தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…


நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

என்ன நடந்தது?

நாமக்கல் பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் கடந்த 16 ஆம் தேதி இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேர்  ஷவர்மா மற்றும் சிக்கன் ரைஸ் உள்ளிட்ட துரித வகை உணவுகளை சாப்பிட்டனர். 

விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அதேபோல், சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கவிதா, அவரது மகள் கலையரசி,, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் அதே ஐவின்ஸ் உணவகத்தில் ஷவர்மா மற்றும் பிரியாணி ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். வீட்டுக்கு திரும்பிய அவர்களுகும் திடீரென உடல் நலக்குறைவு நேரிட்டிருக்கிறது. முதலில்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், பின் அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரணத்துக்கு பின்னர் ஆய்வு

இந்த சம்பவத்தை அடுத்து சம்பத்தப்பட்ட ஐவின்ஸ் உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி வகைகள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

கெட்டுப்பான இறைச்சியில் செய்த ஷவர்மா

கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா  சாப்பிட்டு இறந்து போன சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், உணவக உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டி யைச் சேர்ந்த நவீன்குமார், சமையல்காரர்கள் சஞ்சய் மகாகுர்  தபாஷ்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு நடந்த சம்பவம்

கொஞ்சமும் தொழில் அறமற்று, கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரித்து கொடுத்து ஒரு சிறுமியின் உயிர் பறிபோவதற்கு ஐவின்ஸ் உணவகத்தின் உரிமையாளர் காரணம் ஆகிவிட்டார் என்பது உண்மை.ஒரு ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இதே போல கெட்டுப்போன இறைச்சியால் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்தார். அப்போது தமிழ்நாட்டிலும் உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

ஆனால், இந்த சோதனை தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை. இதுபோன்ற இறப்புகள் நடந்தாலோ அல்லது யாராவது பாதிக்கப்பட்டால் மட்டுமே சோதனைகள் நடைபெறுகின்றன. அப்படியில்லாமல் குறிப்பிட்டகால இடைவெளியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு உணவின் தரத்தை  அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 

கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டு இளம் பெண் உயிரிழந்த செய்தி குறித்து கருத்துத் தெரிவித்திருந்த சிவகங்கை பொதுநல மருத்துவர் திரு அ.ப. ஃபரூக் அப்துல்லா எழுதிய கட்டுரையை ஷவர்மா ஏன் விஷமாகிறது? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையை இந்த இணைப்பில் கிளிக் செய்து படிக்கலாம். 

-ரமணி

#shawarma  #rottenmeat #foodpoison #Namakkal

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments