
உடல் எடைகுறைப்பு உணவு முறையை பின்பற்றிய பெண் ஒருவரின் அனுபவ பகிர்வு…
உடல் எடையை குறைப்பதற்காக நான் கடந்த 1ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி கீழ் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றினேன். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த உணவு முறை எனக்கு பொருத்தமாக இருந்தது அதனால் நான் பின்பற்றினேன் உங்கள் உடல் வாக்குக்கு ஏற்றவாறு நீங்கள் உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். பின்பற்றும் முன்பு உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உணவு முறைகள் குறித்து உங்கள் நுண்ணூட்ட சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
காலை உணவு
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நாட்டு பசு நெய் எடுத்து உருக்கி சாப்பிட்டேன் நெய் சாப்பிட்ட பிறகு அரை லிட்டர் வெதுவெதுப்பான நீர் அருந்தினேன் பிறகு காலை நடை பயிற்சி 10000 அடிகள் எடுத்து வைத்து நடந்தேன். நெய் சாப்பிடுவதால் எனக்கு வயிற்று பகுதியில் தசை குறைய உதவியாக இருந்தது.
நடைபயிற்சி முடித்து ஒரு மணி நேரம் கழித்து காலை உணவாக தேங்காய் பனைவெல்லம் சிறிது , மற்றும் கோவக்காய் ,பழங்களில் வாழைப்பழம் சாப்பிட்டேன். ஏதாவது ஒரு நாள் மாதுளை பழம் சாத்துக்குடி திராட்சை ஆகியவையும் எடுத்துக் கொண்டேன்.
Must Read: இயற்கை சூழலில் இனிதே நடைபெற்று முடிந்த மூலிகை மருத்துவ பயிற்சி…
காலை உணவாக இயற்கை உணவு மட்டுமே எடுத்துக் கொண்டேன். என்னுடைய இயற்கை உணவு பெரும்பாலும் தேங்காய் ஏதாவது ஒரு காய் அல்லது ஏதாவது ஒரு பழம் அதுவாகவே இருக்கும் . ஸ்மூதி அவுல் கலந்து பழ கலவையை தவிர்த்து விடுவேன்
மதிய உணவு
பெரும்பாலும் நீர் காய்கறிகள் பொறியல் அவியல் மற்றும் தினமும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை மதிய உணவாக கட்டாயமாக எடுத்துக் கொள்வேன் புரதத்திற்கு நான் அசைவ உணவு எடுத்துக்கொள்வேன் பெரும்பாலும் கடல் மீன் இருக்கும். புரதச்சத்து உங்கள் எடைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் அதாவது ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்று கணக்கிட்டு தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை அரிசி உணவு
50 கிராம் பாரம்பரிய அரிசியை வேகவைத்து வடித்த சாதம் எவ்வளவு வருகிறது அவ்வளவு சாப்பிட்டுக் கொள்வேன்.50 கிராம் அரிசிக்கு மேல் பயன்படுத்த மாட்டேன் ஒரு நாளைக்குமதியம் ஒருவேளை மட்டும் அரிசி உணவு உட்கொள்வேன்.
சாதம் சமைக்க முடியவில்லை எனில் பார்லி தோசை அல்லது இட்லி பாரம்பரிய அரிசி கஞ்சி சேர்த்துக்கொள்வேன். மாவுச்சத்து நிறைந்த உணவு பெரும்பாலும் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வேன் ஒரு தோசை இரண்டு இட்லி ஒரு சப்பாத்தி அது போன்று நீர் காய்கறிகள் பொரியல் குறைந்தது 250 கிராம் இருக்கும் சமையலுக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் எண்ணெய் மரச்செக்கு தேங்காய் எண்ணெய்.சில நேரங்களில் மரச்செக்கு நல்லெண்ணெய் கடுகு எண்ணெய் பயன்படுத்துவேன்.
Must Read: உரிய பரிசோதனை, உணவுமுறை மாற்றமே உடல் நலத்தின் அடிப்படை…
மாலையில் கட்டாயமாக 10000 அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வேன் . ஏதாவது ஒரு நாள் டீ அல்லது காபி குடிப்பேன் இரவு உணவு எப்பொழுதும் உண்பதில்லை . நான் இனிப்பு வகைகளை சாப்பிடுவதில்லை 90 சதவீதம் தவிர்த்து விட்டேன் இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையில் எனக்கு 18 நாளில் எடை 3 கிலோ குறைந்துள்ளது
நான் மீண்டும் வலியுறுத்துவது, இந்த உணவு முறை எனக்கு பொருத்தமாக இருந்தது அதனால் நான் பின்பற்றினேன் உங்கள் உடல் வாக்குக்கு ஏற்றவாறு நீங்கள் உணவு முறைகளை பின்பற்றிக் கொள்ளுங்கள் மேலும் இத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்வது கட்டாயம். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
பொறுப்புத்துறப்பு; இது ஒரு அனுபவ ரீதியிலான ஆலோசனை குறிப்பு மட்டுமே. உடல் எடை குறைப்பு மேற்கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
#weightloss #weightlossfooddiet #dietforweightloss
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments