டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரத்த தட்டணுக்கள்… சரி செய்ய பப்பாளி இலை சாறு முக்கியம்…


தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. 

தமிழ்நாட்டில் நாள்தோறும் தலா  40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதுவரை தமிழ்நாட்டில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்த்துள்ளனர். இப்போது தமிழ்நாடு முழுவதும்  500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.  1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து டெங்கு பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகளில் அரசின் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

Must Read: உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் பயிற்சிகள்

அதே போல தமிழ்நாடு முழுவதும் 23,000 பணியாளர்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த நிலையில் டெங்குவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திரு. பிரகாஷ் மூர்த்தி எம்பிபிஎஸ்.,எம்டி அவர்களின் அனுபவ பதிவை இப்போது பார்க்கலாம். 

சென்னையில் பணி புரியும் மன்னார்குடியைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு, சில தினங்களுக்கு முன்பு  அதிக காய்ச்சல் மற்றும் உடம்பு வலி இருக்கவே, சென்னையில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளார்.காய்ச்சல் குறையவில்லை என்றால் இரத்த பரிசோதனை செய்து பாருங்கள் என்று அங்கிருந்த மருத்துவர் கூறியுள்ளார். உடனே ஊருக்கு கிளம்பி வந்துவிட்டார். 

ரத்த தட்டணுக்கள் அதிகரிக்க பப்பாளி இலை சாறு முக்கியம்

அவரது தந்தை என்னிடம் அழைத்து வந்தார். அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. NS 1 ANTIGEN 64.76 இருந்தது. ரத்த தட்டணுக்கள் வெறும் 18,000 தான் இருந்தது.

3 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு, ரத்த தட்டணுக்கள் 80, 000 என உயர்ந்தது. ரத்த தட்டணுக்கள் குறையும் போது, டெங்கு காய்ச்சலில்  "Hemo concentration"  காரணமாக intravascular plasma leakage எற்பட்டு ,  hemoglobin மற்றும் PCV ( HEMATOCRIT ) அதிகரிக்கும்.

ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை நார்மல் ஆன பிறகு, ஹீமோகுளோபின் மற்றும் hematocrit இவ்விரண்டும் நார்மல் ஆகி விடும் . இவ்வளவு விரைவில் தட்டனுக்கள் உயர்ந்ததற்கு முக்கிய காரணம்,  ISOLYTE P, IV PARA, IV DOXY மட்டுமல்ல. தினமும் அவர் குடித்த பப்பாளி இலை சாறும் முக்கியமானதாகும்.

#denguefever #denguefevermedication #papayaleafextract 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments