சாப்பிட்ட உணவு தரம் குறைவா? வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்…


நாமக்கல் பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கவிதா, அவரது மகள் உள்ளிட்டோர்் சாப்பிட்டுள்ளனர். 

வீட்டுக்கு திரும்பிய அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு நேரிட்டிருக்கிறது. முதலில்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், பின் அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகள் உயிரிழந்தார். 

Must Read: தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஷவர்மா, இறைச்சி உள்ளிட்ட உணவுகள் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு தரம் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்

இந்நிலையில், உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு ‘வாட்ஸ் அப்’ எண் வெளியிட்டுள்ளது. உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலமாகவும், 94440 42322 என்னும் 'வாட்ஸ் அப்' எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவகங்களுக்கு அரசின் சார்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி உணவு வணிகர்கள் உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை தாங்களாகவே சுய மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

இதற்கான சரிபார்ப்பு படிவங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்களிடம் தர வேண்டும். உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

#shawarma  #rottenmeat  #whatsappnumberforcomplaint #complaintofoodquality

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments