சித்த மருத்துவ அனுபவ நுணுக்கங்களைச் சொல்லும் தமிழில் வெளியாகும் முதல் புத்தகம்…


பாரம்பரிய சித்த மருத்துவம் முழுவதுமாக கல்லூரி பாடத்திட்டத்திற்குள் கொண்டு வரப்படவில்லை. பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கும், பட்டதாரி சித்த மருத்துவர்களுக்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழரின் மருத்துவ முறையை பாதுகாக்க முடியும். 

இதன் அடிப்படையில், சென்னை செங்குன்றத்தை சார்ந்த பாடியநல்லூர் சண்முகம் (மரபுவழி சித்த மருத்துவர்) தனது வாழ்நாள் அனுபவங்களை சித்த மருத்துவ துறைக்கு தருவதற்கு இசையமைத்தார். அவருடன் இணைந்து கோரோனா காலத்திலிருந்து அதற்கான வேலையை செய்து வருகிறேன். 

அவருடன் இணைந்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை கூட வெளியிட்டுள்ளோம். தற்போது அடுத்த நடவடிக்கையாக "சித்த மருத்துவ பயிற்சி கையேடு" என்ற 400 பக்கங்களை கொண்ட அருமையான புத்தகத்தை எழுதி முடித்துள்ளோம். அவர் தயாரித்து மருந்து கொடுத்து பார்த்ததில் சிறந்ததாக கருதப்படும் மருந்துகளை பட்டியலிட்டுள்ளோம். 

Must Read: உடல் எடை குறைப்புக்கான யூடியூப் லைவ் பயிற்சிகள்..

ஒவ்வொரு மருந்தும் சுத்தி ஆரம்பித்து, பற்ப செந்தூரமாக எப்படி செய்து முடிப்பது என்று தெளிவாக அனுபவத்தை விளக்கி உள்ளார். பித்த நாடி தராசு போல நடுவில் இருக்கும், அது முன்னோக்கி சென்றால் ஒரு மருந்து, பின்னோக்கி சென்றால் மற்றோர் மருந்து, என்ற நுட்பத்தை முதன்முதலில் வெளியிட்டுள்ளோம். 

சித்த மருந்துகள், வெப்ப வீரியம், தட்ப வீரியம், மித வீரியம் என பிரித்து, எதை எதை எப்படி சேர்த்தால் அதன் வீரியம் மாறுபடும், எதை எந்த வகையான நாடிநிலையில் பயன்படுத்துவது என்ற அனுபவ நுணுக்கங்களை முதன்முதலாக உலகத்துக்கு சொல்லி இருக்கிறது இந்த நூல். 

ஒரே சொரியாசிஸ் நோயாளிக்கு, கடந்த மாதம் நாடி பின்னோக்கி இருந்ததால் வெட்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த மாதம், நாடி முன்னோக்கி இருந்தால் வெட்பாலை எரிச்சலை உண்டாக்கும், அதற்கு வேறு தைலம் பயன்படுத்த வேண்டும். வங்கமும் தாமிரமும் தோல் நோய்க்காக கொடுப்பதுதான். ஆனாலும், நாடியின் அடிப்படையில் கொடுத்தால் பக்க விளைவுகள் வருவதில்லை. 

தனது அனுபவத்தின் அடிப்படையில் பயன்படுத்திய சேர்க்கைகள் (மருந்து கலவைகள்) அனைத்தையும் மனம் திறந்து ஆசிரியர் இதில் எழுதி உள்ளார். அனைத்து சித்த மருத்துவர்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷம் இது. 

இதைபோல மற்ற பாரம்பரிய சித்த வைத்தியர்களும் தங்களது அனுபவங்களை சித்த மருத்துவர்களுக்கு சொல்ல முன்வரவேண்டும், பட்டதாரி சித்த மருத்துவர்கள், வைத்தியர்களுடன் இணைந்து இந்த முயற்சிகளை எடுக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இப்படிப்பட்ட புத்தகங்கள் வழியே ஆசிரியர்கள், படிப்பவர்களுடன் உரையாடிகொண்டே இருப்பர். 

Must Read:பாரம்பர்ய சித்தமருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... மூத்த பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!

தரமான சித்த மருத்துவர்களை உருவாக்கி விட்டால், மக்களுக்கான சேவை தரமாக கிடைக்கும். இந்த புத்தகம் அந்த வேலையை கண்டிப்பாக செய்யுங்கள். இதன் ஆசிரியர் சித்த மருத்துவர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார். 

இந்த புத்தகத்தை வெளியிடும் அமெரிக்காவை சார்ந்த சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் அமைப்பின் சேவை பாராட்டத்தக்கது. சித்த மருத்துவத்தை உலக அளவில் எடுத்து செல்ல மேலும் பல அமைப்புகள் முன்வர வேண்டும். 

புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை ( 25 ஆகஸ்ட் 2023 -வெள்ளிகிழமை) மாலை 6-8 மணி வரை) சென்னை தியாகராய நகர் சி.டி நாயகம் பள்ளிவளாகத்தில் நடைபெறுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன். 20% தள்ளுபடியில் இந்த புத்தகத்தை (வெளியீடு தள்ளுபடி) வாங்க 9444903533 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். 

நன்றி; சித்த மருத்துவர் திரு. அருள் அமுதன்.

#siddhamedicine  #siddha  #siddhamedicinebook

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments