உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் பயிற்சிகள்
நமது உடல் ஊட்டச்சத்தை கிரகித்து உடல் எடையை நிர்வகிப்பதற்கு வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உணவை ஆற்றலாக மாற்றவும் வளர்சிதை மாற்றம் முக்கியமாகும். வயதாகும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கலாம், மேலும் இது பல்வேறு மரபணு காரணிகளையும் சார்ந்துள்ளது.
வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும்போது, உடல் அதிக கலோரிகளை எரிக்க முடியாமல், கொழுப்பு சேமிக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. சில உணவு முறை மாற்றங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும்.
1. ஊறவைத்த பாதாம்
ஊறவைத்த பாதாம் பருப்புடன் உங்கள் நாளைத் தொடங்குவது வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கமளிக்கும். பாதாமில் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான மெக்னீசியம் உள்ளது. இது செயல்முறையை மேம்படுத்தும் லிபேஸ் உள்ளிட்ட பல்வேறு நொதிகளையும் வெளியிடுகிறது.
Must Read: சாப்பிட்ட உணவு தரம் குறைவா? வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்…
2. செப்பு பாத்திர நீர்
கொழுப்பை எரிக்க தாமிரம் உதவுகிறது என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. செப்பு நீர் செரிமான செயல்முறையை எளிதாக்கும், ஏனெனில் இது அதீத கொழுப்பை உடைக்க உதவுகிறது. அதிகாலையில் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த தண்ணீர் குடித்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
3. புரதம் நிறைந்த காலை உணவு
அதிக புரத உணவை உட்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்கலாம். புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது உணவின் வெப்ப விளைவு எனப்படும் செயல்முறை மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த பால், முட்டை, பன்னீர், சோயா, பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. கருப்பு மிளகு
பழக்கலவை, சூப்கள் மற்றும் கறிகளில் கருப்பு மிளகு சேர்க்கலாம், இது தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்ட நார்சத்தின் வழக்கமான அளவைப் நம் உடலுக்குத் தரும். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை புதுப்பிக்கும், மேலும் கலோரிகளை எரிக்க வழிவகுக்கும்.
5. சூடான தண்ணீர்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டால், இந்த முறையை மேற்கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், குளிர்ந்த நீரைக் குடிப்பதிலிருந்து சுடுநீருக்கு மாறுவது எடையைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டது. உணவுக்கு முன் 500 மில்லி தண்ணீரை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை 30 சதவீதம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
6. இலவங்கப்பட்டை
உங்கள் க்ரீன் டீயில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகரிக்க உதவும், இது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைட் எனப்படும் அத்தியாவசிய எண்ணெய் கொழுப்பை எரிக்க உதவும்.
7. உடல் உழைப்பு செயல்பாடு
வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். வாக்கிங், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளையும் தினமும் 3-4 மணிநேரம் மேற்கொள்ளுங்கள்.
Must Read: உடல் எடைகுறைப்பு உணவு முறையை பின்பற்றிய பெண் ஒருவரின் அனுபவ பகிர்வு…
8. ஏலக்காய் தேநீர்
மதிய உணவிற்குப் பிறகு ஏலக்காய் தேநீர் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி தொப்பையை குறைக்க உதவுகிறது.
9. உண்ணாவிரதம்
மருத்துவரின் அறிவுரைப்படி ஒரு நாள் உண்ணாமல் இருப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடைசி மற்றும் முதல் உணவுக்கு இடையில் 14-12 மணிநேரம் உண்ணாமல் இருக்கலாம். இது நச்சு நீக்க செயல்முறைக்கு உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பொறுப்புத்துறப்பு; மேற்குறிப்பிட்ட தகவல்கள் உடல்நல ஆரோக்கியத்துக்கான குறிப்புகள் மட்டுமே. இவற்றை பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டசத்து நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்வது முக்கியம்.
-ரமணி
#weightloss #weightlossfooddiet #dietforweightloss
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments