தேனி-போடி சாலையில் கூரைக்கடை விக்னேஷ் மெஸ்


தென்மேற்கு பருவக்காற்று இப்போது தேனிப்பக்கம் அருமையாக வீசுகிறது. இந்த தருணத்தில் வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் தொடங்கப்போகிறது. இப்போது தேனி-போடி வழியாக செல்பவர்கள் அவசியம் இந்த விக்னேஷ் மெஸை மறந்து விடாதீர்கள்.

கூரைக்கடை என்றும் விக்னேஷ் மெஸ் என்றும் அழைக்கபடும் இந்த சிறிய உணவகம் ஆனால், ருசியில் மிகச்சிறந்த உணவகம் தேனி-போடி சாலையில் கோடங்கிபட்டி என்ற ஊரில் இருக்கிறது. இது ஒரு அசைவ உணவகம். இப்போது சில்லென்ற காற்றும், அவ்வப்போது மழையும் பெய்யும் இந்த தருணத்தில் இந்த உணவகத்தில் அசைவ உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

மதியம் 12 மணிக்கு உணவகம் திறக்கப்படுகிறது. மாலை 4 மணி வரை அத்தனை இருக்கைகளும் ஃபுல் ஆக நிரம்பி வழிகிறது. ருசிக்கு இந்த கூட்டமே சாட்சி. இங்கு குறிப்பாக நாட்டுக்கோழி கறி குழம்பு, நாட்டுக்கோழி கறி, மட்டன், சுக்கா, மீன், நண்டு என அனைத்து விதமான அசைவ உணவுகளும் சுடசுட கிடைக்கும்.

நாட்டுக்கோழிக்கு என்று ஸ்பெஷலான உணவகம் இது. அதே போல இரவும் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்த உணவகம் திறந்திருக்கும். அப்போதும் சாப்பாடு, டிபன் வகைகள் அசைவ குழம்புகளுடன் ஒரு அள்ளு அள்ளலாம். வயிற்றுக்கு கெடுதல் செய்யாத சுவையான மசாலாப்பொருட்களுடன் செய்து தினந்தோறும் விருந்து வைத்து அசத்துகிறார்கள். இந்த விக்னேஷ் மெஸ்ஸுக்கு ஒருமுறை போனவர்கள், திரும்ப, திரும்ப அங்கே போய் சாப்பிடுகின்றனர் அந்த அளவுக்கு இந்த உணவகத்தின் ருசி கவர்ந்திழுக்கிறது. தேனிப்பக்கம் போனால் மறக்காமல் போய்வாருங்கள். 


Comments


View More

Leave a Comments