உரிய பரிசோதனை, உணவுமுறை மாற்றமே உடல் நலத்தின் அடிப்படை…


மரணம் எல்லோருக்கும் வர்றது தான். அதை தடுக்கவோ தள்ளி போடவோ தான் மருத்துவம் இருக்கு... வரும் முன் காப்போம், வரும் முன் காப்போம்ன்னு அடிக்கடி வலியறுத்துகின்றோம். யாராவது கேக்குறீங்களா?

இயல்பான ஆரோக்கிய உடல் என்பது 35 வயசு வரைக்கும் தான். 35 வருஷமா வேலை செய்த உறுப்புகள் அதுக்கு மேல டயர்டாக தான் செய்யும். முட்டி தேயும், இதயம் திணறும், கிட்னி தடுமாறும். நல்லா சாப்பிட்டு எக்சர்சைஸ் செய்து ஸ்ட்ரெஸ் இல்லாம தூங்கி எழுறவங்களுக்கே அதெல்லாம் ஆகும். 

தண்ணி, சிகிரெட், தூக்கமின்மை, தவறான உணவுகள், ஸ்ட்ரெஸ் இருந்தா கண்டிப்பாகத் திணறும்... அதுக்காக எல்லாமா செத்து போறாங்க? இல்ல..., ஒழுங்கா செக்கப் செய்து எது டேமேஜ் ஆகிட்டிருக்குன்னு புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்தா மாதிரி உனவை மாத்திக்கிறவங்க, மருந்து எடுக்கிறவங்க கூடுதல் காலம் பிழைக்கிறாங்க.

Must Read: கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.18000 மதிப்புள்ள உதவிகள்… 

தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் ஆளுமைகள், பிரபலங்கள் யாரும் செக்கப் செய்துக்காம இருக்கிறதில்ல... பல்வேறு பதவிகளில் இருக்கும்  பல .முக்கிய பிரமுகர்கள் என்னுடைய பேஷண்ட்ஸ் அத்தனை பேரும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க, பிபி கட்டுப்பாட்டில் வைக்க, சுகர் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் எடுத்துக்கிறாங்க.

 

உடல்நல ஆரோக்கியம் முக்கியம்

இதுக்கெல்லாம் மருந்து எடுக்கலைன்னா தான் அது இரத்த குழாயில் அடைச்சு மாரடைப்பை உண்டு பண்ணும். தெளிவானவங்க யாரும் கொஞ்சமும் கவனகுறைவா மருந்து எடுக்காம இருக்கிறதில்ல. மருந்துகள் சரியா எடுக்காம முறையாக உடல் நிலையை கவனித்துக் கொள்ளாமல் இருந்த யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்கூட சொற்ப வயதில இறந்து போறாங்க என்னும் போது.. நீங்களும் நானும் எம்மாத்திரம்?

நம்ம மனசு என்னிக்கும் 20ல தான் இருக்கும். ஆனால் உடம்பு அப்படி இல்லியே.. மனசுல இருக்க தெம்பை மட்டும் வச்சுட்டு எனக்கு ஒன்னும் ஆகாது, ஒன்னும் ஆகாதுன்னா பொசுக்குன்னு ஒரு நாள் கிளம்ப வேண்டியது தான்.. 

40க்கு மேல வருஷத்துக்கு ஒரு டைம் மருத்துவ செக்கப் செய்ங்க.எதெல்லாம் திணறுதுன்னு பார்த்து அதை சரி செய்ய மருந்துகள் அல்லது உணவுகளை சரி செய்றதுன்னு பார்த்து உங்களை காப்பாத்திக்கோங்க... 

இன்னிக்கு கிட்னியே வேலை செய்யலைன்னாலும் டயாலிஸிஸ் மூலமா 20 வருஷம் உயிரோட வச்சிருக்காங்க. இதயமே நின்னாலும் பேஸ் மேக்கர் மூலமா ஓட வைக்கிறாங்க... மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருக்கு. அது எல்லாமே நம்மளை காப்பாத்த தான் இருக்கு.. மருத்துவம், செக்கப் இதெல்லாம் பார்த்து பயப்பட வேண்டியதில்ல.... புரிஞ்சுகிட்டா கூடுதலா கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்.. அவ்ளோ தான் வேற என்ன சொல்றது.

Saravana Kumar

#preventivecare #healthylifestyle #medicalcheckup 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments