பாமயனின் பொதிகைச்சோலையில் முதல் அறுவடை....
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பாமயன் ஐயாவின் தலைமையில் பொதிகைச்சோலை என்ற இயற்கை வாழ்வூர் 100 பேர்கள் கொண்ட குழுவாக உருவாக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், சிவகிரியில் இயற்கை எழில் சூழ உள்ளது இயற்கை சூழ் கிராமம்(organic eco village).பொதிகை மலை சாரலில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவான சோலையில் முதல் அறுவடை வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது.
பொதிகைச் சோலையின் முக்கிய நோக்கம் 100 குடும்பங்களுக்கு தேவையான நஞ்சில்லாத உணவை பூர்த்தி செய்வது மற்றும் தற்சார்பு வாழ்கைமுறையை நோக்குவது. பொதிகைச்சோலை காட்டுப்பகுதி என்பதால் புல்புதர் மூடி வெறும் தரிசாக கிடந்தது.
ஆரம்பத்தில் அனைவருக்கும் மிக சிரமமாக இருந்தது இதை எப்படி விவசாய நிலமாக மாற்றுவது என்று. ஆனால் பாமயன் ஐயாவோ நிலத்தின் மேடு பள்ளங்களை ஆராய்ந்து, நீரோட்டங்களை கவனித்து, மண்ணின் தன்மையை அறிந்து எந்த பகுதில் எதை விதைத்தால் சிறப்பாக வளரும் என்பதை ஆராய்ந்து அதன்படி விவசாயத்தை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்; தாய் வீட்டைப் போல கொரோனா சிகிச்சையும், உபசரிப்பும்…
இதற்க்கு சதிஷ் மூலமாக உருவாக்கப்பட்ட குழு பாமயன் ஐயாவின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக செயல்பட்டனர். தக்கபூடு பசுந்தாள் உரமாக பயிரிட்டு பின்பு மடக்கி உழுது அதன் பின்பு நெல் பயிரிடப்பட்டது.
முதல் முறை என்பதால் விளைச்சல் குறைவாக வரும் என்று எண்ணி இருந்தோம். ஆனால் பாமயன் ஐயாவின் பல ஆண்டுகால இயற்கை விவசாய யுக்தியால் பயிற்கேற்ற இயற்கை இடு பொருள் இட்டு பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்தன.
நெல்மணிகள் அனைத்தும் முத்து முத்தாக வளர்ந்து நின்றன. பொதிகைச்சோலையின் முதன் முறை விளைச்சலை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி காட்டி விட்டார். இப்போது 100 குடும்பங்களுக்கு தேவையான அரிசி அவர்களின் வீட்டைநோக்கி செல்ல காத்து கொண்டு இருக்கிறது.
நன்றி; செய்தி, படங்கள்; பொதிகைச்சோலை முகநூல் பக்கம்
#OrganicEcoVillage #Podhigaicholai #Pamayan #ActivitistPamayan
Comments