தண்ணீர் தாகத்துக்கானது… லாபத்துக்கானது அல்ல!


சூழல் எழுத்தாளர் திரு.நக்கீரன் அவர்கள் உயிரைக் குடிக்கும் புட்டி நீர் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 48 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய புத்தகத்தில் நம் வாழ்வில் புழக்கத்துக்கு வந்திருக்கும் தண்ணீர் பாட்டில் குறித்தும், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை குடிப்பதால் நேரிடும் அபாயமும் எடுத்துக்கூறப்பட்டிருக்கிறது. 

இந்த புத்தகம் குறித்து திரு.கே.செளந்தரராஜன் ராஜேஸ் அவர்கள் விரிவான விமர்சனத்தை வழங்கி உள்ளார். அவரது விமர்சனத்தை இங்கே முழுமையாக வழங்குகின்றோம். 

அறிவியல் உண்மை 

உயிரைக் குடிக்கும் புட்டி நீர். இந்த புத்தகம் படிப்பதற்கு முன்பு வரை பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் தான் தூய்மையானது அதன் வெண்மைநிறமும் தூய்மைப்படுத்துவதற்கான செலவினங்கள்  பாட்டில் உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை தான் நீர் விற்பனை செய்யப்படுவதற்கு அடிப்படை காரணம் என்றிருந்தேன். அது முற்றிலும் தவறு என்பதை இந்நூல் வாசித்த பிறகு தெரிந்து கொண்டேன்.

Must Read: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை நிலவரம் என்ன தெரியுமா?

புட்டி நீர் என்பது நீர் சந்தைக்கானது, அது லாப நோக்கத்துக்கானது.  பணத்திற்கான பண்டமாக நீர் மாற்றப்பட்டுள்ளது என்பதை  அறிய முடிகிறது. புட்டி நீர் என்பது குழாய்களின் மூலம் பெறப்படும் நீரிலிருந்து புட்டிகளில் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது இந்த நூல்.

இறுக மூடிவைக்கப்பட்ட நீரைவிட திறந்த நிலையில் உள்ள நீரில் ஆக்சிஜனேற்றம் எளிதில் நடைபெறும் அதனால் நீரில் கலந்துள்ள நச்சுப் பொருட்களின் வீரியம் குறையும் இந்த அறிவியல் உண்மையை  நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தண்ணீர் புட்டி பாட்டில்கள்

சுவையூட்டிகள் கலப்பு

அனைத்து புட்டிநீர் நிறுவனங்களும் 'தூய்மை' (pure)என்ற சொல்லை தன் விளம்பரங்களில் மறவாமல் பயன்படுத்தினர். இது பொது குழாய் நீர் என்பது தூய்மையற்றது. என்ற கருத்தாக்கத்தை மறைமுகமாக மக்கள் மனதில் பதிய வைக்க உதவின.

ஐக்கிய அமெரிக்காவின் 40 சதவீதம் புட்டி நீரானது பொது குழாயில் இருந்தே பெறப்படுகின்றன. பொதுக் குழாய் நீர் பாதுகாப்பற்றது என்றால் புட்டி நீர் நிறுவனங்கள் ஏன் அவற்றை தம் புட்டியில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்.

Must Read: பற்றாக்குறை பருவமழை, அதிகரிக்கும் எல்.நினோ விளைவு.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?

புட்டி நீர் விளம்பரங்களில் அதன் நீர் தூய்மையான பனிபாளங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை தரும் ஆனால் அது உண்மையில் பொதுக்குழாயிலிருந்து  பெறப்படுகிறது. புட்டி நீர் நிறுவனங்களின் மாபெரும் பொய்க்கு எடுத்துக்காட்டு மனிதரால் தொடப்படாத ஆதிகால மலைக்காடுகளில் அமைந்துள்ள நீர் தேக்கத்தின் நீரூற்றிலிருந்து பெறப்படுகிறது என்ற பிரச்சாரம்.

