உடல் எடை குறைப்புக்கு இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்…


உடல் எடையை குறைக்க இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங் என்ற விரத முறை பலன் தருகிறது என்று அனுபவப்பூர்வமாக சிலர் கண்டறிந்துள்ளனர். முகநூலில் மருத்துவர் திரு.சங்கர் அவர்கள் தானே இதனை பின்பற்றியதாக கூறி அது குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

அந்தப் பதிவை இங்கு தருகின்றோம். இது அவருடைய அனுபவத்துக்கும், உணவுமுறைக்கும் ஏற்றதாக இருக்கிறது. இதனை பின்பற்றுவோர் தகுந்த மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கின்றோம். இது ஒரு மருத்துவ ஆலோசனை குறிப்பு மட்டுமே. 

அண்மையில் நடைபெற்ற என் பள்ளி கோல்டன் ஜுப்ளி மீட்டில்   நீ டாக்டர் தானே ஏன் இப்படி குண்டாகி விட்டாய் என்றனர்  என் இருதய டாக்டர் உடல் பருமனை குறைத்தால்தான் ரத்தம் அழுத்தம் இறங்கும் என்றார் கரிசனத்துடன் எனக்கு டயட் அடவைஸ் வேறு கொடுத்தார்.

Must Read: புற்றுநோய் குறித்த 15 முக்கிய கேள்விகளும், பதில்களும்…

என்னடா இது இந்த உடலை பழைய நிலைக்கு கொண்டு வர இயலாதா என்று நொந்து கொண்டேன் என் மனையாளிடம்  ஓகே நான் யு டியூபில் இது பற்றி படித்தேன் இன்டர் மிடன்ட் ஃபாஸ்டிங்( intermittent fasting ) தான் சரியான வழி என்றாள் குறும்பாக. 

எங்கள் டாக்டர் குழுமத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி. நாங்கள் இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங் குருப் ஆரம்பித்துள்ளோம் அதில் சேருங்கள் என்று என் டாக்டர் நண்பர்கள் கூறினர். 

விளக்கம் 

ஒரு நாளின் 24 மணி நேரத்தில், உங்களுக்கு வசதியாக இருக்கிற ஏதேனும் ஒரு எட்டு மணி நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த எட்டு மணி நேரத்தில் மிதமான அளவில் ஒரு நாளைக்கு உங்களுடைய உடலுக்குத் தேவையான கலோரிகளுக்குள் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.இது  சாப்பிடும் நேரம் (eating window) எனப்படும் 

உடல் எடையை குறைக்கும் முறை

இந்த நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உணவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும். இது  விரத நேரம்( fasting window) எனப்படும் இதன் போது பசி உணர்வு வந்தால், அரிசி உணவு எடுக்காமல் கிரீன் டீ அல்லது சுகர் இல்லாத ஜுஸ் பருகலாம் 

தாகத்தைத் தணிக்க மற்றும்  பசி உணர்வை முறிக்க வெண்ணீர் அருந்தலாம்.    கடை பிடிக்க இயலாத நேரத்தில் வருத்த பட வேண்டாம் அக்டோபர் மாதம் இதை நான் கடைபிடிக்க ஆரம்பித்தேன். இப்போது பத்து கிலோ குறைந்து விட்டது. என்னுடைய தினப்படி வேலைகள் தடைபடவில்லை. 

மருத்துவ விளக்கம் 

நம் உடம்பு இயங்க சக்கரை சத்து அவசியம். நாம் அதிகப்படியான சுகர் உணவு உண்ணும் போது அவை நம் உடலில் கொழுப்பு சத்தாக சேமிக்கபட்டு விடுகிறது. அதுதான் உடல் பருமனுக்கு காரணம். விரதத்தின் போது அந்த கொழுப்பு சத்து எனர்ஜியாக (கீட்டோன்) மாற்ற பட்டு உடலால்   எனர்ஜியாக  உபயோகிக்க பட்டு கொழுப்பு கரைகிறது.

இதுதான் நாம் இளைப்பதற்கு மூல காரணம். இதனால் மூளை சுறுசுறுப்பாகிறது உடல் சுமை குறைப்பால் தெம்பாகிறது. முக்கியமாக என்ற மருந்தும் இல்லை.  திருமூலர் உணவே மருந்து என்றார் பல ஆண்டுகளுக்கு முன்பே. ஓகேயா  ஆரம்பபிப்போமா விரதத்தை, விடை கொடுப்போமா உடல் பருமனுக்கு. வாழ்த்துக்கள் நல்ல உடல் கட்டை பெற்று நலமாக வாழுங்கள்.

பொறுப்பு துறப்பு; இது ஒரு மருத்துவ ஆலோசனை குறிப்பு மட்டுமே. இதனை பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறவும். 

டாக்டர் சங்கர்

#intermittentfasting  #weightloss #weightlosstreatment  

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 
 

Comments


View More

Leave a Comments