கோவையின் காளான் மசாலா செய்வது எப்படி தெரியுமா?


தமிழ்நாட்டின் உணவுகளைப் பற்றி  பேசும்போதெல்லாம், உடனே நினைவுக்கு வருவது சூடான இட்லி, தோசை, மெதுவடை மற்றும் செட்டிநாடு கோழி உணவுகள்தான். இந்த பிரதான உணவுகள் தமிழ்நாட்டின் ஒரு சில உணவுகள் மட்டும்தான். 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின்  நகரங்களில் வீதிகள் தோறும் தெருவோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில்தான் அந்தந்த ஊரில் பாரம்பர்யமான உணவுகள் கிடைக்கும். 

இப்படித்தான் கோவையில் காளான் மசாலா மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. கோவையின் தெருக்களில்  மாலை நேரத்தில் சுடச்சுட காளான் மசாலா விற்பனையாகும். காளானுடன் முட்டைக்கோஸ் மசாலாப் பொருட்கள் சேர்த்து சுடச்சுட பரிமாறப்படுகிறது. 

கோவை ரோட்டுக்கடை காளான் மசாலா செய்வது எப்படி?

சரி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் முட்டைக்கோஸ், காளான்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  பின்னர் ​​ஒரு பெரிய கொள்கலனை எடுத்து, நறுக்கிய காளான்கள் மற்றும் முட்டைக்கோசுடன், சோளப்பொடி, மைதா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு  சேர்க்கவும். பின்னர் அனைத்தையும் கைகலால் கலக்கவும். முழுமையாக கலக்கவும். சுமார் 25 நிமிடங்கள் அதை ஒரமாக வைத்து விடவும். 

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கலந்து வைத்துள்ள காளான் கலவையை எடுத்து எண்ணெயில் போடுங்கள். காளான் தங்க பழுப்பு நிறம் வரும் வரை காத்திருங்கள்.

இதையும் படியுங்கள்; கேரள ஸ்டைல் முருங்கை கீரை முட்டை பொடிமாஸ்

கிரேவியாக சமைக்க வேண்டும் எனில் சீரகம், பெருஞ்சீரகம், பிற மசாலாப் பொருட்கள், தக்காளியை ஆகியவற்றை மிக்சியில் பேஸ்ட் போல அரைக்கவும். 

பின்னர் ​​ஒரு கனமான கடாயில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும். பின்னர் இதில் தக்காளி, மசாலா பொருட்கள் அடங்கிய பேஸ்டை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும். சுமார் 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க வேண்டும். பின்னர்  காளான் மற்றும் முட்டைக்கோஸ் கலவையை போட்டு 5 நிமிடம் வாணலியை மூடி வைக்கவும் வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். 

நினைவில் கொள்ளுங்கள், முட்டைக்கோசு மற்றும் காளான்கள் அவற்றில் அதிக தண்ணீர் சத்து உள்ளதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. குறைந்த அளவு சேர்த்தால் போதுமானது. 

-பா.கனீஸ்வரி 

#CoimbatoreMushroomMasala #MushroomMasala #KovaiFoods

 

Comments


View More

Leave a Comments