நீரின் சுவை என்பது மண்ணில் கலந்துள்ள தாதுக்களுக்கு ஏற்ப மாறுபடும் ஆனால் சில நிறுவனங்கள் புட்டிநீர் குறிப்பாக ஆக்வாஃபினா கின்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் புட்டி நீரில் மட்டும் ஒரே சுவை ஒரே மாதிரியாக இருக்கும். அதற்கு அதில் கலக்கப்படும் ஒரு வகை சுவையூட்டியே காரணம்.

குடிநீர் நமது அடிப்படை உரிமை 

ஒரு லிட்டர் அளவுள்ள நெகிழி புட்டியை உருவாக்க 162 கிராம் பெட்ரோலியம் தேவை. இதிலிருந்து வெளியாகும் கரிக்காற்றின் அளவு 100 கிராம் அதை 10 பலூன்களில் அடைக்கலாம்.

புட்டி நீர் எனும் அரசியல்

புட்டி நீர் பயன்பாடு பணக்கார பயன்பாட்டில் அடையாளமாகவே தொடங்கியது பின்னர் நுகர்வு பண்பாடு படிப்படியாக அனைவரையும் தன் அடிமைகளாக மாற்றி விட்டது. இப்போது வர்க்க வேறுபாடுகள் இன்றி குழந்தைகள் பால்புட்டியை தூக்கி எறிவது போல் அனைவருமே புட்டிநீருடன் அழைக்கின்றனர்.

தமிழக அரசு விற்பனை செய்து வந்த அம்மா குடிநீர் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று நம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்திய அரசியலமைப்பு சட்டம் தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமை என்பது தூய்மையான குடிநீரையும் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை எளிதாக மறந்து விட்டனர்.

நீர் நமது அடிப்படை உரிமை அதை விலைக்கு வாங்க கூடாது என்கிற எண்ணம் முதலில் நமக்கு வர வேண்டும் அயல்நாடுகளில் இந்த எண்ணம் எப்போது அரும்பி மலர்ந்து விட்டது நாம் முதலில் செய்ய வேண்டியது இனி புட்டி நீரை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதே.

மினரல் வாட்டர் அல்ல 

உலக தண்ணீர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது உலகின் பல பகுதியில் உள்ள அரசுகள் பாதுகாப்பான குடிநீர் வழங்க தவறியதே தனியார் நிறுவனங்களுக்கு வணிகத்துக்கான கதவை திறந்து விட்டது.

பைசா செலவின்றி பாதுகாப்பான குடிநீர் தாமே தயாரித்துக் கொள்ள வழி உள்ளது அதுவும் முழுக்கவும் அறிவியல் பூர்வமான வழிமுறை (solar Disinfection) இப்படி ஒரு வழிமுறை இருந்தும் ஏன் எந்த அரசும் இதில் முனைப்பு காட்டுவதில்லை என்பது வியப்பே.

பொய் சொல்வதில் புட்டி நீர் நிறுவனங்கள் மிகவும் திறமையானவை முதன் முதலில் புட்டி நீர் விற்பனை தொடங்கிய போது அதை தாது நீர் (மினரல் வாட்டர்) என்றே விற்பனை செய்தனர் பிறகு ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதை சிப்பமிடப்பட்ட குடிநீர்(package drinking water)  என்று மாற்றினர். இருந்தும் பழைய சொல் மறையவில்லை இன்றும் மக்கள் மினரல் வாட்டர் என்று தான் சொல்கின்றனர் புட்டி நீர் நிறுவனங்களுக்கு இதுவே வெற்றிதான்.

புட்டி நீர் குடிப்பவர்களை கண்டால் பரிதாபமாக உள்ளது. காசு கொடுத்து வாங்கும் பொருள் தரமானதாக இருக்கும் என்று பொது புத்திக்கு இறையான அப்பாவிகள் அவர்கள்.தண்ணீர் தாகத்துகானது லாபத்துக்கானது அல்ல.

K.சௌந்தர்

#waterbottle #waterbusiness #drinkingwater  #pakegewater #unhealthywater

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments