வளரிளம் பருவத்தினருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்…


வளர்ச்சி முடக்கம் என்பது என்ன?

புரதசத்து குறைபாட்டின் விளைவுகள் 

புரதசத்து உணவுகள் அவசியம் 

கிளினிக்கில் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் பெண்மணி. அவரது மகளுடன் வந்திருந்தார் . இருவருமே அவரவர்க்கு தேவையான உயரமும் இல்லை எடையும் இல்லை. இது போன்று உயரமும் சரியாக வளராமல் எடையும் சரியாக இல்லாமல் இருப்பதை STUNTING வளர்ச்சி முடக்கம் என்று கூறுவோம் .தொடர்ந்து பல ஆண்டுகள் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைக்காத நிலையில் தான் இப்படி உயரமும் உடல் எடையும் நலிந்து காணப்படும்

அவரிடம் புரதச்சத்து உட்கொள்ளல் குறித்து கேட்டறிய விரும்பினேன் .தாயும் மகளும் இங்கிருக்க தந்தை வெளிநாட்டில் கட்டடக் கூலி வேலை செய்து வருகிறார் 

உரையாடல் தொடங்குகிறது

"மா.. நீங்க வாரம் ஒரு தடவயாச்சும் ஏதாச்சும் அசைவம் சாப்டுவீங்களா?"

"எப்பவாச்சும் ஒரு தடவ மீன் எடுப்போம் நண்டு எடுப்போம் சார்.  வாரம் ஒரு தடவனு கணக்கெல்லாம் இல்ல சார்"

"மட்டன் மா?"

"மட்டன் லாம் விலை ஜாஸ்தி சார். கிலோ 800 ரூபாய்க்கு விக்குது. அதெல்லாம் சாப்டுட்டு கொல்ல காலம் ( வெகுநாட்கள்) ஆச்சு சார்"

Must Read: 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8500 பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய்..

"அப்ப நண்டு எவ்வளவு ?"

" அது கிலோ 130 ரூபாய் சார். அதை வாங்கி வச்சு சாப்டுவோம்"

"கோழி மா?"

" எனக்கு மூலம் இருக்கு சார் அதனால ப்ராய்லர் சாப்ட மாட்டேன். நாட்டுக் கோழி எடுக்க மாட்டோம். விலை அதிகம் சார்"

"நீங்க சாப்டாட்டி என்ன மா.. உங்க மகளுக்கு கோழி வாங்கி வாரம் ஒரு தடவ நூறு கிராமாவது கொடுங்க"

" சரி சார்"

"மட்டன் மாசம் ஒரு தடவையாவது ஈரலோட சேர்த்து கால் கிலோ வாங்கி ரெண்டு பேரும் சாப்டுங்க.. தினமும் ஒரு முட்டை சாப்டுங்க"

"சரி சார் இனிமே சாப்டுறோம்"

"இப்ப மூணு வேளை என்னமா சாப்புட்றீங்க"

"மூணு வேளையும் சோறு தான் சார். காலை ஆக்கிட்டா மூணு வேளைக்கு வச்சுப்போம்"

வளர்ச்சிகுறைபாடு காரணங்கள்

"உங்களுக்கு புரதச்சத்து கண்டிப்பா வேணும் மா . நீங்க தினமும் முட்டை சாப்டுங்க. மட்டன் மாசம் ஒருமுறை .. கோழி வாரம் ஒரு முறை எடுத்து சாப்டுங்க.. தானா எடை போடும்.. நல்ல உயரம் வளரும் பாப்பா"

"சரிங்க சார்"

மக்களுக்கு இருக்கும் வறுமை விலை கூடுதலாக உள்ள மாமிசத்தை அவர்களை நெருங்க விடுவதில்லை. எனவே விலை மலிவான மாமிசத்தையாவது அவர்கள் வாரம் ஒருமுறையேனும் உண்பதும். நாளொரு முட்டை உண்பதும் கட்டாயத் தேவையாக இருக்கிறது. மாமிசம் உண்ணாத மக்கள் தங்களின் புரதச்சத்துத் தேவைக்கு

கடலை, முளை கட்டிய பயறு, கொட்டை வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு / பீன்ஸ் வகைகள், சோயா பயறு/ டோஃபு, முதலியவற்றைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

Must Read: இளைய தலைமுறையினரின் நலம் நாடும் ”மூலிகையே மருந்து”

ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் பருவமடைதல் காலத்தை ஒட்டி  உடல் வளர்ச்சி குறிப்பாக உயரம் வளர்தல் வேகமாக நிகழும். இதை பருவமடைதல் கால அதிவேக உயர வளர்ச்சி என்கிறோம். இந்த காலங்களில் சரியான அளவு புரதச்சத்து என்பது இன்றியமையாதது 

ஆண்களுக்கு 14 வயது முதல் 18 வயது வரை பெண்களுக்கு 12 வயது முதல் 16 வயது வரை உயர வளர்ச்சி ஏற்படும். பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் பூப்பெய்தியது தொட்டு அதிகபட்சம்  அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே உயர வளர்ச்சி இருக்கும்.

இத்தகைய காலங்களில் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்கத் தவறிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உயரம் குன்றிய நிலையே ஏற்படும். புரதச்சத்து குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியம். 

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#STUNTING  #proteindeficiency #teenageproteindeficiency

ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments