கைப்பக்குவத்தால் சிறந்து விளங்கும் காரைக்குடி பலகாரங்கள்
காரைக்குடி என்றாலே அந்த ஊரின் உணவும், உபசரிப்பும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு உப பெயராக காரைக்குடி என்ற பெயரைப் போட்டு உணவு தயாரிப்பது ஒரு பேஷன் ஆகி வருகிறது. காரைக்குடி என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஊர்.
காரைக்குடி பலகாரங்களும் சர்வதேச புகழ் பெற்றவை. பலகாரங்ககள் தரமாக, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்து சாப்பிடக் கூடியவை. உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை.
தன் கணவருக்கு ஏற்பட்ட விபத்தில் துவண்டு போகாமல் அதிலிருந்து விஸ்வரூபமெடுத்து உழைத்து இன்று காரைக்குடியின் முக்கிய இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் செளந்தரம் ஆச்சி
காரைக்குடியில் உள்ள செட்டிநாடு இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பவரான செளந்தரம் அம்மாள் ஒரு தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், காரைக்குடி பலகாரங்கள் தயாரிப்பை பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் தயாரிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள் தரமான உணவுப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. கைப்பக்குவம் என்று சொல்லப்படும் உணவு தொழில் நேர்த்தியுடன் தயாரிக்கப்படுகிறது. தயாரித்த நாளில் இருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்படி காரைக்குடி பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மாவு உருண்டை, அச்சுமுறுக்கு, கைமுறுக்கு, தேன்குழல், தட்டை போன்ற நொறுக்குதீனிகள் காரைக்குடியில் பிரபலமானவை. 365 நாட்களும் காரைக்குடியில் பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக செளந்தரம் அம்மாள் சொல்கிறார். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடுதல் வேலை இருக்கும் என்கிறார். ஆன்லைன் வாயிலான உணவு வர்த்தகம் அதிகரித்ததில் இருந்து காரைக்குடி பலகாரங்களுக்கும் கூடுதல் மவுசு வந்துள்ளது. திருமண சீர் வரிசையுடன் கொடுப்பதற்கான ஆர்டர் என்று எப்போதுமே பிசியாக இருக்கிறார் செளந்தரம் அம்மாள்.
-பா.கனீஸ்வரி
#KaraikudiSweets #KaraikudiFoods #KarikudiSnaks
Comments