சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 99 கி.மீ உணவகம்


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 99 கி.மீ உணவகம்

இந்தியாவின் மிகவும் அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலைக்கு முதன்மையான இடம் உண்டு.

இரவு, பகல் எந்த நேரமும் பிஸியான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திகழ்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையை மாநிலத்தோடு  இணைக்கும் உயிர்நாடியான சாலை இது என்றும் சொல்லலாம்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 99 –வது கிலோ மீட்டரில் அரபேடு கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் பாரம்பர்ய இயற்கை உணவகம் 99 கி.மீ காஃபி மேஜிக் என்ற பெயரில் செயல்படுகிறது.   இந்த உணவகத்தில் பெரும்பாலும் சிறுதானிய உணவகங்கள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. பயணத்தின் இடையே ஆரோக்கியமான உணவை உண்ணாவிட்டால், நமது உடல் நலத்தைக் கெடுத்து விடும் அபாயம் உள்ளது. அவ்வளவுதான் பயணமே பாழ் ஆகிவிடும். ஆனால், பயணத்தை இனிமையாக்கும் வகையில் இந்த 99 கி.மீ உணவகம் செயல்படுகிறது.

வயிற்றுக்கு கெடுதல் செய்யாத சுவையான சிறுதானிய உணவகங்கள், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவிலையில் கிடைக்கிறது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உயர்ரக கார்களில் பயணிக்கும் பல விஐபி வாடிக்கையாளர்களை இந்த உணவகம் பெற்றுள்ளது.

கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இயற்கை உணவகங்கள் மீது அக்கறை அதிகரித்துள்ள நிலையில்  இந்த 99 கி.மீ காஃபி மேஜிக் உணவகத்துக்கும் அதிக தேவை எழுந்துள்ளது. மீண்டும் வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து  தொடங்க உள்ள நிலையில் இந்த உணவகமும் பிஸியாகப் போகிறது.

இந்த உணவகத்தின் மதிய உணவுகளில் சிறப்பான மெனுக்கள்

வரகரிசி வெஜ் பிரியாணி, சாமை சாம்பார்சாதம், குதிரைவாலி தயிர்சாதம், புதினாசாதம், மிளகு சீரக  ரஸம் சாதம், வெந்தைய கீரை கூட்டு ஆகியவைதான்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த உணகவகத்தில் உண்ணுவதற்காகவே ஒருமுறை பயணம் போனால் கூட தப்பில்லை. அந்த அளவுக்கு இந்த உணவகத்தின் தரமும், சுவையும் ஆளைக் கட்டிப்போடுகிறது.

உணவகத்துடன் இணைந்த இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் சூப்பர் மார்கெட்டும் செயல்படுகிறது.


Comments


View More

Leave a Comments