தோல் நோய்களுக்கு நறுவிலி,புற்றுநோய்க்கு புங்கம்!


நாம் வாழும் இயற்கையை சுற்றி உள்ள தாவரங்கள், மரங்கள், செடிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் பொதிந்துள்ளன. பல மருந்துகளுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன. சித்த மருத்துவ ஆர்வலர் மற்றும் சித்த மருத்துவ ஆலோசகர் திரு.மரியபெல்சின், நமது இணையதளத்தில் தொடர்ந்து இத்தகைய தாவரங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் எழுதி வருகிறார். இன்று இரண்டு தாவரங்கள் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் சொல்கிறார். 

 ​நறுவிலி பழம் 

நறுவிலி... எங்கள் பகுதியில்(சென்னை மாதவரம்) இருப்பதாக என் கவனத்துக்கு தெரியவந்தது. சில நண்பர்கள் நறுவிலி பழம்... விதை கேட்டிருந்தனர். ஒன்றிரண்டு பழங்களே பழுத்திருந்ததால் அப்போது என்னால் அதிகம் சேகரிக்க முடியவில்லை. பின்னர் ஒரு முறை  பார்த்தபோது பெரும்பாலான காய்கள் பழங்களாகி இருந்தன. அவற்றை சேகரித்து வந்தேன்.

ஏற்கெனவே நான் சேகரித்து வந்த பழங்களை நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டேன். கூடவே நறுவிலி இலைகளையும் எடுத்து வந்தேன். பழம் மற்றும் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு காய்ச்சி தோல் நோய் உள்ள இடங்களில் தடவினால் பலன் கிடைக்கும் என்பதால், அதன்படி செய்து பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது. 

தோல்நோயைத் தீர்க்கும் நறுவிலி பழம்

நறுவிலிப்பழம் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறுவதுடன் பேதி மருந்தாகச் செயல்பட்டு குடலில் உள்ள புழுக்கள் எளிதில் வெளியேற உதவக்கூடியது. பழம் மற்றும் இலை காம உணர்வை அதிகரிப்பதுடன் சிறுநீர் எளிதாக பிரியவும் உதவும் என்ற தகவல் அறிந்தேன்.

மூட்டு வலி, மூச்சிரைப்பு, வறட்டு இருமல், தொண்டை வறட்சி, சிறுநீரகக் கோளாறுகள், தோல் நோய்கள், மண்ணீரல் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் நறுவிலிப் பழம் சிறப்பாகச் செயல்படுகிறது.குறிப்பு: ஊரடங்கு முடிந்தபிறகு நறுவிலிப்பழம் கேட்டிருந்த அன்பர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன். 

 புங்க மரம் 

புங்கை மரம் குறித்து பலரும் அறிந்திருக்கலாம். இதற்கு புங்கன், புங்கம், பூந்தி என  பல பெயர்கள் உண்டு. மூங்கிலுக்கு அடுத்தபடியாக புங்கை மரம்தான் எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியது. புங்கை நம் உடலுக்கு பல நற்பலன்கள் அளிக்கக் கூடியதாகும். 

மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். அத்தகைய ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்தபடியாக புங்கை மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஆக்சிஜனை அதிகரிக்கும் புங்க மரம்

மேலும் இந்த புங்கை, மூங்கில் மரங்களின் காற்று நம் மீது வீசும்போது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனின் அளவு அதிகமாகி நம் உடம்பில் உள்ள கேன்சர் செல்களை வளர விடாமல் (ஒவ்வொருவர் உடம்பிலும் உள்ள கேன்சர் செல்களை) ஸ்லீப்பர் செல்லாகவே முடக்கி வைக்கும் தன்மை படைத்தவை. 

அது மட்டுமல்லாமல் மற்ற சில்லறை நோய்களையும் பக்கத்தில் அண்ட விடாது. (இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளன. அது சாதாரண பரிசோதனையில் தெரியாது. அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பிறகுதான் தெரியும்).

இதுமட்டுமல்லாமல் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்க்கு புங்கை நல்லது. நீரிழிவினால் ஏற்படும் தாகத்தை தீர்க்க புங்கம்பூக்களை குடிநீராக செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

   -எம்.மரியபெல்சின் 

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#PongamiaPinnata #Pungam  #CordiaDichotomaFruit #NaruvaliFruit

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 


Comments


View More

Leave a Comments