உடல் எடையை குறைக்கும் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியம்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடல் எடையை பாரமரிப்பது என்பது பெரும் சவாலானதாகவே இருக்கிறது. பொது ஊரடங்கு காரணமாக பூங்காங்கள், கடற்கரை அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
பல நாட்களாக நடைபயிற்சி மேற் கொள்ளாமல் சிலர் கூடுதலாக எடை போட்டு விட்டனர். உடல் எடையை பராமரிப்பது பல வகைகளிலும் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.
சரியான உணவு முறை, போதுமான இரவு தூக்கம் ஆகியவை உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துடன் கீழ் கண்ட வழிமுறைகள் வாயிலாகவும் உடல் எடையை குறைக்கலாம்.
பப்பாளிக்காய் பொரியல்
பப்பாளிக்காய் பொரியல், கூட்டு செய்து சாப்பிடலாம். தினமும் காலையில் கைப்பிடி பெருஞ்சீரகத்தை ஒரு லிட்டர் கொதிக்கும் நீரில் போட்டு சூடு ஆறியதும் அதை அன்றைய தினம் முழுவதும் குடிக்கலாம்.சுரைக்காயைச் சமைத்தோ, ஜூஸாக செய்தோ வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள்; பனைவெல்லத்தை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து காலையில் பல் துலக்கியதும் அருந்த வேண்டும். தேநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். இவற்றில் எதையாவது ஒன்றைச் செய்தால் போதும்.
வாழைத்தண்டு சாறு
வாழைத்தண்டு அல்லது அருகம்புல் சாறு போன்றவற்றை பருகி வரலாம். வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கலாம். வெள்ளை வெங்காயத்தை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.
கொள்ளுப்பயறை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து இந்துப்பு சேர்த்துக் கொள்ளவும். அதில் தினம் மூன்று டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியதும் மோர் சேர்த்துக் குடிக்கலாம்.
வெள்ளைப்பூசணிக்காயுடன் சிறிது ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடிக்கலாம். ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும்.
கேரட் ஜூஸ் அவ்வப்போது அருந்தி வந்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் கரையும்.அன்னாசிப்பழத்தை ஸ்நாக்ஸ் நேரங்களில் சுவைத்து சாப்பிட்டு வரலாம். முடிந்தால் முன்கூட்டியே அதில் ஓமம் சேர்த்து சாப்பிடலாம்.
பொதுவாக மேலே சொன்ன குறிப்புகள் வயிற்றுச் சதையை குறைக்கும்.
-எம்.மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#RawPappayaCurry #PappayaCurry #PappayaPoriyal #WeightReduceFood
Comments