி

#CookingTipsTamil  #FoxtailMillet  #Millet #தினைஅரிசி #தினைலட்டு #தினை


Comments


View More

Leave a Comments