டெங்கு பாதிப்பில் இருந்து மீள உதவும் கரிசலாங்கண்ணி கீரை…


சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.  இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

கற்ப மருந்து

இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML -  Acute Myeloid Leukemia) போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளன. இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

Must Read: எந்த வகை காய்ச்சல் என கண்டறிவது எப்படி ?

இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை,  கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.  பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.  "கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்" என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.

கரிசலாங்கண்ணி கீரையின் பலன்கள்
 

அதே போல மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும். வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் பேற்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். 

வெள்ளை கரிசாலை பலன்கள்

வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். வெள்ளை கரிசாலை  சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள். அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். 

உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பில் குணமாகாது என்று குறிப்பிட்ட பல நோய்களில் ITP (Idiopathic Thrombocytopenic Purpura) என்பது வெள்ளை அனுக்களே சிகப்பு தட்டணுக்களை அழிக்கக்கூடிய ஒரு வகையான Autoimmune Disease ஆகும்.அப்பேற்ப்பட்ட வியாதியை நமது வள்ளலார் பெருமனார்  சொன்ன இந்த ஞான மூலிகை உடன் தூதுவளை கலந்து கொடுக்கையில் 25 நாட்களில் குணமடைந்தது.

17 வருடமாக இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை கொடுக்கையில் 25 நாளில் முழுவதுமாக குணமடைந்து. இதை வைத்தே கரிசாலை மற்றும் தூதுவளை காயகல்ப மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணரலாம்.

டெங்கு காய்ச்சலை குணமாக்கும் 

அதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் இந்த கரிசாலையில் Gold nanoparticles என்று சொல்லப்படும் தங்க நானோ துகள்கள் உள்ளது. அதேபோன்று தூதுவளையில் Silver nanoparticles என்று சொல்லப்படும் வெள்ளி நானோ துகள்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே. டெங்கு காய்ச்சல் பல உயிர்களை கொன்று குவித்தது. டெங்கு பாதித்தவர்கள் உயிர் பிரிய முக்கிய காரணமாக இருந்தது Platelets என்று சொல்லப்படும் இரத்த தட்டணுக்கள் குறைந்ததுதான். 

இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் அதிகம் இல்லை. அதே நேரத்தில் கரிசலையின் உதவிக்கொண்டு ஒரே நாளில் இரத்தத்தில் தட்டணுக்களை அதிகரித்து டெங்கு காய்ச்சலை சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது. ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலை சாறு கலந்து கொடுக்கையில் ஒரே நாளில் 50,000 எண்ணிக்கையில் உள்ள தட்டணுக்கள் 1,50,000-மாக உயர்ந்து தட்டணுக்கள் அதிகமானது தெரியவந்துள்ளது. 

Must Read:உடல் எடைகுறைப்பு உணவு முறையை பின்பற்றிய பெண் ஒருவரின் அனுபவ பகிர்வு…

கரிசாலை கலந்த இளநீரை வைத்தே டெங்குவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றிள்ளேன். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் வள்ளலார் பெருமானே அவர் கூறிய இந்த ஞான மூலிகையை வைத்து மருந்து செய்கையில் புற்றுநோய் அல்லாமல்  Liver Cirrhosis என்று சொல்லக்கூடிய கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களையும் முழுக்க குணப்படுத்த முடிகிறது. 

காச நோய், சக்கரை நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் கரிசாலை முக்கிய பங்களிப்பு தந்துள்ளது என்பது எனது ஆய்வில் தெரியவந்துள்ளது. கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். 

முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து. இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். 

வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ் வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர்  இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.

கரிசாலையின் பயன்களை பற்றியும் மருத்துவ குணப்பற்றியும் வார்த்தைகளுள் அடக்கிவிட முடியாது. அதுமட்டுமன்றி கரிசாலையை உண்டு மக்கள் தங்களின் ஞான நிலையை அடைய ஓர் ஊன்றுகோலாக இருக்க விரும்பிய வள்ளலார் பெருமான் இதனை கற்ப மூலிகை என்று கூறியுள்ளார்.

-ஜமுனா ராஜேஷ்

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments