இரும்பு சத்து குறைபாடும் தீர்வும்…


இரும்பு சத்து நமது உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும். நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான மனநிலை, தசை வலிமை மற்றும் ஆற்றலுக்கு சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இரும்புச்சத்து முக்கியமானது.

நமது உடலின் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் ஒரு பகுதியை இரும்பு சத்துதான்உருவாக்குகிறது. ஹீமோகுளோபின் நமது இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.

இரும்புச்சத்து குறைபாடு 

இரும்புச்சத்து குறைபாடு உலகளவில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். எனினும்  குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள்,  சிறுநீரக கோளாறுக்காக டயாலிசிஸ் பெறுபவர்கள் ஆகியோருக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே இவர்கள் உணவில் இருந்து போதுமான இரும்புச்சத்தை பெற வேண்டும்.

Must Read:டெங்கு பாதிப்பில் இருந்து மீள உதவும் கரிசலாங்கண்ணி கீரை…

இரும்புச்சத்து குறைபாட்டிற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. போதுமான அளவு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணாதது, இரும்பை சத்தை நமது உடல் கிரகிப்பதில் சிக்கல் மற்றும் இரத்த இழப்பு ஆகியவை இதில் அடங்கும். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களில் ஏதேனும் ஒன்று நமது உடலில் தேவையான அளவு இரும்புச்சத்தை இருப்பதை குறைக்கலாம்.
இரும்பு சத்து நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் 

சோர்வு, சோம்பல் மற்றும் பலவீனம் ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். உங்களுக்கு மூச்சுத் திணறல் இருக்கலாம் அல்லது தலைசுற்றல் மற்றும் லேசான தலைவலி ஏற்படலாம். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கும் விஷயங்களை நினைவில் கொள்வதற்கும் சிரமம் ஏற்படலாம். இதனால் பள்ளியிலோ அல்லது வேலையிலோ மோசமாகன செயல்பாடை கொண்டவர்களாக இருப்பார்கள். 

Must Read: எந்த வகை காய்ச்சல் என கண்டறிவது எப்படி ?

தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.  ஆண்மை குறைவு இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு மட்டும் அல்ல, பிற நிலைமைகளாலும் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரும்பு சத்துள்ள உணவுகள் 

நம் உணவில் இருந்து இரும்பு கிடைக்கிறது. இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகள் போன்ற விலங்குகளின் இறைச்சியில் இரும்பு கிடைக்கிறது. முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் இலை கீரைகள் போன்ற தாவர உணவுகளில் இரும்பு காணப்படுகிறது. 

தேநீர், காபி, ஒயின் உள்ளிட்ட  பானங்கள் இரும்புச்சத்தை சரியாக உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இது போன்ற உணவுகளை அளவோடு உட்கொள்வது நல்லது, 

-ரமணி 

#iron #Irondeficiency #symptomsofirondeficiency #ironrichfoods 


Comments


View More

Leave a Comments