பனைவெல்லத்தை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?


ஜீனி எனப்படும் வெள்ளைச்சர்க்கரையில் சர்க்கரை நோய் எனும் ஆபத்து ஒளிந்திருக்கிறது. வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வது பல தீங்குகளுக்கு வழிவகுக்கும் என்பதை கண்கூடாக பார்த்து வருகின்றோம். 

வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை உபயோகித்தால் அதனால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமான பலன்கள் ஏராளம் உள்ளன. கருப்பட்டியில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவ ஆலோசகர் திரு.மரியபெல்சன் தந்துள்ள தகவல்கள் நமக்கு பெரும் அளவு நன்மை தரக்கூடியவை. 

பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டியில்`வைட்டமின் பி' சத்து  உள்ளது. கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், மக்னீசியம்  உள்ளிட்ட சத்துக்கள்  நிறைந்திருப்பதுடன் அமினோ அமிலங்களும்  நிறைந்துள்ளன. 

மேலும் பல்வேறு வகையான சத்துகள் நிறைந்த பனைவெல்லத்தைச் சாப்பிடுவதால் இதயம், மண்ணீரல் கோளாறுகள் சரியாகும். உடல்வீக்கம், ரத்த அழுத்தம்  இருப்பவர்களும்  பனைவெல்லம் சாப்பிடலாம். இது ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுப்பதுடன்  தோலுக்கு பளபளப்பை தரும். 

கருப்பட்டியில் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகள் உறுதியாகும். சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது.சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கப் பெறும்.

பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெறுவதுடன் கருப்பை ஆரோக்கியம் பெறும். கிராமங்களில் இன்றைக்கும்கூட  இது நடைமுறையில் உள்ளது.  

இதேபோல், சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறுகள் நீங்கும். ஆண்மை வீரியமூட்டுவதில் கருப்பட்டியின் பங்கு அளப்பரியது. சீனிக்குப் பதிலாக கருப்பட்டி சேர்த்த காபி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 

ஆனால், இன்றைக்கு கருப்பட்டி என்ற பெயரில் சர்க்கரைப்பாகில் நிறமூட்டிகள் சேர்த்து விற்கிறார்கள். எனவே, நாம் வாங்குவது, உண்பது கருப்பட்டிதானா? என்பதை உறுதிசெய்துவிட்டு வாங்கி பயன்படுத்துங்கள்.

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#Karuppatti #PanaiVellam  #PalmSugar  #HealthySweetOfKaruppatti 

 

 

 


Comments


View More

Leave a Comments