முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்க இதையெல்லாம் செய்தால் போதும்…


முடி உதிர்வில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க  கீழ்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு பலன் அளிக்கும். மேலும் இது இயற்கை முறையிலான வழிமுறைகள் என்பதால் இதனால் உங்கள் முடி செழிப்புற வளரும். பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.

கறிவேப்பில்லை சாரம்

தினமும் மாலை நேரத்தில் ஒரு கைபிடியளவு புதிதாக பறித்த கறிவேப்பிலைய உருவி 1/2லி தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்,கண்ணாடி (அ) பீங்கான் பாத்திரம் மட்டும் பயன்படுத்தனும்ங்க. மறுநாள் காலையில் சில்வர் பாத்திரத்துக்கு மாற்றி நன்றாக கொதிக்கவிடவும் 200 ml வந்ததும் வடிகட்டியவுடன்  நெய் - 1 spoon சேர்த்து பொறுக்கும் சூட்டுக்கு வந்த பின்பு டீ போல குடிக்கவும்ங்க தொடர்ந்து 21 நாட்கள் இவ்வாறு செய்ய முடி உதிர்வு பிரச்னை 100% சரியாகும்ங்க.

Must Read: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு...

ஹேர் பேக்

செம்பரத்தைப் பூ, இலை ஒரு கைபிடியளவு, வேப்பிலை 2 ஈர்க்கு எடுத்து பிய்த்து போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கூட Flax Seeds (ஆளிவிதை) -1 spoon, மிளகு - 1/2 spoon நுணுக்கி போட்டு 8 மணிநேரம் மூடி வைக்கவும்ங்க,மறுநாள் காலையில் கைகளால் நன்றாக கசக்கி காட்டன் துணியில் வடிகட்டி முடிக்கு பேக் போடவும்ங்க.

                              (அல்லது)

வெண்டைக்காய் - 10nos (வேகவைத்தது), மிளகு - 1/2 spoon,கெட்டித் தேங்காய் பால்-100 ml (அ) தேங்காய் எண்ணை - 2 spoon சேர்த்து நன்றாக அரைத்து காட்டன் துணியால் வடிகட்டி முடிக்கு பேக் போடலாம்ங்க. பேக் போட்டு 1/2 மணிநேரம் கழித்து தலைமுடி அலசவும்ங்க.முடி பட்டு போல இருக்கும்ங்க. 

பாரம்பர்ய முறையில் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு

ஷாம்பூ 

முடி அலச தேவையானயளவு சீயக்காய் பொடி அதேயளவு வெந்தயப்பொடி எடுத்து சாதம் வடித்த கஞ்சி (அ) தயிர் விட்டு கலந்து முடிக்கு தேய்த்து அலசவும்ங்க. ஆண்கள் - புதன், சனி/ பெண்கள் - செவ்வாய், வெள்ளி தலைக்கு குளிக்கவும்ங்க.

Must Read: பாரம்பர்ய சித்தமருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... மூத்த பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!

எண்ணைய்

சுத்தமான தேங்காய் எண்ணை(500ml), நல்லெண்ணை (200 ml), விளக்கெண்ணை (200 ml), முருங்கை எண்ணை (100 ml) கலந்த பின் இதை தினமும் முடிக்கு பயன்படுத்தவும்ங்க. 

தேவைப்பட்டால் மேற்சொன்ன எண்ணையில் கருவேப்பிலைப் பொடி - 4 Spoon, நெல்லிப்பொடி - 2 spoon, வேப்பிலைப் பொடி - 2 spoon, வெந்தயப்பொடி - 2 spoon, கருஞ்சீரகப் பொடி - 2 spoon, மிளகுப் பொடி - 1 spoon, கிராம்பு பொடி - 1 spoon, ஆளி விதைப்பொடி- 1 Spoon சேர்த்து 7 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்த பின் பயன்படுத்தலாம்ங்க.

தலைவார மரச் சீப்பை பயன்படுத்துங்க.பொடுகு, முடி உதிர்வு,முடி வறட்சிக்கு, தலையரிப்பு, இள நரை,முடி வலுவில்லாமல் இருப்பதற்கு சிறந்தொரு தீர்வுங்க. ஒரு மாதத்தில் நீங்களே ஆச்சரியப்படும்படி தீர்வு இருக்கும்ங்க.

-ஜமுனா ராஜேஷ்

#curehairfall  #hairfallissue  #howtocareyourhair #curehairfallnaturally 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments