தாய் வீட்டைப் போல கொரோனா சிகிச்சையும், உபசரிப்பும்…


திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் தினந்தோறும் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருகின்றனர். 

பக்களவிளைவுகள் இல்லாத நம் வாழ்வியலோடு இணைந்த சிகிச்சைகள், உணவோடு தொடர்புடைய சிகிச்சை முறைகள் என்று கொரோனா சிகிச்சைக்கான சிறந்த சிகிச்சை மையமாக திருப்பத்தூர் சித்த மருத்துவ மையம் திகழ்கிறது. 

கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு என்றே சிறப்பு வாய்ந்த தனி மையமாக செயல்படுகிறது. கொரோனாவால் சிகிச்சை பெறுவர்களுக்கான உணவு திட்டத்தின் படி உணவு அளிக்க தனி சமையல் அறையும், சுவையான பாரம்பர்ய உணவுகளும் தயாரித்து அளிக்கப்படுகின்றன. இது குறித்து ஆரோக்கிய சுவை தளத்தில் முன்பே குறிப்பிட்டிருக்கின்றோம். 

இப்போது இந்த சிகிச்சை மையத்துக்கு கூடுதல் சிறப்பாக இங்கு சிகிச்சை பெற்று சென்ற பெண் அளித்துள்ள பேட்டி சித்த மருத்துவமையத்தின் மருத்துவர் விக்ரம் உள்ளிட்டோர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. 

பேட்டியை காண இந்த யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும்;

https://youtu.be/IztvdhPGQcw

வீடியோ உதவி நன்றி; மரு.வி.விக்ரம் குமார்

#TirupatturGovernmentSiddhaHospital   #TirupatturSiddhaHospital #CoronaSidhaTreatmet 

 


Comments


View More

Leave a Comments